லாஜிக்கில்லாமல் உளறி வருகிறார் அவருடைய சமீபத்திய கட்டுரையில்
//தமிழ்நாட்டின் தமிழ் உணர்வாளர்கள் கடந்த நாடாளுமன்றத் தோ்தலின் போது எடுத்த நிலைப்பாடுகள் மீது தோழர் ஏகலைவன் தம் கட்டுரையில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். நம்புங்கள்.மேலும் அக்கட்டுரையில், நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தோ்தலில் தமிழ்நாட்டுத் தமிழ் உணர்வாளர்கள் மேற்கொண்ட நிலைப்பாடுகள் பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு ஆதவாகப் போய்விட்டதாம், ஒப்பாரி வைத்துள்ளார், ம.க.இ.க.வின் ஏகலைவன். அவரது விமர்சனங்களை ஆராய்வோம்.
ஈழத்தில் தற்பொழுது நடந்து முடிக்கப்பட்டிருக்கும், இனவெறிப் போரை சிங்கள இனவெறி அரசைக் கொண்டு திட்டமிட்டும், முழு பலத்துடனும் நடத்தியது இந்திய அரசே என்பது தான் தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் அனைவரும் கொண்ட நிலைப்பாடு. இதில் மாற்றுக் கருத்து இல்லை. இதனால் தான், இந்தியாவின் துரோக முகத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், யார் போரை தலைமையேற்று நடத்துகின்றனரோ, அந்த அரசின் பெயரைச் சொல்லி "போரை நிறுத்து!" என்று தமிழகத் தமிழ் உணர்வாளர்கள் தமிழ்நாட்டில் தம் போராட்டங்களை மேற்கொண்டனர். அதனால் தான் "இந்திய அரசே! போரை நிறுத்து!" என்ற முழக்கம் வெகு மக்களைச் சென்றடைந்து, இந்திய அரசு போருக்குப் பின்னணியாக இருப்பதை அம்பலப்படுத்த உதவியது.
பார்ப்பன பா.ச.க.வோ அல்லது மற்ற கட்சிகளோ இந்திய அரசிற்கு தலைமையேற்றால், "ஈழம் உடனே கிடைத்து விடும்" என்று தமிழ்நாட்டில் ஒருவரும் நினைக்கவில்லை. ம.க.இ.க. மட்டுமே அவ்வாறு நாம் நினைத்துக் கொண்டிருப்பதாக தம் அணியினருக்கு கதையளந்து கொண்டிருக்கிறது. தமிழகத் தமிழ் உணர்வாளர்களின் நோக்கம் வெளிப்படையானது, அது காங்கிரஸ் அணியினர் வீழ்த்தப்பட்டு, சிங்கள அரசுக்கு இந்திய அரசின் ஆதரவில் விரிசல் ஏற்பட்டு, உடனடி போர் நிறுத்தத்திற்கு வழி ஏற்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே நம்மை ஆட்கொண்டிருந்தது. இது மட்டுமே தற்காலிகப் போர் நிறுத்தத்தை மட்டுமாவது சாதிக்கும் என்று நம்பிய தமிழ் உணர்வாளர்கள் தானே இங்கு அதிகம்.
//
ஈழத்தில் நடக்கும் படுகொலைகளை தடுத்த நிறுத்த உடனடியாக காங்கிரசை பதவியில் இருந்து இறக்க தேர்தல் புறகணிப்பை மக இக சொல்லவில்லை தேர்தல் புறகணிப்பு என்பது சந்தர்ப்பவாதமாக அது எப்போதும் சொல்லவில்லை அதன் முழக்கமே தேர்தல் பாதை திருடர் பாதை என்பதுதான்
குறுகிய நோக்கங்களுக்காக நீங்கள் செயா மாமியின் சேலையை பிடித்தாலும்
தேர்தல் முடிந்தவுடன் மாமியும் கருணாநிதி மாமாவும் தன் வேலையைத்தான் செய்கிறார்கள் (ஆனால் ஜெயா ஜெயித்து இருந்தால் மாறி இருக்குமே நிலமை என்று நீங்கள் நினைப்பது என்பது தவறு இந்திய ஆளும் பணியா கும்பல் இலங்கையில் செய்த முதலீட்டு மோசம் வரும் என்பதால் (கட்சிகள் அல்ல முதலாளித்துவ கும்பல்) கண்டிப்பாக ஈழத்துக்கு ஆதரவளிக்காது )
ஒருவேளை நீங்கள் சிந்திப்பது போல இம்முறை மட்டும் ஓட்டு போடுங்கள் என மக இக சொல்லி இருந்தால் அதுதான் சந்தர்ப்பவாத அரசியல் ஆனால் சொல்லவில்லை
இந்திய பார்பன ஆளும்கும்பலை த்தான் முதல் எதிரிகள் என்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் கருணாநிதி போன்ற அடிவருடிகளை அம்பலப்படுத்தியும் தொடர்ந்து போராடிவருகிறது பேசி வருகிறது இந்திய ஆளும் வர்க்கம்தான் இந்த போரை நடத்துகின்றது என்பதிலும் காங்கிரசுக்கு பதில் பஜக வந்தாலும் இதையேதான் செய்யும் என்பதிலும் உறுதியா நின்ற மக இக அரசனை நம்பினாலும் புருசனை நம்பினாலும் நடப்பது ஒன்றுதான் என்பதில் தெளிவாக இருந்தது
அதுதான் அதன் அரசியல் தெளிவு
இன்றைக்கு ஒன்று நாளைக்கு ஒன்றும் கொளத்தூர் மணி பேசலாம் நாம் பேச முடியாதே ஆகவே தேர்தல் புறகணிப்பு என்பது சந்தர்ப்பவாத கோசமல்ல மாறாக ஜெயாவுக்கு ஓட்டளியுங்கள் என்பதுதான் சந்தர்ப்பவாத கோசம்
//1997 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் முன் முயற்சியில் ஈழத்தமிழர் ஆதரவை வெளிப்படுத்த ஒர் முழு அடைப்பு நடத்தப்பட்டது. தமிழக மீனவர் படுகொலை, ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்டவற்றை மட்டுமே பிரதானப்படுத்தி நடந்த இம்முழு அடைப்புப் போராட்டத்தில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கையும் எழுப்பப்படவில்லை.//
ஈழத்தமிழர் ஆதரவு என்பதற்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆதாயம் இருக்கிறது (புரட்சிகர கட்சிக்கு ஓட்டு பொறுக்கும் ஆதாயமோ திக போன்று இருக்கின்ற சொத்தை பாதுகாக்கும் ஆதாயமோ இல்லை)
ஓட்டு கட்சிகளை பொருத்தவரை திராவிடர்கழகமோ ஒரு பேசனுக்காக போராட்டம் செய்யும் அதுக்கெல்லாம் உடனே ஓடிப்போய் ஆதரவு செய்தால்தான் இவர்களும் ஈழத்தமிழரை ஆதரிக்கிறவர்கள் என சொல்வது
முழு முட்டாள் தனம்
தெருத்தெருவாக ஈழ மக்களுக்காக இறங்கி போராட்டம் நடத்தியது மக இக அதனுடன் திக சேர்ந்து போராடியதா என்ன
//இந்தப் பாசிச அணி உலகையே அச்சுறுத்தும் அணியாக இருந்தது. இந்தப் பாசிச அணியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அனைவர் மனதிலும் எழுந்தது. ரசிய அதிபர் ஸ்டாலின் இதற்காக திட்டமிட்டார். ரசியாவை மட்டுமின்றி உலகையும் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக ஒரு "பாசிச எதிர்ப்புக் கூட்டணி"யை உருவாக்கினார். அதற்காக அவர் யாருடன் கைக்கோர்த்தார் தெரியுமா? அன்றைய உலக ஏகாதிபத்தியங்களாக விளங்கிய இங்கிலாந்துடனும், அமெரிக்காவுடனும்.//
ஓகோ ஸ்டாலின் செய்ததை போன்ற ஒரு அறிவுபூர்வமான நாலையும் ஆராய்ந்து செய்த கூட்டணியா செயா கூட்டணி இல்லை
அரசியல் தெளிவற்ற தன்மையினாலும் சிக்கலில் மாட்டிகொண்ட போராளிகள் அமைப்புக்கு
ஆற்றாமையினால் எதுவும் முடியாத நிலையில் செய்த கூட்டணி
இது!
ஏங்க உலக போரின் கூட்டணி யெல்லாம் சொல்லி உயர்வு நவிர்ச்சியா பேசுறீங்க ஒரு பில்டப்புக்காகவா :)
நீங்கள் என்னதான் இப்போதைக்குத்தானேன்னு செயாவை ஆதரித்தாலும் அவரது பார்வை ஓட்டு வேட்டையில்தான் இருக்கும் என்பது தெரியுமா
நாளைக்கே தேர்தலில் செயித்தால் ஈழத்தை வீட்டு கொல்லை புறத்தில் வீசுவார் என்று தெரியுமா ஆனால்
மக இக அறியும்
இனப்படுகொலையை தடுக்க தேர்தல் ஒன்றுதான் தீர்வு என்று நீங்களும் நினைத்தீர்கள் புலிகளும் நினைத்தார்கள் விளைவு கடைசிவரை காத்திருந்து
மூன்றாம் தரப்பிடம் சரணடைந்து மரணமடையும் இழிநிலைமைக்கு புலித்தலைமையை தள்ளியதுடன் மட்டுமல்லாது இனிமேல் எந்த போராட்டமும் ஈழத்தில் நடத்த முடியாத நிலமைக்கு தள்ளிவிட்டீர்கள்
ஏன் ஏன் ஏன்
இந்தியாவை திரும்ப திரும்ப நம்பியதால் வந்த வினை
நட்பு சக்திகளை களை எடுத்ததால் வந்த வினை
உலக நிலமைகளை கணக்கில் எடுக்காமல் துப்பாக்கி சனியனை மட்டும்
நம்பியதால் வந்த வினை
யாருடன் வேண்டுமானாலும் செயல் தந்திரமாக கூட்டனி சேரலாம் என்பதை நீங்கள் புலிகளுக்கு சொல்லி இருக்கனும்
சிங்கள உழைக்கும் மக்களையும் சேர்க்க பாடுபட்டு இருக்கனும் அதற்கு ச்சிங்கள அப்பாவிகளை கொல்லாமல் இருந்து இருக்கனும் என நீங்கள் புலிகளுக்கு சொல்லி இருக்கனும்
தவறு அதற்கு மேல் தவறு கடைசியில் பலியை தூக்கி போடு அடுத்தவன் மேல்
புலிகளுக்குன்னு பேச உலக அரங்கிலும் உள்ளூரிலும் யாருமே இல்லையே
தேர்தல் நேரத்தில் மக்கள் உங்களுடன் இல்லாததை போல
எப்போ சிந்திப்பீர்கள்
மொத்தத்தில் நீங்களும் சரி இன விடுதலைக்கு போராடிய புலிகளும் சரி
நண்பன் யார் எதிரியார் என தெரியாமல் இன்னும் இந்திய ஏகாதிபத்தியம் ஈழத்தை தரும் என்று மண்டியும் அரசியல் தெளிவற்ற போக்கில்
ஆயிரக்கணக்கான மக்களை பலி கொடுக்கலாம்
விமர்சனம் செய்தால் சீர்குலைவு வாதிகள் என்பீர்கள். போக தெளிவற்ற அரசியலின் நாதாமாக செயல்பட்டு முடிவற்ற துயரை அனைவருக்கும் வழங்கி தியாகிகளாக வலம் வாருங்கல் வரலாறு உங்களை மன்னிக்காது
* அவரது கட்டுரையின் இன்னும் சில விசயங்களுக்கு மறுப்பு எழுதவில்லை அதை தோழர்கள் செய்வார்கள்
முக்கியமாக தேசிய இனபிரச்சனை , மக இக மாநில கட்சியா , எது தேசிய போராட்டம் ஆகியவற்றிற்கு
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================