சித்த மருத்துவமா பகல் கொள்ளையா?


 

அலோபதி மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியாத
நோய்களை குணப்படுத்த சித்த மருத்துவம் உள்பட பல
மாற்று மருத்துவத்தை பெரும்பாலும் மக்களும்
அரசாங்கமும் யோசித்துவரும் காலகட்டம் இது.

குழந்தையின்மை பிரச்சனைக்கு சென்னையில் உள்ள
பெண் டாக்டர் ஜமூனாவை நாடினார்கள் எனது நண்பரும்
அவரது மனைவியும் .

அனைத்து செக்கப்பகும் முடிந்தபின் அந்தபெண்ணுக்கு
கருப்பப்பைக்கு போகும் இரண்டு குழாய்களில் இடதுபக்கம்
குழாயில் அடைப்பு இருபப்தாக கூறினார்களாம்
சித்தமருத்துவத்தால் எதையும் சாதிக்கலாம் என ஆனந்தவிகடனில்
ஜம்பமாக அறிவிக்கை விட்ட இந்த
மருத்துவர் கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா
18 ஆயிரம் ரூபாய்கள் 18 மாதங்கள் என்பது முதல் தவணையாகவும்
இரண்டாவது கட்டத்துக்கு இது அதிகமாகும் என்றும்
சொல்லி ஒரு குண்டைத்தூக்கி போட்டு இருக்கிறார்
அதாவது அவரது கணக்குப்படி ஒரு தம்பதிக்கு சுமார் ஆறு லட்சம்
எனது கேள்விகள் இவைதாம்
மருந்துக்கு என்ன செலவாகும் என்பதை தனியாகவும்
மருத்துவரின் கட்டணம் அதாவது சேவை கட்டணம் எவ்வளவு என்றும்
ஏன் இவர்கள் பிரித்து சொல்வதில்லை
மேலும் வாங்கும் பணத்திற்கு ரசீதோ அல்லது அதற்கு
அத்தாச்சியோ ஏன் தருவதில்லை
மருத்துவம் என்ற பெயரில் இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்
இருக்கப்பட்டவன் கொடுக்கட்டும் என பலர் சும்மா திரும்பி
வந்துவிடுகிறார்கள் .
இவரது மருத்துவம் சரியானதாகவே இருக்கட்டும்
மிகபெரிய வெற்றியாளராகவே இருக்கட்டும்
ஆனால் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கலாமா?

 

 

--- சே குவேரா
============================

16 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post