பன்முகப் பட்ட சமூகத்தில் ஒரே கருத்து நிலவ முடியாது.
எம்.ஏ. நு·மான்
ஈழத்துத் தமிழ்ச்சூழலில் 1960 களிலிருந்து கவிஞர், −தழ் ஆசிரியர், விமரிசகர், பேராசிரியர், ஆய்வாளர் எனப் பல்வேறு தளங்களிலும் செயற்பாடு கொண்டு −யங்கி வருபவர்.
தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறைப் பேராசிரியராக உள்ளார். −வரது 'பாரதியின் மொழிச் சிந்தனைகள்' என்னும் நூல் பாரதியினுடைய மொழிச் சிந்தனைகளை விமர்சனம் செய்கிறது. தமிழில் −து முதல் முயற்சி. பாரதியியலுக்கு −து ஒரு புதிய பங்களிப்பு. பிரயோக மொழியியல் - சமூக மொழியியல் கோட்பாடுகளைக் கொண்டு பாரதியின் மொழிச் சிந்தனைகளை ஆய்வுக்கு உள்ளாக்குகின்றார்.
தமிழில் மார்க்சிய விமர்சன வளர்ச்சியில் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி −வர்களின் வரிசையில் எம்.ஏ.நு·மான் தனக்கான தனித்துவத்துடன் தொழிற்பட்டு வருபவர். மார்க்சிய விமர்சனத்தின் சுய விமர்சனக் காலகட்டத் தோற்றுவிப்பாளருள் ஒருவராக உள்ளார்.
−துவரை, பல்வேறு கவிதைத் தொகுதிகள், பல்வேறு ஆய்வு நூல்கள், பல நூல்களின் பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என தனது பங்களிப்பைத் தமிழிலக்கியத்துக்கு வழங்கியுள்ளார். 'தமிழ் −னி 2000' மாநாட்டுக்காக சென்னை வந்திருந்த அவருடன் ஒரு நேர்காணல்
ஈழத்து மார்க்சிய இலக்கியவாதிகள் வளர்ந்ததற்குக் காரணமாகச் செயல்பட்ட அரசியல் பின்புலங்கள் என்னென்ன?
ஈழத்திலே வளர்ந்த மார்க்சிய இலக்கியங்கள் வளர்ந்த அரசியல் பின்புலம் என்று சொன்னால், மார்க்சிய இயக்கங்களின் வளர்ச்சியோடுதான் இலக்கிய வளர்ச்சியும் கைகோர்க்கிறது. −லங்கை, −ந்தியா, தமிழ்நாடு போன்ற −டங்களில் 20-30-களில் மார்க்சிய இயக்கம் வளரத் தொடங்கிவிட்டது. −லங்கையிலும் 1920-30-களில் மார்க்சிய இயக்கம் படிப்படியாக வளரத் தொடங்கி விட்டது. ஆனால் 1946-ல் தான் −லங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று ஒன்று உருவாகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் மார்க்சியச் சிந்தனைகள் வேரூன்றத் தொடங்கியது. ஆனால் 1956-க்குப் பிறகுதான் மார்க்சியக் கட்சிகளும், அது சார்ந்த இலக்கியங்களும் மிகத் தீவிரமாக −யங்கத் தொடங்கியது. அதனுடைய அரசியலின் வெளிப்பாடுதான் மார்க்சிய இலக்கியங்களும். 1950-களிலிருந்துதான் எங்களுடைய மார்க்சிய இலக்கியங்களின் வளர்ச்சியைக் கணக்கிலெடுக்க முடியும்.
தமிழகச் சூழலில் மார்க்சிய இயக்கப் போக்கை எப்படி அவதானிக்கிறீர்கள்?
தமிழகச் சூழலில் −லங்கையில் மார்க்சிய இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பு மார்க்சியம் அறிமுகமாகி விட்டது. ரகுநாதனின் 'பஞ்சும் பசியும்' நாவலை ஒரு முன்னோடி முயற்சியாகச் சொல்லலாம். தமிழ்நாட்டோடு ஈழத்தைப் பொருத்திப் பார்த்தால் ஈழத்தில் ஆரம்ப காலங்களில் வந்த அளவுக்கு தமிழ்நாட்டிலிருந்தது வந்தது என்று சொல்ல முடியாது. அதனால் 70-களுக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் மார்க்சியப் படைப்புகள் அதிகமான அளவில் வெளிவருகிறது. அதற்கு ஈழத்தினுடைய செல்வாக்கும் காரணமாகயிருந்தது என்று நான் சொல்லுவேன். அப்படி நான் சொல்வது சரியோ என்று தெரியவில்லை. ஆனால், அந்த மாதிரி நான் யோசித்துப் பார்க்கிறேன்.
பெரியாரியத்தை எப்படி மார்க்சியத்தோடு பொருத்திப் பார்த்துப் புரிந்து கொள்கிறீர்கள்?
பெரியாருக்கு ஆரம்ப காலங்களில் மார்க்சியச் சார்பிருந்தது. ஆனால் அவருடைய பிரதானமான அரசியல் குறிக்கோள் அல்லது அரசியல் இயக்கம் அவர் கட்டியிருந்த பார்ப்பனியத்துக்கு எதிரானது. அப்படி வரும்பொழுது அவர் மார்க்சியத்திலிருந்து வேறுபட்டுப் போகிறார். ஆனால் அவருடைய பகுத்தறிவுச் சிந்தனை, மொழி சம்பந்தமாக அவர் முன் வைக்கிற அறிவுப்பூர்வமான கருத்துக்கள் −வையெல்லாம் முற்போக்கானவைதான். அதை மார்க்சியத்துக்கு முற்றிலும் எதிரானதென்று கருத வேண்டியதில்லை. ஆனால், மார்க்சியத்தினுடைய சில அடிப்படையான சிந்தனைகளிலிருந்து பெரியார் வேறுபடுகிறார். மார்க்சியம் வர்க்க ரீதியான முரண்பாடுகளைத்தான் மையமாகக் கொள்கிறது. ஆனால், பெரியாருடைய இயக்கம் சாதி ரீதியிலான இயக்கம். பார்ப்பனர் / பார்ப்பனர் அல்லாதார் அந்த அடிப்படையில் வருகிறது. −தில் வர்க்கம் சார்ந்த அடிப்படையான பார்வைகளில்லை. அந்த மாதிரித்தான் பெரியார் மார்க்சியத்திலிருந்து வேறுபடுகிறார்.
தற்பொழுது வரை வெளிவந்த மார்க்சிய இலக்கியப் படைப்புகளில் மார்க்சிய அழகியலை மட்டும் தனித்து அடையாளங் காண முடியுமா?
மார்க்சிய அழகியல் என்று எதைச் சொல்லலாம்? பொதுவாக இலக்கியம், இலக்கிய அழகியல் என்றுதான் சொல்ல வேண்டுமென்று நான் நினைக்கிறேன். ஆனால், மார்க்சியத்திற்கென்று தனியாக அழகியல் சிந்தனைகளை மார்க்சிஸ்டுகள் இலக்கியம் மூலமாக வளர்த்தெடுக்கவில்லையென்று நான் சொல்லுவேன். ஆனால் மார்க்ஸ், எங்கெல்ஸ், மாவோ போன்ற மார்க்சியவாதிகள் இலக்கியத்தைப் பற்றி, கதையைப் பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள். அது பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஆனால், அதனடியாக ஒரு இலக்கியக் கோட்பாட்டை வளர்த்தெடுக்கவில்லை என்பது பொதுவான கருத்து.
ஆனால் அவர்களுடைய கருத்துக்களின், எழுத்துக்களின் அடிப்படையில் மார்க்சிய இலக்கியம் எவ்வாறிருக்க வேண்டுமென்கிற சிந்தனை நமக்குக் கிடைக்கவில்லை. பிற்காலத்தில் வந்த மார்க்சிய அறிஞர்கள், விமர்சகர்கள் அது பற்றி வளர்த்தெடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும்பொழுது −ரண்டு அம்சங்களைச் சொல்லலாம். ஒன்று இலக்கியத்தினுடைய பொருள் சம்பந்தமான பிரச்சினை, அதாவது அதன் உள்ளடக்கம் சம்பந்தமான பிரச்சினை. −ரண்டாவது இலக்கியத்தின் வடிவம் சார்ந்த பிரச்சினை. −து −ரண்டு தொடர்பாகவும் மார்க்சியர்களின் நிலைப்பாடு என்ன என்று பார்க்கும்பொழுது பொதுவாக எங்களுடைய மார்க்சிய முற்போக்கு இயக்கம் இலக்கியத்தினுடைய பொருளாக வர்க்கப் போராட்டத்தை மையமாகக் கொண்டதாக ஒரு கருத்து.
அதாவது ஒடுக்கப்பட்ட மக்கள், சுரண்டப்படுகிறவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அடித்தள மக்கள் −வர்களுடைய ஆசை அபிலாஷைகள், பிரச்சினைகள் இலக்கியத்தின் பொருளாக −ருக்க வேண்டும். அவர்களுடைய விடுதலைக்கு இலக்கியம் வழிகாட்ட வேண்டும் என்ற ஒரு கண்ணோட்டம். −தை உள்ளடக்கம் சார்ந்த ஒரு கண்ணோட்டம் என்று சொல்லலாம். மற்றது −ந்த அடிப்படையில் ஒரு நாவலில் சிறுகதையில் கவிதையில் வெளி வரும்பொழுது அது −வ்வாறு அமையும் என்று திட்டவட்டமான கருத்தை மார்க்சியர்கள் −துவரை சொல்லவில்லை. ஆனால், உருவம் உள்ளடக்கத்திற்கு ஏற்ப அமைகின்றது என்ற கருத்தைச் சொல்லலாம். பிற்காலத்தில் உருவம், உள்ளடக்கம் −ரண்டுக்குமிடையே ஒரு −யைபு −ருக்க வேண்டுமென்று சொன்னார்கள். −தில் உள்ளடக்கம் உருவத்தைத் தீர்மானிக்கிறது என்கிற கருத்தை சில மார்க்சியர்கள் வர்ணித்தார்கள். அதனால்தான் அவர்கள் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தார்கள்.
பிற்காலத்தில் நாங்கள் மார்க்சிய அழகியல் அதனுடைய குறைபாடுகள் பற்றிப் பேசும்பொழுதெல்லாம் −ந்தக் கண்ணோட்டத்தில் நின்றுதான் பார்த்திருக்கிறோம். ஆனால், −ப்பொழுது திரும்பிப் பார்க்கும்பொழுது எனக்கு என்ன தோன்றுகிறது என்று சொன்னால் மார்க்சிய அழகியல் பிரச்சனைகளிலிருந்து பேசியதெல்லாம் உருவம் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி மட்டுமல்ல; அதன் உள்ளடக்கம் சார்ந்த பிரச்சனைகளையும்தான். முற்போக்கு இலக்கியங்களின் அழகியல் பிரச்சனைகள் என்று பேசும்பொழுது, நாங்கள் உள்ளடக்கத்தைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும் என்று கருதுகிறேன்.
ஏனெனில், பெரும்பாலான −ந்த இலக்கியங்கள் பிரச்சாரப் பாங்கானவை என்ற குற்றச்சாட்டு வருவதற்கு அடிப்படையான காரணம் எங்களுடைய பல எழுத்தாளர்கள் −ந்த வாழ்க்கையை, வர்க்கப் போராட்டத்தை மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு போக்கில் தங்களுடைய நாவல் சிறுகதைகளில் வெளிப்படுத்தியிருக்கின்றதை ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லலாம். அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது உள்ளடக்கம் சார்ந்த பிரச்சனைகள்தான் அழகியல் பிரச்சனையில் ஒரு முதன்மையான அம்சமாகயிருக்கிறது. அது பற்றி நான் நிறையப் பேசிவிட்டேன். உருவம் அல்ல உண்மையான பிரச்சனை என்னைப் பொறுத்தவரை உள்ளடக்கங்களை எவ்வாறு வாழ்க்கைச் சிக்கல்களோடு பொருத்தி வெளிக்காட்டுகிறார்கள் என்பதுதான் முக்கியம்.
இலக்கியத்தை சமூக மாற்றத்திற்காக கருவியாகப் பயன்படுத்தியதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அதை உண்மையான இலக்கியப் படைப்போடு சேர்த்துப் பார்க்கும்பொழுதுதான் −ந்தப் பிரச்சினைகள் வருகிறது. அதாவது சமூகப் பிரச்சினைகள் படைப்பு ரீதியாக எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது என்பதுதான் ஒரு முக்கியமான அழகியல் கேள்வியாகயிருக்கிறது. −து −வ்வாறுதான் −ருக்க வேண்டுமென்ற திட்டவட்டமான தீர்வாக எதையும் சொல்ல முடியாது. மாவோ, கடைசியாக 'ஆயிரம் பூக்கள் மலரட்டும்' என்று சொன்னார். ஒரு படைப்பு எழுத்தாளனுடைய பார்வை கற்பனைத் திறனைப் பொருத்து அமைகிறது. மார்க்சியப் படைப்புகளுக்கு உதாரணமாகக் கார்க்கியைச் சொல்லலாம். கார்க்கியை மையமாக வைத்து அல்லது ஆதர்சமாகக் கொண்டு படைக்கிறவர்களிடமெல்லாம் கார்க்கியிடமிருந்த செழுமையைக் காண முடிவதில்லை.
'ஆயிரம் பூக்கள் மலரட்டும்' என்று குறிப்பிட்டீர்களே, மாவோ குறிப்பிட்டது கட்சியின் கருத்தை முன்னிறுத்திய ஆயிரம் படைப்புகளையா? அல்லது கட்சியின் கருத்துக்கு முரண்பட்ட ஆயிரம் சிந்தனைகளையா?
அவர் குறிப்பிட்டது ஆயிரம் சிந்தனைகள் வளரட்டும் என்பதைத்தான். கட்சிக்குள்ளே ஆயிரம் சிந்தனைகள் வரலாம். வெவ்வேறு வகையான படைப்புகளும் வரலாம். அவர் சொன்னதை ஒரு குறியீடாகக் கொள்ளலாம். படைப்பு ரீதியில் பல்வேறு முரண்பட்ட படைப்புகளை வரவேற்பது ஜனநாயக ரீதியில் செயல்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும்.
இயக்க ரீதியாக மார்க்சியம் ஈழத்தில் எப்படி வளர்ந்தது?
இயக்க ரீதியாக மார்க்சியம் வளர்ந்ததற்கு 50-60 ஆண்டு கால வரலாறு உண்டு. பொதுவாக மார்க்சிய இயக்கங்களில் வெற்றி தோல்விகள் உண்டு. அவ்வளவையும் ஈழத்திலேயும் காணலாம். ஆனால், ஈழத்தினுடய பிரச்சனையில் மார்க்சிய இயக்கம் ஈழத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில், ஈழத்தை ஒரு விடுதலைப் பார்வைக்கு −ட்டுச் செல்வதில் வெற்றி பெறவில்லை என்கிற கருத்திருக்கிறது. அதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஈழத்தில் −டதுசாரி இயக்கம் ஐம்பதுகளுக்குப் பிறகு பாராளுமன்றப் பாதையை தேர்ந்தெடுத்த போக்கு தமிழ்நாட்டில், −ந்தியாவில், மற்ற நாடுகளில் ஏற்பட்டமையை அதை அரசியல் சந்தர்ப்பவாதமாகத்தான் பார்க்க முடிகிறது. ஏனைய கட்சிகளைப் போல மார்க்சியக் கட்சிகளும் கட்சியாகச் செயல்படும்பொழுது தங்களுடைய அரசியல் இயக்கமாகத் தங்களுடைய கொள்கைகளை, பிரச்சாரங்களை நடைமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. அந்த வகையில் அவர்கள் அரசியல் சந்தர்ப்பவாத சக்திகளுக்குள் விழுந்திருக்கிறார்கள். பாராளுமன்றப் பாதையை ஆதரித்து −டதுசாரி இயக்கங்களாக வளர்ந்த இயக்கங்களும் உண்டு. ஆனால் அவர்கள் சிறுபான்மை இயக்கங்களாகத்தான் −ருக்கின்றனர்.
ஈழத்தில் மார்க்சியக் கட்சிகளுக்குள்ளாக வந்த இயக்கங்கள் அதற்குப் பிறகு அது ஒரு பெரும் தேசியவாத இயக்கமாக, சிறுபான்மையை ஆதரித்துச் செல்ல முடியாதபடி வலிமையற்ற ஒரு இயக்கமாக அழிந்து போய்விட்டது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்பொழுது மார்க்சிய இயக்கம் சில முன்னேற்றகரமான செல்வாக்குகளை ஈழ அரசியலில் செலுத்தியிருந்தாலும், ஒட்டுமொத்தமாக அவை பலவீனமான நிலையில் தோல்வியடைந்து விட்டது என்று சொல்லலாம். அதனுடைய தோல்விதான் ஈழத்தில் −னத்துவப் பிரச்சினைகள் மேலோங்கி மேலோங்கி வளர்வதற்கு அடிப்படையாக அமைந்தது என்று நான் கருதுவேன்.
70-களில் மார்க்சிய இலக்கியங்கள் வளர்ந்த அளவிற்குத் தற்போது அதிக அளவில்லையா? அதற்குக் காரணம் என்ன?
தமிழகத்தில் தற்பொழுது மார்க்சிய இயக்கங்கள் சிறுபான்மையாகவேனும் வலிமையாகயிருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வலுவாக இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லவில்லை. ஈழத்தில் −னப் பிரச்சினை உக்கிரமடைந்ததற்குப் பின்னர் −டதுசாரி மார்க்சிய இயக்கங்கள் தங்களுடைய வலிமையை −ழந்து விட்டன. அந்த வகையில் உந்து சக்தியாக இலக்கியத் துறையில் செயல்படுகிற ஒரு தன்மையை −ன்றைக்கு நாம் காணவில்லை. ஆனால், பல்வேறு தமிழ்த் தேசிய இயக்கங்களும் அந்தச் சிந்தனைக்குள்ளாகவே வந்தவர்கள். மார்க்சியக் கருத்தியலைத் தங்கள் சிந்தனைகளோடு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு மார்க்சியச் சிந்தனைகள் உந்து சக்தியாக ஊட்டம் கொடுத்து வளர்த்து வந்திருக்கிறது. அந்த மாதிரியெல்லாம் ஈழத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் தேசிய விடுதலை சார்ந்த இலக்கியங்களுடைய வளர்ச்சிக்கும் வெளிப்படையாக, மறைமுகமாக மார்க்சிய சித்தாந்தம் உந்து சக்தியாக, பின்புலமாகச் செயல்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.
சோஷலிச யதார்த்தவாதப் படைப்புகள் தோல்வியடைந்து விட்டதாக ஒரு கருத்து நிலவுகிறதே?
அப்படிச் சொல்ல முடியாது. சோஷலிச யதார்த்தவாதம் என்கிற சித்தாந்தத்தை மையமாகக் கொண்டு அதனடிப்படையில் படைப்புகளை எழுப்பியவர்கள் பெருமளவிற்கு வெற்றி பெற்றவர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்களுடைய படைப்புகள் பெருமளவிற்கு வாசகர் வட்டத்தைப் பெற்றுத்தான் −ருக்கின்றன. சில வர்க்க முரண்பாடுகளை −வர்களுடைய படைப்புகள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. ஆனால், அதை மிக எளிமைப்படுத்திய பாங்கிலே கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் அந்த முரண்பாடுகள் பிரச்சனைகளை வெளிப்படுத்தி −த்தகைய சமூகப் பிரச்சனைகள் உண்டு என்பதை அரங்குக்குக் கொண்டு வந்ததில் முக்கியமான பங்கு சோஷலிச யதார்த்தவாதப் படைப்புகளுக்கு உண்டு. எனவே அவை கலைரீதியாகத் தோல்வி பெற்ற ஒன்றாகக் கருத முடியாது.
ஈழக் கவிதைகளின் செறிவு ஈழத்து முற்போக்கு நாவலில் காணக் கிடைப்பதில்லையே? உதாரணமாக செ. கணேசலிங்கன் போன்றோரின் நாவல்களில் கட்டுரைத் தன்மையே மிகுந்திருப்பதாகத் தெரிகிறதே?
மார்க்சிய முற்போக்கு இலக்கியம் மிக எளிமைப்படுத்தப்பட்ட அல்லது மிகவும் சூத்திரமயமாக்கப்பட்ட போக்கிலேயே செ. கணேசலிங்கத்தின் எழுத்துக்களைக் காணலாம். அவர் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அக் கொள்கை விளக்கத்திற்கு ஏற்ற முறையில் அவருடைய படைப்புகளை நிறுவுகிறார். ஆனால் செ. கணேசலிங்கனுக்கும் பரந்துபட்ட ஒரு வாசகர் கூட்டமிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. அவர் கொள்கைகளைப் பரப்புவதற்குத் தன் நாவல்களைப் பிரச்சாரச் சாதனமாகப் பார்க்கிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் மு. வரதராசனுடைய ஒரு முற்போக்குத் தொடர்ச்சியாகவே கணேசலிங்கனைச் சொல்லலாம். மு. வரதராசன் தமிழ்ப் பண்பாட்டுப் பிரச்சனைகள், குறள் விழுமியங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு தன் கதாபாத்திரங்களை உருவாக்குகிறார். சில லட்சியங்களை வெளிப்படுத்துவதைத்தான் கலையினுடைய நோக்கமாக மு. வரதராசனும் கருதுகிறார். −ந்த வகையிலேயே கணேசலிங்கனைப் புரிந்து கொள்ள வேண்டும். அனுபவத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் சில கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதுவது மார்க்சிய இயக்க எழுத்தாளர்களிடம் மட்டுமல்ல; மார்க்சிய இயக்கம் சாராத படைப்பாளிகளிடமும் −த்தகைய பிரச்சினைகளைக் காண முடிகிறது. முற்போக்கு இலக்கியவாதிகளுக்கு மட்டும்தான் அழகியல் குறைபாடுகளிருக்கிறது என்று சொல்லி விட முடியாது.
ஈழத்தில் முற்போக்கு மார்க்சிய இயக்கங்கள் தலித்தியத்தைக் கையிலெடுத்துச் செயல்பட்டிருக்கின்றனவா?
முற்போக்கு இயக்கங்களின் போராட்ட அம்சமாக 50, 60-களில் தாழ்த்தப்பட்ட மக்கள், பஞ்சமர்கள் பிரச்சினைகளை மார்க்சிய இயக்கங்கள் முன்னெடுத்துச் சென்றிருக்கின்றன. அந்த வகையில் மார்க்சிய இயக்கங்களோடு ஈடுபாடு கொண்ட எழுத்தாளர்கள் தலித்தியம் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார்கள்.
தலித்தியம் ஒரு வகையில் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறது. பிறகெப்படி மார்க்சியம் தலித்தியத்தைத் தன்னோடு −ணைத்துக் கொண்டு முன்னெடுத்துச் செல்ல முடியும்?
மார்க்சியம் வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. தலித்தியம் என்று வரும்பொழுது −ங்கு வர்க்கமல்ல பிரதானம்; சாதியமைப்புதான் பிரதானமாகயிருக்கிறது. அந்த அடிப்படையில் −ந்த தலித் இயக்கம் மார்க்சிய இயக்கத்திலிருந்து தனிப்பட்டது என்று சொல்லலாம். ஆனால் வர்க்கக் கட்டுமானத்தைப் பார்க்கும்பொழுது −ந்தியாவைப் பொறுத்தவரையில் தலித்துகள் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கமாகயிருக்கிறார்கள் என்று அடையாளப்படுத்துபவர்கள் −ருக்கிறார்கள். ஆனால் தலித்துகளுக்கு உள்ளேயே மத்திய தர வர்க்கம் ஒன்று உருவாகி வந்துள்ளது. தலித்தியம் என்பது மேலிருந்து வந்த −ந்த மத்திய தர வர்க்கத்தின் சிந்தனைதான் கட்டமைப்புதான்.
பொதுவாகப் பார்ப்பனியம் அல்லது எதிர் பார்ப்பனியம் அல்லது தலித்தியம் என்று நாங்கள் பேசும்பொழுது −ந்தக் கோட்பாடுகள் எல்லாமே ஒரு மத்தியத் தர வர்க்கத்தினருடைய கோட்பாடுதான். ஏனெனில் ஒவ்வொரு −னக் குழுமத்திற்குள்ளேயும் −ருந்து ஒரு மத்தியத் தர வர்க்கம் உருவாகி வரும்பொழுது அது அதிகாரத்தில் அல்லது பொருளாதாரத்தில் முதன்மை பெறுவதற்கு முயற்சிக்கிறது. எனவே, −ந்தப் போட்டியின் அடிப்படையில்தான் தங்களுடைய அடையாளம் பற்றிய பிரச்சனைகளை முன் வைக்கிறார்கள். அதனால் −ந்தத் தனி அடையாளம் அல்லது சாதி அடையாளம் அல்லது மத அடையாளம் அல்லது −னத்துவ அடையாளம் −ந்த அடிப்படையில் பிரிந்த எல்லா இயக்கங்களையும் பார்த்தால், நான் நினைக்கிறேன் மத்திய தர வர்க்கத்தினுடைய சிந்தனைப் போக்கிருக்கிறது. பழைய மார்க்சியக் கலைச்சொல்லைப் பயன்படுத்திச் சொல்வதானால் −ந்த வகையான சிந்தனைகளை ஒரு வகையான 'குட்டி முதலாளித்துவச் சிந்தனைகள்' என்று சொல்லலாம். அந்த அடிப்படையில் −ந்த மாதிரியான அடையாளம் பற்றிய இயக்கங்கள் பற்றிக் கூர்ந்து பார்க்கும்பொழுது அவற்றிற்குள்ளே மேலிருந்து வரக்கூடிய மத்திய தர வர்க்கத்தின் வேலை நிமித்தம்தான் −ந்த அடையாளங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
முரண்பட்ட விமர்சனங்களின் போக்கு எப்படியிருக்க வேண்டும்?
என்னுடைய கருத்துக்களை அவ்வப்போது சொல்லியிருக்கிறேன். என்னுடைய கருத்துக்களைச் சொல்வதற்கு எனக்கு எவ்வளவு உரிமையிருக்கிறதோ அதே அளவு உரிமை பிறருக்கும் உண்டு. கருத்து வேறுபாட்டுச் சுதந்திரம் எல்லோருக்கும் −ருக்க வேண்டும். விமர்சனத்திற்கு உள்ளாகவும், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் −ருக்க வேண்டும். சமூகம் பன்முகப்பட்ட நிலையிலிருக்கும்பொழுது ஒரே கருத்துகள் −ருக்க முடியாது. பல்வேறு கருத்துகள் உருவாவதைத் தடுக்கவும் முடியாது. என்னுடையதுதான் சரி என்கிற வாதங்கள் என்னைப் பொறுத்தவரை அபத்தமானவை. விமர்சனத்தையும், பன்முகத்துவத்தையும் நாம் வரவேற்க வேண்டும்.
சந்திப்பு : சரவணன்
--
தியாகு
-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""
--- சே குவேரா
============================