தியாகுவின் டைரி 30.11.2010

பஸ்ஸில் ஏறியதும் ஞாபகம் வருகிறது அய்யோ நூறு ரூபாயா இருக்கேன்னு
ஆனால் நடத்துநர் ஏதும் சொல்லவில்லை
ஐம்பத்து ஆறு ரூபாய்க்கு நூற்றி பத்து வாங்கி கொண்டு மீதம் நான்கு ரூபாய் கொடுத்துவிட்டு இன்னும் அம்பது தறுகிறேன் ..

ஆகா சில்லரை பிரச்சனை முடிந்தது
அரசு பஸ்ஸில் ஓடுகிறது வம்சம் படம் எப்பாடு பட்டாலும் பிற்பாடு கெடாதவர்
வசனம் மண்டையை பிழக்கிறது .

பிறகு தாரபுரம் நிற்கிறது வண்டி கிளம்புகிறது . கதாநாயகியை சாணி பால் ஊற்றவரும் கும்பலை அடித்து நொருக்குகிறார் கதாநாயகன்

இன்னும் நடத்துனர் சில்லரை தரலையே
ஞாபகம் வருகிறது .

சார் எனக்கு ஐம்பது ரூபாய் நீங்க தரனும்
முதலில் என் கேள்வி காதில் விழாதவர் போல சென்றவர் என்னவென கேட்க
திரும்ப நான் சொன்னேன் .

பக்கத்தில் இருப்பவரும் ஆமாங்க இவருக்கும் அம்பதுரூபாய் தரனும் நீங்க

கண்டக்டர் ஏற இறங்க பார்த்துவிட்டு பின்புறம் சென்றுவிட்டு வந்து

எவ்ளோ கொடுக்கனும் அம்பதா என
சொல்லிட்டு நான் முதல்லேயே சொன்னேனே யாருக்கும் பாக்கி வரவேண்டியது இருக்கான்னு ஏன் கேட்கலை என்றார்
சார் நீங்க சீட்டுக்கு பின்னால எழுதி தரலாம்ல என நான் சொன்னதும்

அதெல்லாம் எங்களுக்கு தெரியும் நான் அப்பவே சொல்லிட்டேன் என சொல்லவும்
சுர்ரென்றது எனக்கு

என் பணத்தை வைத்திருப்பது நீங்கள்
உங்களுக்கு கொடுக்கனும் என்ற ரெஸ்பான்சிபிலிட்டி வேணும் எனவும்
கோபம் வந்துட்டுது

ஆனால் டிக்கட்டு பின்னால் எழுதி கொடுக்கலாம் என்ற எனது வாதத்தை மட்டும் காதில் வாங்கி கொண்டு செயல்படுத்தலாம் என்பதை ஒத்துகொள்ளவே இல்லை

பிறகு இரண்டு பேர் விடுங்க விடுங்க என ஆரம்பித்தார்கள்

அவர்களுக்கு வம்சம் படம் போயிடும்
எனக்கு ஏன் ஒரு முறைப்படுத்தல் இல்லை எனும் ஆதங்கம்

ஒரு பயணியை திருடனை போல நடத்தும் உரிமை கண்டக்டருக்கு யார் கொடுத்தது.

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post