புதிய ஜனநாயகமும் திருப்பூர் தொழிலும்

புதிய ஜனநாயகம் புத்தகத்தில் வாசகர் கடிதம் பிரசுரிக்கப்படுவதில்லை மேலும் அதன் இணைய பகுதியான வினவிலும் சரியானபடி பதிலளிக்கவில்லை இந்த "ஜவுளித்தொழில் " பற்றிய அவர்களது கட்டுரை சில கேள்விகளை
எழுப்பத் தூண்டியது .


முதலில் பஞ்சுக்கான அரசு நிர்ணயிக்கும் விலை  அடுத்து பஞ்சு ஏற்றுமதி அடுத்து அதன் உற்பத்தி பொருளான நூல் ஏற்றுமதி  இந்த இரண்டு கச்சா பொருள்களின் ஏற்றுமதியானது சர்வதேச சந்தையில்  இந்திய ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியை
பெரிதும் பாதிக்கிறது என்கிற விசயமாகும்  இதற்கு இந்த விசயத்தை அனுகிய நமது
பு.ஜா பத்திரிக்கை சொல்வது என்னவென்றால் ஆயத்தை ஆடைகள் அதன் சூழல் அது கோரும் பஞ்சு ஏற்றுமதி தடை எல்லாமேதிருப்பூரில் உள்ள முதலாளிகளின் கோரிக்கையாகவும்  ஆன்லைன் டிரேடிங்க் மூலம் விலை ஏறிய அனைத்து பொருட்களுக்குள்ளும் பஞ்சு இருப்பது ஏதோ தற்செயலானது மற்றும் தவிர்க்க முடியாதது போலவும்

விவசாயிகள் பஞ்சை ஏற்றுமதி செய்வதை தடுக்க கூடாதென்றும் எழுதப்பட்டு உள்ளது  சரி பஞ்சை ஏற்றுமதி செய்வதை தடுக்க கூடாது மற்றும் நூல் ஏற்றுமதியை தடுக்க வேண்டாம் என்பதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்

மறுகாலனியாதிக்கத்தின் விளைவுதானே அனைத்து கச்சா பொருட்களையும் தங்குதடையின்றி ஏற்றுமதி செய்வது என்ற கேள்வியில் இருந்து நழுவி  பஞ்சு ஏற்றுமதி சரிதான் ஆனால் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்காக பஞ்சு ஏற்றுமதியை தடைவிதிக்க கூடாது என்கிறார்கள்

சரி என்ன தீர்வு என்றால் வசைகளில் இறங்கும் இவர்கள்

மறுகாலனியாதிக்கம் இருபக்கம் வீசும் கத்தி இதே நூல் பன்னாட்டு சந்தைய்டில் விலை குறைந்தால் முதலாளிகள் இறக்குமதி
செய்து கொள்கிறார்கள் என புளுகுகிறார்கள் இறக்குமதி செய்யும் காசுக்கும் நாம் கூடுதல் விலை கொடுத்தே இங்கேயே நூலை வாங்கிவிடலாம்  சரி எத்தனை சதவீதம் அவ்வாறு இறக்குமதி நடந்தது ஏதேனும் தரவுகள் இருக்கா என கேட்டாலும் பதில் இல்லை

உற்பத்தி, ஏற்றுமதி சார்ந்த பிரச்சனை என்பது முதலாளிகள் பிரச்சனை போலவும் தொழிலாளர்கள் விவசாயிகளோடு
கூட்டு சேரனும் என்றும் ஆகாத கோரிக்கையை முன்வைக்கிறார்கள் இங்கென்ன புரட்சியா நடந்து கொண்டு இருக்கிறது விவசாயிகளின் பிரச்சனைக்கு தொழிலாளர் களமிரங்க

எந்த பொருளுக்கும் மார்கெட் விலையை கொடுப்பதில்லை அரசு நாளை பனியன் உற்பத்தியை இந்தியாவில் விற்று அதை
அரசு வாங்குவதாக இருந்தாலும் இதே நிலமைதான்

அதற்குத்தான்  அனைத்து கச்சா பொருட்களையும்  ஏற்றுமதிக்கும் அனுமதிக்க கூடாது என்கிறோம்  முதலாளிகளின் கோரிக்கை அல்ல அது தொழிலாளர்களின் கோரிக்கையும்தான்

இங்குள்ள பத்துலட்சம் தொழிலாளர்களின்  வாழ்க்கையை கேள்விக்குள்ளாகும்  இந்த நூல் ஏற்றுமதிக்கு எதிராக நிற்காமல் நூல் ஏற்றுமதிக்கும் ஆதரவாகவும் தொழிலுக்கும்விரோதமாகவும் குரல் கொடுக்கும் இவர்கள்

கூறும் கடைசி பதில் மறுகாலனியாதிக்கம் என்பதே(இரண்டு பக்கமும் வெட்டும் கத்தி)

பஞ்சுக்கு நியாயமான விலை கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு  விவசாடிகள் போராட வேண்டும்

இந்திய தேவைக்கு போகவே மீதமுள்ளதை ஏற்றுமதி செய்ய வேண்டும் நூல் ஏற்றுமதிக்கு எதிராக தொழிலாளர்கள்
போராட வேண்டும்   இதன் மூலம் மட்டுமே இலட்சகணக்கான்  தொழிலாளர்களின் வாழ்வாதரம் காக்கப்படும்






--------------------------------


//தங்களுடைய நலனை மக்களின் நலனாகச் சித்தரிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு மக்கள் தேவைப்படுகிறார்கள். விசைத்தறி நெசவாளர்களையும், ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களையும் கொத்தடிமையாக்கி, 12 மணி நேரத்திற்கும் மேல் கடுமையாகச் சுரண்டும் இந்தக் காருண்யவான்கள் பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தாவிட்டால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையிழப்பும், தற்கொலைகளும் நிகழும் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். //

அவர்களுடைய நலன்களுடன் தொழிலாளர்களின் நலன்களை நீங்கள் வேலை நேரத்தின் அடிப்படையில் பிரித்து பார்ப்பீர்கள் என்றால் எட்டுமணி நேரம் மட்டுமே வேலை என சொல்லும் முதலாளிகள்தான் புறக்கணிக்கப்படுவார்கள்

தொழிலாளர்கள் வேலை இழப்பு கண்டிப்பா நிகழும் இம்மதிரி கச்சா பொருள் ஏற்றுமதி
அனுமதிக்கப்பட்டால்

//முதலாளி வர்க்கத்தின் இந்த மோசடியை அம்பலப்படுத்தாமல், தொழிலாளி வர்க்கத்தை நிபந்தனையின்றி முதலாளிகளின் பின்னே அணிவகுத்து நிற்க வைக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.//

முதலாளி வர்க்கத்தின் மோசடி என்பது ஏற்றுமதிக்கான தடை கோருவதல்ல என்ற அடிப்ப்டையில் தொழிலாளர்கள் திரட்டபட்டார்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றது . ஏன் நிபந்தனையின் பேரில் நூல் ஏற்றுமதி செய்யலாமே அதை குறித்து
ஏன் நீங்கள் வாயை திறப்பதில்லை

/விளைவு, “ஆடை ஏற்றுமதிதான் உங்களுக்கு வேலையைக் கொடுக்கும்” என்று கூறும் ஜவுளி ஆலை முதலாளிகளின் மோசடியில் தொழிலாளர்களும், விசைத்தறி நெசவாளர்களும் மயங்குகிறார்கள். பருத்தி ஏற்றுமதிதான் உங்கள் பஞ்சத்தைப் போக்கும் என்று கூறும் அரசின் சூதுக்கு விவசாயிகள் பலியாகிறார்கள். இந்தப்புறம் வீசினால் தொழிலாளிகளையும், அந்தப்புறம் வீசினால் விவசாயிகளையும் வெட்டும் கத்திதான் புதிய தாராளவாதக் கொள்கை என்பதை மக்கள் உணரும் போது மட்டுமே இந்த மறுகாலனியாக்கத் திணை மயக்கங்கள் மறைந்தொழியும்.//

பஞ்சத்தை போக்க இவை இரண்டாலும் இப்போதைக்கு முடியாது
உண்மையில் ஆடை ஏற்றுமதி மட்டுமோ பஞ்சு ஏற்றுமதி மட்டுமோ பஞ்சத்தை போக்காது உள்நாட்டு தொழிலுக்கான கச்சா பொருளை உள்நாட்டு தேவை பூர்த்தி பிறகு வெளிநாட்டு ஏற்றுமதிஎன்பதே சரி

பஞ்சு நூல் ஆகிய்வற்றை ஏற்றுமதியை தடுப்பது தவறு என மறைமுகமாக
சொல்லி தொழிலாளர்களின் வயிற்றை காலி செய்யாமல் இருப்பதும் முக்கியம்



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

8 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post