ஆபத்தில் அனைவரும் சாதாரண மனிதனே

அந்த போலீஸ்காரர் வெடிகுண்டு வீசப்பட்டு உயிருக்கு போராடுகிறார்

அருகில் ஒரு அமைச்சர் யாருடனோ போனில் பேசிக்கொண்டு

வெள்ளை சட்டையில் கரைபடியாத நிலையில் போலிஸ் எஸ் யை

யாரும் தூக்கவில்லை தண்ணீர் கொடுக்கவில்லை

அந்த ஜீவன் காக்கி உடுப்புடன் உயிருக்கு போராடி

பிறகு அந்த ஆஸ்பத்திரி இந்த ஆஸ்பத்திரி என அலைகளிக்கப்பட்டு

உயிரை விடுகிறது ..


இதே காட்சியின் மறு பக்கம் ஒரு மாணவன் அடிக்கப்படுகிறான்

அனேக போலீஸார் வேடிக்கை பார்க்கிறார்கள் அவன் மேலும் மேலும்

அடிக்கப்படுகிறான் பிறகு அவனே கைது செய்யப்பட்டு மருத்துவ மனையில்

சேர்க்கப்படுகிறான்

இன்னும் ஒரு காட்சி ஒரு நீதிபது மண்டை உடைக்கப்பட்டு ரத்தம் சொட்ட

சொட்ட வன்முறை வேண்டாம் என கதறுகிறார் அவரை கைத்தாங்களாக

பலர் கூட்டி வரப்படுகிறார்கள் .

மண்டை உடைந்து கை உடைந்து காயத்துடன் நிறையபேர் அவரைபோல

கதறுகிறார்கள்

முதல் காட்சி பாதிக்கப்பட்டது ஒரு காவலர் - யாரோ கிரிமினல்களால்

இரண்டாம் காட்சியில் பாதிக்கப்பட்டது ஒரு மாணவன் - சக மாணவனால்

மூன்றாம் காட்சியில் பாதிக்கப்பட்டது பல வக்கீல்களும் நீதிபதியும்

போலீசாரால்

எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நிகழ்வா ?

ஆம் மேலோட்டமாக அப்படித்தான்

ஆனால் அதன் அடி ஆழத்தில் ஒரு சம்பந்தம் இருக்கிறது

அது இந்தசமூகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை எனும்

சம்பந்தம் ..

அவருக்கே இப்படியா , இவருக்கே இப்படியா என சொல்வோ

சிந்திக்கவேண்டும் எல்லாருக்கும் அப்படித்தான்

மக்கள் மனதில் சக மனிதனை சக மனிதனாக பார்க்கும்

எண்ணம் வளரவேண்டும்

ரோட்டில் ஒருவன் அடிபட்டு கிடந்தால் அழைத்தால் அது எங்க

ஏரியா இல்லை என போலீஸ் காரர்கள் சொல்வதை நிறுத்தாதவரை

அவர்களுக்கும் நீதி கிடைக்காது என்பதை இதன் பின்னராவது

போலீஸ் காரர்கள் உணர்ந்தால் சரி

எனக்கென்ன நான் நல்லா இருக்கேன் அடுத்தவன் தானே

செத்தான் என வேலையை பார்க்க கிளம்ம்பும் பொதுஜனங்களே

ரோட்டில் நாயை போல அடிபட்டு கிடந்தாலும்

ஒருத்தனும் தூக்கி விட போவதில்லை அப்படி பட்ட சமூகமாக

நாம் இதை ஆக்கிவிட்டோம்

இதில் நம் அனைவருக்கும் ஒரு பங்கு உண்டு

பாதிக்கப்பட்டவன் யாராக இருந்தாலும் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடனும்














--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post