ரதி என்ற பெண் தனது அனுபவங்களை தொகுத்து வழங்க
அவரது கருத்துக்கள் புலிகள் என்ன கருதினார்களோ (கருதுகிறார்களோ)
அதைத்தான் சொல்கிறது என தடுக்க நினைக்கிறார் இரயாகரன்
மறுவினையாக வினவு தோழர்கள் வறட்டு வாதம் என
இரயாவை நிராகரிப்பதில் போய் முடிந்தது
எனது கருத்தை இதில் பதிகிறேன்
ரதி எழுதி முடிக்கும்வரை இரயா பொறுத்து
மொத்தமாக வரிக்கு வரி மறுத்து இருக்கலாம்
இரயாவின் விமர்சனத்தை ஏற்று கொண்டு
அந்த பெண் எழுதட்டும் பிறகு இதுகுறித்து
ஒரு பெரிய விவாதம் நடத்தாலாம் என வினவு சொல்லி இருக்கலாம்
இவ்வாறு சொல்லி இருந்தால்
நமது தோழரான இரயாகரனுடன் நாமே மல்லுக்கு நின்ன கதையாக
இது போயிருக்காது மாறாக ஒரு அருமையான விவாதத்தின் மூலம்
ஈழத்தை பற்றி நாமும் புரிந்து கொண்டு
மக்கள் மத்தியிலும் கொண்டு சென்று இருக்கலாம்
சரி இத்தனை லாம் போடுறீங்களே நீங்க ஏன் இதுவரை ஒன்றும்
சொல்லவில்லை என கேட்கிறீர்களா
யப்பா ஒவ்வொரு கட்டுரையையும் படிச்சு முடிக்க இப்பதான் அவகாசம் கிடைத்தது
அசுரன் சொன்னமாதிரி சுயவிமர்சனம் செய்துகொள்ள அவகாசம்
கொடுத்து விவாதத்தின் தொடர்ச்சி ஆரோக்கியமாக்கனும்
இது ஒரு பாடம் இனிமேல் இதை கைக்கொள்ளனும்
தோழர்கள் என நினைக்கிறேன்
மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்கள்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================