பிரம்மச்சரியத்தின் கடைசி காலம்


சேவை சேவை என்கிற ஆர்வம் பொங்க அவரை சந்தித்த போதெல்லாம் கேட்பேன் நான் யாருக்காவது சேவை செய்யனும்
உடல் நலமில்லாதவர்களுக்கு ..

தியாகு நீங்கள் இவருக்கு சேவை செய்துபார் என்றார் அந்த சாமி தி.நகரில் இருந்து மைலாப்பூருக்கு சென்று அந்த நபரை பார்க்கும் போது சாமிக்கு வேர்த்து விட்டது இப்படி ஒரு நோய் வந்தால் நான் கூட என்ன செய்ய போகிறேன் என்று

அந்த நபருக்கு muscular Dystrophy என்ற தசைச் சிதைவு நோய், உடலின் ஒரு பகுதி அல்ல உடல் முழுக்க செயல் இழந்தவர் அவர் .

எனக்கு முன்பே ஒரு கேரள பையன் சேவைக்கு இருந்தான் அவனது வேலை அவரை காலை கடன் கழிக்க வைத்து
சாப்பாடு ஊட்டி நாள்முழுவதும் பார்த்து கொள்வது .

இதுவல்ல விசயம் இவரும் பிரம்மச்சரியமும் கடசிவரை அவர் நம்பி கடவுளும் தான் .

தினமும் நாலுதடவை அவர் நம்பிக்கைகொண்டு நாளும் பூசை செய்த ராமகிருஸ்ணரை திட்டுவார் .

காமத்தை கடந்துவிடேன் என சொன்னவர் காமத்தினாலும் ஒரு மனைவி இல்லாமையாலும் இதுவரையும் அவர் படித்து மறைத்து வைத்த அபிலாசைகள் தலைவிரித்தாட கைவிடபட்ட நிலமைக்குள்ளானார் .


ஏன் வாழ்ந்தோம் எனும் நினைப்பும் இத்தனை நாள் வரை நம்பிய கொள்கை கடவுளின் மேலும் கருத்தின் மேலும் பயங்கர வெறுப்பை அவருக்கு தோற்றுவித்தது . 

நீங்கள் அவரை பக்குவமற்றவர் என சொல்லலாம் ஆனால் அருகில் இருந்து பார்த்தீர்கள் என்றால் அவர் பேசும் வேதாந்தம் அவர் நடந்துகொண்ட விதம்  அப்படி நினைக்க தோணாது .

பிரம்மச்சரியமோ வேறொன்றோ ஏன் புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டதாக அமைத்துகனும்.

முடியாத ஒரு விசயத்தை அதன் எல்லை அறிந்து கைவிடலாம் என்பதே எனது கருத்து .

துறவு போன்ற விசயங்களை வெறும் நம்பிக்கை அடிப்படையில் கடைபிடிக்க கூடாதெனும் முடிவு ஏற்பட்ட உடனேயே கல்கத்தாவுக்கு எடுத்த டிக்கெட்டை கிழித்து  போட்டேன் நன்றி மேற்சொன்ன இந்த நபருக்கு .

சில சாமியார்களையும் பாத்தேன் இப்படித்தான் இருக்கிறார்கள் .

வேலைக்காரியை கையை பிடித்து இழுத்த ஒரு சாமி நல்ல பிரசங்கம் மட்டும் செய்வார் .

நான்குவேளை உணவும் பாலும் மோரும் நெய்யும் இந்த சாமிகளை பிரம்மசர்யத்தின் எதிரிகளாக்கிவிடுகிறது .

தைரியம் இருந்தால் ஒரு கோமணத்துடனும்  ஒரு தட்டுடனும் கிளம்பனும் துறவுக்கு





--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post