திருமங்கலம் சாமியும் பிரமச்சரியமும்

திருமங்கலம் சாமியும் பிரமச்சரியமும்

அந்த சாமி அந்த மடத்துக்கு வந்து எனக்கு தெரிந்து ஒரு ஆறு வருடம் இருக்கும் அதிகம் பேசமாட்டார் காவி வாங்கிகலின்னாலும் அவரை சாமின்னு அழைக்கும் படிதான் நடந்துக்குவார்

என்னை பார்க்கும் போதெல்லாம் ஆழ்ந்து நோக்கி அவர் சொல்வது "தியாகு இந்த வயசில் இருந்தே பிரம்மசரியம் கடைபிடிங்க  சீக்கிரம் தியானம் வந்துடும் "
சுவாமி சித்பவானந்தரின் பிரம்மச்சரியம் புத்தகத்தை நன்கு படியுங்கள் என்பதுதான்.
(விந்துவை அடக்குதல் (பிரம்மசரியம்)பற்றி அதிகம் பேசும் புத்தகம் அது)


காலைமுதல் மாலைவரை மெளனித்து இருக்கும் சாமி இரவானால் பயங்கர சிரிப்புடன் பேசத்தொடங்கிவிடுவார் அந்த விசயத்தில் அந்தளவு சிரிப்பை யாரும் கற்பனை செய்ய முடியாது சரி என சிரித்து வைப்பேன் .

இரண்டு வருடம் படிக்க சென்னைக்கு வந்துவிட்டேன் பிறகு ஒரு நாள் மடத்துக்கு சென்ற போது திருமங்கலம் சாமியை ஒரு ஆள் வந்து அடித்து அவர் போட்டிருந்த மாலையை அத்துவிட்டதாக சொன்னார் நண்பர் .

ஏனென வினவ "அவர் முதல்வகுப்பில் படித்தானாம் தினமும் டியூசன் சொல்லி தரும் திரு.சாமி ஒரு நாள் அந்த பையனின் பின்புறமாக முயற்சிக்க அவன் அவனது தந்தையிடம் சொன்னதும் விழுந்தது அடி"

அதன் பிறகு நான் திரு, சாமியை பார்க்கவே இல்லை .

பிரம்மச்சரியம் புத்தகம் இன்னும் வீட்டில் இருக்கிறது

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post