தியாகுவின் டைரி 01.12.2010

பெரும்பாலும் விபத்துகள் நிகழாமல் தவிர்க்க என்னால் முடிந்த மட்டும் எப்படி ஓட்டனுமோ அவ்வளவு வேகமாக மட்டுமே வண்டியை ஓட்டுவேன் .

இரண்டுநாட்களாக பெய்யும் மழையானது வண்டி ஓட்டுவதற்கு மிக மிக இடைஞ்சலாகத்தான் இருக்கிறது

அந்த வளைவில் மெதுவாக சிக்னல் போட்டு திரும்பிய வேளையில் வந்து இடித்து தள்ளி விட்டார் இன்னொரு பைக் ஓட்டிய நண்பர் .

வண்டியை தூக்கி பார்த்தால் முன்புற மக்காடு உடைந்து இருக்கிறது

அப்படியே வாங்க ஓரமா அழைத்து சென்று தப்பு உங்கமேலதான் எனவே இதுக்கு ஆகிற செலவை செய்துடுங்க என்றேன் சரி என்றார் நான் ஓடமாட்டேன் நீங்க முதலில் போங்க என்றார்.

அவர் வண்டியில் அவரும் எனது வண்டியில் நானும் அமர்ந்து மக்காடு வாங்க கிளம்பியதும் வண்டியை விரட்டிய பறக்க ஆரம்பித்தார் .

என்னது நம்மகிட்டயேவா என நானும் விரட்டி சென்று சுமார் மூன்றாவது கிலோமீட்டரில் பிடித்தேன்

மன்னிப்பு கேட்டுவிட்டு திரும்ப வந்தார்
மக்காடு வாங்கி கொடுத்து விட்டு அவர் வண்டியை நிறுத்திய இடத்திற்கு அழைத்து சென்று விட்டேன்

தப்பிச்சு ஓடிடலாம்னு நினைச்சீங்களா என்ற கேள்விக்கு அவர் இன்னும் பதில் சொல்லவே இல்லை .................

என்ன புரியலை என்றால் ஒரு சிறுவிசயத்தில் கூட படித்த நபர்கள் என தன்னை சொல்லிகொள்ளும் இவர்களை போன்றோர் ஏன் நேர்மையாக இருப்பதில்லை

சரி அடிபட்டு எனக்கு கை கால் உடைந்து இருந்தால் இவரை விரட்டி சென்று பிடித்து இருக்க இயலுமா?

நேர்மை ஹமாம் சோப்புமாதிரி கரைஞ்சுட்டே வருது

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post