நாட்டாமைகள் தொல்லை தாங்கலைப்பா -மாதவராசு

அண்ணே நீங்க எழுதிய வீச்சான அறைகூவல கேட்டு
உடனே பதிவு போட்டு எல்லாரும் திட்ட ஆரம்பிச்சாங்கண்ணே

/பொதுவெளியில் என்ன நடந்தாலும் பெரிதாய் பொங்கிப் பொங்கி எழுதும்
நர்சிம்மின் அழுகிப்போன மூளை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. த்தூ.... வெட்கமாயில்லை! சக பெண்பதிவர் ஒருவரை என்னவெல்லாம் எழுதி இருக்கிறீர்கள். பதிவு என் ரீடரில் இருக்கிறது. .பின்னூட்டங்களும் என்னிடம் இப்போது இருக்கிறது. உங்கள் சொந்தப் புத்தியை பொதுப் புத்தியாக்கத் துணியாதீர்கள்! /

அப்புறம் நீங்களே நரசிம்மையும் கார்க்கியையும் மன்னித்து எழுதுங்கள்
என பெரிய மனசுபண்ணி எழுத சொல்லிட்டீங்க

//

அதற்காக எழுதாமல் எல்லாம் இருக்க வேண்டியதில்லை. தொடர்ந்து எழுதுங்கள். புதிய மனிதனாய் எழுதுங்கள். அதுதான் காலமும், இந்த நிகழ்வும் உங்களுக்குத் தந்திருக்கும் மாபெரும் படிப்பினை. நீங்கள் சுமத்திய களங்கத்தை, மீதமிருக்கும் உங்கள் எழுத்துக்களால் துடைக்க முடியுமா என முயற்சி செய்யுங்கள்.


இப்பிரச்சினையை ஆத்திரமாக முன்வைத்த நான், இந்த நேரத்தில் என் கருத்தைச் சொல்லி முடித்துக் கொள்கிறேன். .இதுகுறித்து மேலும் பேச வேண்டியதுமில்லை என நினைக்கிறேன். நான் பேசப்போவது இல்லை. நாளை புதிய பதிவர்கள் அறிமுகத்தில் சந்திப்போம்./


இதற்கிடையே நரசிம்மை திட்டி எத்தனை பதிவுகள் பதிவர்கள் எழுதினாங்க முகில் எழுதினார் , முல்லை எழுதினார் .நாலு பதிவு போட்டு திட்டிவிட்டு பிறகு நீங்களே வந்தீர்கள் , சரிப்பா நீ திருந்திட்ட இனிமே எழுதலாம்னு சொல்லிட்டீங்க

இதெல்லாமே உங்கள் மனதின் தாகசாந்திக்காக எழுதுவதா?

அப்போ நீங்களா திட்ட ஆரம்பிப்பீங்க அப்புறம் நீங்களா பார்த்து போட
போய் பொழைச்சுக்கோன்னு விட்டுவிடுவீங்க.

பதிவுகள் சமூகத்தின் பிரதிபலிப்பென்றால் சமூகத்தின் அவலநிலையை நீங்கள் பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுடுவீங்களா?

உங்களை போன்றவர்கள் இந்த விசயத்தில் மனம்போன போக்கில் எடுக்கும் முடிவுகள் எந்தவகையில் எடுத்து கொள்வது?

1.என்னதான் படிச்சு நாகரீகமா வாழ்ந்தாலும் / திட்டும்போதுஆணாதிக்கத்தோடு சாதியரீதியான அவமதிப்போடு திட்டும் போக்கையும் அதுவே சமூகம் எங்கும் விரவிகிடப்பதையும் அம்பலபடுத்த வேண்டும் எனவும் கிளம்பவில்லையா
நீங்கள் ?
2.இது வண்டியில் வந்து இடித்துவிட்டால் மன்னிப்பு கேட்கும்/ வழங்கும்
ஒரு அன்றாட சாதாரண பேச எதுவுமற்ற ஒரு தவறுதானா உங்களை பொறுத்தவரை எனவே கோபம் வந்தது திட்டினேன் இப்ப கோபம் அடங்கிடுச்சு வாழ்த்துவோம் எழுத சொல்லுவோம்னு கிளம்பிட்டீங்களா

என்னவோ பாதிக்கப்பட்ட சந்தனமுல்லை இந்த தீர்ப்பை வழங்க உங்களுக்கு சொல்லிட்டா மாதிரி நீங்களே தீர்ப்பு எழுதிட்டீங்க

எழுதும்முன் உங்கள் பேனா கொஞ்சமாவது பிரச்சனையின் பரிணாமத்தை சிந்தித்து இயங்கிற்றா அல்லது உங்கள் மனதின் சாந்திக்கு இயங்கிற்றா ?

அப்ப பிரச்சனை உயிரோடவே இருக்கனுமான்னு கேட்காதீங்க
அதை முடிவுசெய்யவேண்டியது பாதிக்கப்பட்ட முல்லையும் நரசிம்மும் மற்றும் எடுத்து போட்ட வினவும் உட்பட அனைத்து பதிவர்களும்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

8 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post