எழுத்தாளன் ஆராயப்படவேண்டியவன் அல்ல - பாலகுமாரன்


நன்றி :அந்திமழை இணையதளம்
 
(இங்கே புளூ கலரில் இருப்பது எனது விமர்சனம்- தியாகு)

தமிழ் படிக்கத் தெரிந்த அனைவருக்கும் பரிச்சயமான நபர்களில் பாலகுமாரனும் ஒருவர். மீசை அரும்புகின்ற பருவத்தில் ஒரு சமூக அடையாளம் பெறும் பொருட்டு(அவரே கூறுவது) கணையாழியில் கவிதை எழுத ஆரம்பித்த இவரின் முதல் நாவல் சாவியில் தொடராக வந்த 'மெர்குரி பூக்கள்'. தொடர்ந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட நாவல்களைத் தந்து விட்ட பாலகுமாரன் அவர்கள் ஒரு தொலைக்காட்சித் தொடரையும் 'தாயுமானவன்',ஒரு திரைப்படத்தையும்'இது நம்ம ஆளு' இயக்கியுள்ளார். கால்நடை மருத்துவம் பற்றி 'செவ்வரளி'என்ற நாவலையும் எழுதியுள்ளார். பெண்களின் நுணுக்கமான பிறர் கையாளாத பிரச்சனைகளையும், இளைஞர்களின் லட்சிய வேட்கைகளையும் வாழும் உந்துதல்களையும் அதிகமாக அலசி ஆராய்ந்து எழுத்தில் வடிக்கும் பாலகுமாரனை மைலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் ஓர் அந்திப் பொழுதில் அந்திமழைக்காக சந்தித்த பொழுது-

எழுத்தாளனுடைய எழுத்தையும் அவன் வாழ்க்கையையும் சம்பந்தப்படுத்திப் பார்க்கும் முயற்சிகள் பற்றி?

ஒரு கதை எழுதிய பிறகு எழுத்தாளனுக்கு அதோடு சம்பந்தமில்லை வாசகர்கள் கைவிரல்கள் போல பலதரப்பட்டவர்கள்.அதில் ஒரு வகுப்பினர் - ஏதேனும் நினைத்துக் கொண்டு அல்லல்படலாம். நான் எவ்விதம் என்பது கதையில் செய்தியல்ல,என்னை அறிமுகப்படுத்தவும்,நான் கதை எழுதுவதில்லை. செய்திக்காக கதை நாயகன் போலும்,அல்லது வேறு விதமாகவும் இருக்கலாம். கதை வாசிப்பிற்கு பின் வாசகர்கள் கருவை சுமந்து கொண்டு போகலாம். எழுத்தாளன் ஆராயப்படவேண்டியவன் அல்ல.

எந்த ஒரு எழுத்தும் அந்த எழுத்தாளனின் வர்க்கத்தை அவன் சார்ந்து இயங்கும் சமூகத்தைத்தான் சொல்கிறது எழுத்தாளன் ஆராயப்படனும் எதற்கென்றால் அவன் யாரை பிரதிநிதித்துவ படுத்துகிறான் என்பதை அறிய

ஜனரஞ்சக பத்திரிக்கையில் எழுதுபவர்களுக்கு இலக்கிய அந்தஸ்த்து கொடுக்க மறுக்கும் விமர்சகர்கள் பற்றி...

ஒருவரை அங்கீகரிப்பதற்கோ அல்லது அங்கீகரிக்க மறுப்பதற்கோ இன்று வாழும் சகமனிதர் எவருக்கும் அதிகாரம் இல்லை. தற்குறியே தான் அங்கீகரித்ததாக கபடம் பேசுவான்,தான் அங்கீகரிக்கவில்லை என ஆணவம் காட்டுவான். காலம் மனிதரை விட பெரிய விஷயம், அதற்கு ஒரு இலக்கிய படைப்பை என்ன செய்ய வேண்டுமென்று தெரியும்.எழுத்தாளன் பணி எழுதிக்கொண்டிருப்பதே. வேறு எவர் அங்கீகரிப்பையும் நிராகரிப்பையும் எதிர் பார்ப்பவன் நல்ல எழுத்தாளன் அல்ல.

(எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி பேசி இருப்பார் என ஆச்சரியப்படுகிறேன் சமூக அங்கீராத்தை மலம் துடைக்கும் காகிதமாக பார்க்கும் இவர்களை போன்ற குப்பைகள் எதுக்கு எழுதுகிறார்கள் வெறும் பணத்துக்குத்தானே. சமூகத்தை அகங்காரத்தின் குறியீடாக நோக்குவதும் ஒரு தன்னகங்கார போக்குதான்   சமூகத்தின் அங்கீகரிப்பை உத்தேசித்தும் சமூகத்துக்கு எது தேவையோ அதையும் எழுதவேண்டும்  எதற்கும் கவலைப்படாமல் எழுதுபவர்கள் மனநோயாளிகள்தான் அவர்களது இடம் கீழ்பாக்கம்)

உங்களுடைய திரையுலக லட்சியமென்ன?

காசு சம்பாதிப்பது எல்லாரையும் போல்

(இந்த விசயத்தில் உண்மையை ஒத்துகொண்டதற்கு பாலகுமாரனுக்கு நன்றி)
தமிழ் திரையுலகின் இன்றைய நிலை என்ன?

நம் தமிழ் மக்கள் ரசனைக்கேற்ப வளர்ந்திருக்கிறது.

சில உண்மையான அரசியல் சம்பவங்களுக்கு கதையில் இடம் கொடுக்கும் உங்கள் பாணி பற்றி ....(உம்...இரண்டாவது சூரியன் ,உயிர் சுருள்,உள்ளம் விழித்தது மெல்ல.)

அரசியல் சம்பவங்கள் அங்கு முக்கியமில்லை. அது காரணம், அங்கே காரியம் வேறு. மேலும் இந்த நாவலினால் அந்த அரசியல் சம்பவத்திற்கு ஒரு ரிக்கார்டு ஆகும் யோக்கியதைக் கிடைக்கிறது.
(இந்த கதையை படிக்கவில்லை அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை எனும் போது இவர் பேசும் அரசியல் எதைபற்றியதுன்னு இவருக்குத்தான் தெரியும்)
கால்நடை மருத்துவம் பற்றி செவ்வரளி நாவல் எழுத உங்களைத் தூண்டியது எது...?

கால்நடை மருத்துவம் பற்றி சொல்லும் அளவிற்கு எனக்கு ஞானமில்லை. என் நண்பர் இராமநாதன் (கால்நடை மருத்துவர்) தன் அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ள அதை கதையாக்கினேன்.இராமநாதனுக்கு அந்த கதை முழுமையாக இல்லையே என்று ஒரு வருத்தம். கால்நடை மருத்துவராக இல்லாத இளைஞருக்கு செவ்வரளி பெரிய வியப்பை கொடுத்திருக்கும்.

எனக்கு பிடித்த நாவல் உந்துதல் மிக்க ஒரு இளைஞனின் தவிப்பை அது சொல்லி விட்டதாய் நினைக்கிறேன். கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் - செவ்வரளி வாங்கிப் படிக்க வேண்டும் என்னைப் பாராட்டும் பொருட்டல்ல, அந்த மருத்துவப் படிப்பை பற்றி இதைவிட ஒரு நல்ல நாவல் யாரேனும் எழுத மாட்டார்களா என்று ஆசையில் படிக்க நிர்பந்திக்கிறேன்.

கதைகளில் காமத்தை எந்த அளவிற்கு, ஏன் பயன்படுத்துகிறீர்கள்?

காமத்தை புரிந்து கொள்வதற்காக காமம் அருவருக்கத்தக்கதல்ல.இயல்பானது என்று சொல்வதற்காகவும்,அதனோடு மரியாதையாக இன்றைய இளைஞர்கள் சினேகம் கொள்ள வேண்டும் என்ற கவலையோடும் , அந்த கதையின் மையத்தில் ஒரு பிரச்சனைக்கு காரணமான, அல்லது அப்பிரச்சனையைத் தீர்க்கும் விசயமாக நான் செக்ஸ் பற்றி எழுதுகிறேன். நல்ல வாசகர்களை காமத்தால் மட்டும் கவர முடியாது. வெகு சீக்கிரம் புளித்துப்போகும் அமிர்தம் அது.
(காமத்தை எழுத்தில் பயன்படுத்துவது முதல் பாராவில் சொன்ன காசுக்குத்தான் அதை ஏன் சுத்தி வளைச்சு சொல்கிறார்னு தெரியலை
எழுத்தே பணத்துக்குத்தான் என முடிவாகிட்ட பிறகு ஒவ்வொன்னுக்கும் ஒரு புனித பட்டம் எதற்கு)
உங்களுக்குள் நிகழ்ந்திருக்கும் ஆன்மீக மாற்றம் பற்றி

தற்செயலாய், அல்லது விதிவசத்தால் அல்லது பூர்வஜென்ம புண்ணியத்தால் அல்லது இவைகளுக்கு உட்படாத ஏதோ ஒன்றினால் திருவண்ணாமலை மகான் யோகிராம் சுரத்குமாரைச் சந்தித்தேன். உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் மிக நல்ல மாற்றங்கள் எனக்குள் நிகழ்ந்தன.

(இவரது ஆன்மீக மாற்றம் என்பது மதம் எனும் புதைகுழியில் இன்னும் கொஞ்சபேரை கொண்டுபோய் தள்ள உதவலாம்
ஏனெனில் ஆன்மீகம் என ஆரம்பித்து காமத்தில் முடிக்கும் ஏராளமான எடுத்துக்காட்டுகள் இவரிடம் பார்த்து இருக்கிறேன்)

தங்களுக்கு பிடித்தமான எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பும் வாசகர்கள் பற்றி...?

மற்றவர்கள் எப்படியோ நான் தனியானவன், தனிமையில் இருக்கப் பிரியப்படுகிறவன். மிகுந்த அவசியமெனில் சில வாசகர்களோடு பேசுவதே வாடிக்கையாகிவிட்டால் எழுத்துப்பணி நின்று விடும். நிறைய பூக்கின்றது என்பதற்காக செடியை பிடுங்குவது கூடாது.தனிமை தான் எழுத்தின் ஆணிவேர்.
(என்ன பூக்குதுன்னு தெரியலை நிறைய பணம் கிடைக்குதுன்னு சொல்றீங்களா தனிமை என்பது என்னவென பெரிய தத்துவ ஆசிரியர் சொன்னதுபோல சொல்ல வேண்டும் தான் பெரிய ஆள்னு காமிச்சுக்க தனிமை பற்றி பேசுவது பரிதாபம்)
எழுத்தாளனுக்கும் அவனுடைய எழுத்துக்கும் உள்ள உறவு என்ன?

நான், என் எழுத்து இரண்டும் ஒன்றே.என் வாழ்வு குறித்து, சூழ்நிலை குறித்து எழும் சிந்தனைகள் ,கவலைகள் இவையே என் எழுத்துக்கள்.

(முரண்பாடா இருக்கே முதல் பாராவில் எழுத்தாளனை ஆராய கூடாது என்கிறார் இப்போ நானும் என் எழுத்தும் ஒன்றே
என்கிறார் அதாவது அடுத்தவன் ஆராய கூடாதுன்னு சொல்றாரோ)

கவிதையின் தற்போதைய நிலை என்ன?

இது கவிதைக்கான காலம் அல்ல. கதைகளின் காலம். கதை - அச்சு இயந்திரம் கொடுத்த விஞ்ஞானம் வளர்த்த மகோன்னத வரப்பிரசாதம். கதைகளில் வாசகர்களுக்கு தன் முகம் (Identification) தெரிகிறது.ஒரு பிரச்சனை பல கோணங்களில் அலசப்படுகிறது.சிந்தனை ஓட்டம் தூண்டப்படுகிறது.கதை பச்சை கேரட் என்றால் கவிதை Vitamin 'B' மாத்திரை .சத்து பொருத்தவரை இரண்டும் ஒன்றே. ஆனால் கதையில் சுவை அதிகம்.
(அட எனக்கு கதைமட்டும்தான் எழுத தெரியும் )
அனேகமாக உங்கள் கதைகளில் வரும் காதலர்களுக்கு வயது இருபத்தைந்திற்கு அதிகமாக இருப்பதன் காரணம்?

பெரும்பாலும் நம்மூர் பையனுக்கு இருபத்தைந்து வயதிற்கு பின் தான் நிதானம் வருகிறது.அப்பாவிடம் காசு வாங்கி கல்லூரி வாசலில் பீர் குடிக்கிற காலேஜ் பையனை நான் காதலிக்க விடுவதில்லை, விரும்புவதில்லை.

இவர்கள் தான் என்னுடைய வாசகர்கள் என்று ஏதேனும் தீர்மானம் உங்களுக்கு இருக்கிறதா?

தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள், கதை படிக்கும் ஆவல் உள்ளவர்கள் அனைவருக்கும் எழுதுகிறேன்.ஆனால் இங்கே தமிழ் படிக்கத் தெரிந்து,கதை படிக்கும் ஆவல் இல்லாதவர்களே அதிகம்.

கு.ப.ரா- தி.ஜானகிராமன் - பாலகுமாரன் இம்மூவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறப்படும் விமர்சன கூற்று குறித்து...?

இது மேம்போக்கான கூற்று தமிழ் இலக்கிய விமர்சனம் இதுவரை சரியாக செய்யப்படவில்லை,செய்கின்ற அக்கறை யாருக்கும் இல்லை.கேள்விக்கு பதிலாக எனக்கு கு.ப.ரா, தி.ஜா மூவருக்கும் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம். மண்தொடர்பு உண்டு - இது மட்டுமே உண்டு.

உங்கள் வெற்றியின் காரணம்...

உழைப்பு, கடுமையான உழைப்பு, அயர்ந்து படுக்கையில் தூங்கும் வரை அசராத உழைப்பு, உழைப்பதில் ஆசையுள்ளவன் நான்...ஆசையோடு உழைத்தவர்கள் தோற்றதில்லை.

எழுத்தாளன் ஆக என்ன செய்ய வேண்டும்?

தன் தனிமையை தானே உணர்வது,தமிழ் மொழி பயிற்சியும் , ஆங்கில அறிவும் எழுத்தாளனாக ஆகிவிடும் வெறியும் இருப்பின் ஒரு வேளை எழுத்தாளன் ஆகலாம்.
(அடேங்கப்பா சமூகத்தை நோக்கவே வேணாம் மொழிதெரிந்தால் போதும் எழுத்தாளம் ஆகிடலாம் பின்ன படைப்புகள் எப்படி இருக்கும் தன்னை சுற்றியே இருக்கும் )
அதைப்பற்றி நாவலும் ,கவிதைகளும் எழுதுமளவிற்கு குதிரை உங்களை கவர்ந்ததன் காரணம் என்ன...?

குதிரையும் கடின உழைப்பும் குதிரையும் முன்னேறுகிற ஆசையும், குதிரையும் தனிமையும் ஒரே மாதிரி விசயங்கள். என்னுள் இந்த குதிரை தன்மைகள் அதிகம் இருக்கலாம்.அதனால் குதிரை பிடித்திருக்கலாம்.

(குதிரைகள் உபயோகிக்கப்பட்ட காலத்தை கடந்து வந்துட்டோம் ஆனால் இவரது உழைப்புக்கு குதிரையை விட கழுதைதான் சரியான உதாரணம்ன்னு சொல்வது நிஜம்)
[எழுத்திற்கு பின் இருக்கும் பாலகுமாரனை புரிந்து கொள்ளும் முயற்சியாக எடுக்கப்பட்ட பேட்டி.
சந்தித்தவர்: ந.இளங்கோவன்
நாள் 2/9/92] 
 
 


--
தியாகு

-
மாறுதல் என்ற வார்த்தையை தவிர அனைத்தும்
மாற்றத்துக்கு உட்பட்டவை -மார்க்ஸ்

--
தியாகு

-
மாறுதல் என்ற வார்த்தையை தவிர அனைத்தும்
மாற்றத்துக்கு உட்பட்டவை -மார்க்ஸ்

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post