வெட்டித்துவம்

ஆரம்பமே வசவுடன் ஆரம்பிச்சு இருக்கார் நம்ம ராஜாவனஜ்

எனது முந்தைய பதிவில் பு.ஜ கட்டுரையை விமர்சித்து போகாத ஊருக்கு வழி
என்பதை சொல்லி இருந்தேன் நண்பர் அதற்கு பதிலாக ஒரு பெரிய புண்ணூட்டம்
போட்டு இருந்தார் அதற்கு பதில் கீழே :
------------------------------------------------------------------------------
//போலித்தனம் – மழுங்கத்தனம் – மொண்ணைத்தனம் – For Dummies….!

ஒன்றைப் புரிந்து கொள்வதில் இருக்கும் மொண்ணைத்தனம் எப்படி சிந்தனையில் மழுங்கத்தனத்தை ஏற்படுத்தி, செயலில் போலித்தனத்தை உண்டாக்குகிறது என்பதை எனக்குப் புரிந்த அளவில் விளக்கவே இந்த பின்னூட்டம். முதலில் ஜவுளித் தொழில் நெருக்கடி பற்றி வினவில் வெளியான பு.ஜ கட்டுரையை படித்திருப்பீர்கள் – அடுத்து அதை தனது பாணியில் ‘விமர்சித்து’
நன்பர் தியாகு எழுதியதையும் ஒருமுறை பார்த்து விடுங்கள் (கொஞ்சம் கஸ்ட்டம் தான்… லேசா வாந்தி வரும், மயக்கம் வரலாம், தலை சுத்தும்… ஆனாலும் பரவாயில்லை மூக்கைப்
பிடித்துக் கொண்டு படித்து விடுங்கள் )

வினவு பதிவில் “விவசாயிகள் பஞ்சை ஏற்றுமதி செய்வதை தடுக்க கூடாதென்றும் எழுதப்பட்டு உள்ளது” என்று நன்பர் தியாகு சொல்கிறார்.

நான் எழுதியது :

//முதலில் பஞ்சுக்கான அரசு நிர்ணயிக்கும் விலை அடுத்து பஞ்சு ஏற்றுமதி அடுத்து அதன் உற்பத்தி பொருளான நூல் ஏற்றுமதி இந்த இரண்டு கச்சா பொருள்களின் ஏற்றுமதியானது சர்வதேச சந்தையில் இந்திய ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியை
பெரிதும் பாதிக்கிறது என்கிற விசயமாகும் இதற்கு இந்த விசயத்தை அனுகிய நமது
பு.ஜா பத்திரிக்கை சொல்வது என்னவென்றால் ஆயத்தை ஆடைகள் அதன் சூழல் அது கோரும் பஞ்சு ஏற்றுமதி தடை எல்லாமேதிருப்பூரில் உள்ள முதலாளிகளின் கோரிக்கையாகவும் ஆன்லைன் டிரேடிங்க் மூலம் விலை ஏறிய அனைத்து பொருட்களுக்குள்ளும் பஞ்சு இருப்பது ஏதோ தற்செயலானது மற்றும் தவிர்க்க முடியாதது போலவும்

விவசாயிகள் பஞ்சை ஏற்றுமதி செய்வதை தடுக்க கூடாதென்றும் எழுதப்பட்டு உள்ளது சரி பஞ்சை ஏற்றுமதி செய்வதை தடுக்க கூடாது மற்றும் நூல் ஏற்றுமதியை தடுக்க வேண்டாம் என்பதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்

ஆனால் பு.ஜ கட்டுரையில் எங்கும் அப்படிக்
குறிப்பிடவில்லை. மாறாக, பருத்தி ஏற்றுமதியைத் தடுக்கக் கோரும் முதலாளிகள், அதற்குக் காரணமாகச் சொல்வது உள்நாட்டுத் தேவை புறக்கணிக்கப்படுகிறது என்பதே. அப்படி
இவர்கள் சொல்லும் உள்நாட்டுத் தேவை என்பது, உள்நாட்டில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதையே – உள்நாட்டு ஜவுளித் தேவைக்கான உற்பத்தியை அல்ல. //

எனது பதில்:

உள்நாட்டின் ஜவுளி தேவைக்கான உற்பத்தி திருப்பூரில் நடக்கவில்லை என அனைவருக்கும் தெரியும் ஆனால் உள்நாட்டு தேவைக்கும் 40 சதவீதம் நடக்கிறது என்பது ராஜாவனஜ் அறிவாரா தெரியாது உள்ளாடைகள் இந்தியா முழுவதற்கும் இந்தியாவில் முக்கியமாகதிருப்பூரில் தான் தயாரிக்கப்படுகிறது அது புஜ கட்டுரை எழுதிய தோழர் போட்டிருக்கும் ஜட்டி உட்பட இதில் எப்படி உள்நாட்டு உற்பத்தியே இல்லைன்னு சொல்கிறார்னு தெரியலை

//இன்றைய உலகமயச் சூழலில் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் என்பது மேல் நிலை வல்லரசுகளின் / முதலாளித்துவ நாடுகளின் நுகர்வை அடிப்படையாகக் கொண்ட ஏற்றுமதிப் பொருளாதாரமாக உள்ளது – குறிப்பாக அமெரிக்கா எனும் ஒற்றை எஞ்சினில் இணைக்கப்பட்ட பெட்டிகளாக இருக்கிறது. தமது உள்நாட்டு சந்தையின் தேவையை ஊக்குவிப்பதாக இல்லை.//

அதிலிருந்து தாவி அடுத்த கட்டமாக ஏற்றுமதி உற்பத்திதான் நடக்குதுன்னு சொல்வதன் மூலம் இந்த பிரச்சனையே ஏற்றுமதி தொடர் பெட்டி அமெரிக்காவுக்கு உற்பத்தி செய்தல் என நகர்ந்து செல்கிறார் அப்படி அல்ல ஏற்றுமதிக்கும் உள்நாட்டு தேவைக்கும் சேர்த்தே உற்பத்தி செய்யப்படுகிறது நிற்க

ஏற்றுமதி சார்ந்த முன்னேறிய நாடுகள் சார்ந்த உற்பத்தி என நினைத்துகொண்டு இந்த விசயத்தை அனுகி ஒரு தீர்வு சொல்லி முரண்பட்டு போகிறார்கள் இருவரும் (மனியும் ,ராஜாவும்)

பிரச்சனை கச்சாபொருள் ஏற்றுமதி, கச்சா பொருளை சார்ந்த உள்நாட்டு உற்பத்தி சம்பந்தப்பட்டது .

உழுந்தில் தயாரிக்கபப்டும் அப்பளம் அதன் தயாரிப்புகள் கூட வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது இதில் உழுந்து ஏற்றுமதி என வந்தால் அப்பள தொழில் படுத்துவிடும் அல்லது தேவையை கணக்கில் எடுக்காத ஏற்றுமதி என்பது உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கும் .

ஆக பிரச்சனையை கச்சாபொருள் , அதை சார்ந்த உற்பத்தி என விசயத்தை பார்க்கவேண்டும் என கோருகிறேன்

அப்படி பார்த்தால் மட்டுமே எந்த ஒரு கச்சா பொருள் ஏற்றுமதியும் நேரடியாக அந்த நாட்டில் நடக்கும் தொழிலை பாதிக்கும் என்பதை அவதானிக்க முடியும

//இதில், “பஞ்சு ஏற்றுமதியை நிறுத்து” எனும் கோரிக்கை முதலாளிகள் சார்பில் இருந்து வரும் போது அவர்களின் அந்தக் கோரிக்கை உள்நாட்டு ஜவுளித் தேவையை கருத்தில்
கொண்டோ விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டோ எழுவதல்ல. இது கட்டுரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது -

// இப்போது முன்பேர வணிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் நூற்பாலை முதலாளிகளும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களும், விதர்பா பருத்தி விவசாயிகள் கோருவதைப் போல பருத்திக்கான ஆதரவு விலையை 4,500 ரூபாயாக உயர்த்துவதை ஏற்றுக் கொள்வார்களா? //

பஞ்சு ஏற்றுமதியை நிறுத்து எனும் கோரிக்கை எழவில்லை ஏற்றுமதியை கட்டுபடுத்து மூன்றுமாதத்துக்கு ஒருமுறை அடுத்த பருவம் வரை நிறுத்தியும் உள்நாட்டு உற்பத்தி போக மிச்சமானதை ஏற்றுமதி செய்யவும்தான் கோருகிறோம்

விவசாயிக்கு ஆதாரவிலையை கூட்டினால்
ஏற்றுகொள்ளமாட்டோம் என முதலாளிகள் எங்காவது சொல்லி இருக்கிறார்களா
அப்படி ஏற்றினால் கூட அதன் பாதிப்பு
இந்தளவு கடுமையாக இருக்காது என்பது நிஜம்


//நம் மக்கள் தொகையில் 80 கோடிப் பேருடைய ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய். இந்த மக்களால் ஆண்டுக்கு 4 செட் வேட்டி, சேலை, கால்சட்டை, மேல்சட்டை, உள்ளாடைகள் வாங்க முடியுமானால், இந்தியாவின் சந்தை இவர்கள் தேடித் தவமிருக்கும் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆனால், ஜவுளி ஆலை முதலாளிகள் உள்நாட்டு உழைப்பாளி மக்களின் நுகர்வைப் பற்றிக் கவலைப்படவில்லை. //


//பு.ஜ கட்டுரை ஏற்றுமதியை ஆதரிக்கவில்லை – ஆனால், எதிர்ப்பு எழுவதன் பின்னுள்ள முதலாளிகளின் சுயநலனை இடித்துரைக்கிறது. உள்நாட்டு ஜவுளித் தேவையை உந்தித் தள்ளுவதன்
மூலம் ஏற்றுமதியைச் சாராத தொழில் வளர்ச்சியை சாதிக்க முடியும் என்பதை நேர்மறையில் நிறுவுகிறது. //

ஏற்றுமதி சாராத தொழிலும் கச்சா பொருள்
ஏற்றுமதியில் விழுந்து விடும் என்பதை
அறிய முடியவில்லையா ?
எதிர்ப்பு எழுவதன் பின்னால் முதலாளிகளின் சுயநலன் மட்டுமே இருக்கு என கருதுவதை அரைவேக்காட்டு பார்வை என்கிறேன்


//அதே நேரத்தில், விவசாயிகளுக்கு இந்த முன்பேர சூதாட்டத்தால் / ஏற்றுமதியால் பயன் ஏதும் இல்லை என்பதையும் பதிவு செய்கிறது – அது கீழே,

//எடுத்துக்காட்டாக, சங்கர்-6 என்ற பருத்தி வகைக்கு அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,850. பெரும்பாலான விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலை இதுதான். ஆனால், அதன் சந்தை விலையோ இன்று 4,500 ரூபாயைத் தாண்டி விட்டது. எனினும் கொள்முதல் விலையை உயர்த்த மறுக்கும் அரசு, பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காகத்தான் பஞ்சு ஏற்றுமதியை அனுமதித்திருப்பதைப் போல நடிக்கின்றது. //

தேசியமுதலாளிகளின் நலனும் (உள்நாட்டுச் சந்தை) விவசாயிகளின் நலனும் (உரிய விலை) இணைந்திருக்க வேண்டும் என்பதே கட்டுரை எதிர்மறையில் ஏற்படுத்தும் மனப்பதிவு.//

ஏற்றுமதியும் உள்நாட்டு நலனும் இணைய என்ன செய்யவேண்டும் கட்டுபடுத்தப்பட்ட ஏற்றுமதி கொள்கை வேண்டும் அது கச்சா பொருளை பொருத்தவரையிலும் அதிகமாக

மேலும் பனியனை பொருத்தவரை அயல்நாட்டு ஆடை ரகங்கள் இந்தியாவில் விலை போவதில்லை இங்கு அதிகம் உள்ளாடைகள்தான் அதையும் திருப்பூர்தான் வழங்கிறது


//உள்நாட்டு தேவையை அதிகரிக்க வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் – அதற்கு நாட்டில் மிக அதிகளவில் வேலைவாய்ப்பைத் தரும் விவசாயத் துறை லாபகரமாக நடந்தாக வேண்டும் –
அதற்கு விவசாயிக்கு உரிய விலை கிடைத்தாக வேண்டும். இதற்கு ஒப்புக் கொள்ளாத முதலாளிகள், தமது சுயலாப நோக்கை மட்டும் குறிவைத்து ஏற்றுமதியை தடுக்கச் சொல்கிறார்கள்.

முன்பேர வர்த்தகத்தாலும் விவசாயிக்கு பாதிப்பு தான் – உள்நாட்டிலும் லாபம் கிடைக்காது என்று இரண்டு பக்கமும் இடிவாங்கும் மத்தளமாக விவசாயிகள் இருக்கிறார்கள்.

அடுத்து ஒரு அட்டைக் கத்தியை எடுத்து சுழற்றுகிறார் தியாகு,

இந்த விசயத்தில் ஒரு உண்மையை ஒத்து கொள்கிறேன் பஞ்சு விலை குறைந்தால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி நடந்து இருக்கிறது என்பது சரியே

அதையே ஆதாரமாக முதலாளிகளின்
ஏற்றுமதி பற்றிய கோரிக்கைகளுக்கு பதிலாக அளிக்க முடியாது

பஞ்சை இறக்குமதி செய்யும் நிறுவனங்களும் பஞ்சுக்கான போலிதட்டுபாட்டை உருவாக்குவதை கவனத்தில் கொள்ளாவேண்டும்


---------------------------------------

உள்நாட்டு தேவை உள்நாட்டு நுகர்வைத்தான் ஆடம்பரமாக முன்வைக்கிறார்
எனில்

ஏற்றுமதியும் இறக்குமதியும் தவிர்க்கமுடியாத இன்றைய சூழலில் இருந்து பிந்தங்கி
இருக்கிறது இவர்களது சிந்தனை

--------------------------------------------
சாராம்சமாக:

1.ஏற்றுமதி - அந்நிய ஏகாதிபத்தியத்தை நம்பி இருக்கிறது
அதற்கு வால்பிடிக்கிறது என சொல்லி
நேரா உள்நாட்டின் தேவைக்கு உற்பத்தி செய்யுங்கள்
என புஜ கட்டுரையில் சொல்லாமல் விட்டதை
சொல்லி பூர்த்தி செய்கிறார் ராஜா

ஆனால் ஏற்றுமதி என்பது அதை சார்ந்த வணிகம் என்பதும் மட்டுமல்ல
உள்நாட்டின் வணிகத்துக்கே கச்சா பொருள் கட்டுள் இல்லாத ஏற்றுமதியும்
ஆன்லைன் சூதாட்டமும் எதிரிகள் என்பதை காணாமல் விடுகிறார்

2.இனிமேல் ஏற்றுமதி சாராத புறாகூடுபோல தனியான ஒரு நாட்டை கட்டமைக்க
சோசலிச அல்லது புதியஜனநாயக நாட்டால் கூட முடியாது அப்போது சரியான
ஏற்றுமதி கொள்கை வகுக்க வேண்டும்

3.விவசாயிக்கும் அறிவுரை சொல்கிறேன் ஏற்றுமதி பத்தி முதலாளியையும் கேள்விகேட்கிறேன் லாபநோக்கம் பத்தின்னு சொல்லிட்டு முடிவா இதன் அடிப்படைகாரணம் அதற்கான தீர்வுன்னு கேட்டால் முழி முழின்னு முழிக்கிறார்கள்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post