டாக்டர்கள் ஒரு வருடம் கிராமபுரங்களின் இலவச சேவை செய்ய போக மறுத்து போராட்டம் நடத்துகிறார்கள்.
பல கிராம மருத்துவமனைகளில் டாக்டர்களே இல்லை என்ற காரணத்தினால் அரசு இந்த நடவடிக்கை எடுத்ததாக சொல்கிறார் மத்திய அமைச்சர் அன்புமணி
எங்களுக்கு நிரந்தர பணி கொடுத்தால் நாங்கள் செல்ல தயார் என்கிறார்கள் நமது இளைய டாக்டர்கள் இவர்கள் சொல்வது என்னவென்றால் மருத்துவர்களை அரசு நியமிக்காமல் இருக்கவே படிக்கும் மாணவர்களை வைத்து ஒப்பேத்த நினைப்பதாக சொல்கிறார்கள் .
யார் சொல்வது சரி
இதற்கு முன்பு கிராம புரங்களில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் தங்களது செல்வாக்கையும் செல்வத்தையும் மாற்றல் வாங்கி கொண்டு சென்றுவிட்டதை சுட்டி காட்டும் அன்புமணி இதனால் கிராமபுரத்தில் மருத்துவர்களே இல்லை என்ற நிலமைதான் மிஞ்சியது என்கிறார்.
அரசு தரப்பின் நியாயம் பற்றி நாம் பேசும் முன்பு
மருத்துவம் படிக்கும் இந்த இளைய டாக்டர்கள் என்ன காரணத்தினால் போராடுகிறார்கள் என பார்ப்போம்
1.ஒரு டாக்டருக்கு அவர் படிப்பதற்கு இந்த அரசாங்கம்
சுமார் 10 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது . தனது படிப்பு காலத்தில் ஒரு வருடம் கிராம சேவைக்கு நீங்கள் ஏன் ஒதுக்க கூடாது என்ன குறைந்துவிடும்
உண்மையில் மகிழ்ச்சியோடு இதை ஏற்று கொண்டுஇருக்கவேண்டும்
2. அப்படி ஏற்று கொண்டு ஒரு சில வருடம் கழித்து நீங்கள் நிரந்தர பணி கோரி போராடி இருந்தால் மக்கள்
கண்டிப்பாக உங்கள் பின் திரண்டு இருப்பார்கள்
நீங்களே பட்டினி போராட்டம் நடத்த வேண்டி இருந்து இருக்காது .
3.நீங்கள் சொல்வதில் ஒரு அக்கரை இருப்பது மாதிரி தெரிந்தாலும் இதன் அடிப்படை உங்களது சுயநலம்தான்
என தெள்ளதெளிவாக தெரிகிறது மக்களுக்கு
அரசு பணி ஏன் தருவதில்லை என்பது சரியான பதில் அல்லவே
4.நீ சேவை செய் என்றால் நீ என்னை பணி நிரந்தரமாக்கு என்பது என்ன நியாயம்
5. மக்கள் பணத்தில் படித்து மக்களுக்கு சேவை செய்ய மாட்டோம் என சொல்வதற்கு கொஞ்சம் மனசாட்சி இல்லாமல்தான் இருக்கனும்
6.பணி நிரந்தரம் அல்லது பணி இழக்க செய்வதற்கு அப்பால் ஒரு நியாயம் இருக்கிறது அதுதான் கிராமபுரங்களில் இருக்கும் மக்களுக்கு மருந்தும் மருத்துவமும் இல்லை என்பது அதை பற்றி உங்கள் கருத்து சுயநலதொணியில் இருப்பது
ரொம்ப அவமானகரமானது
தியாகு
-
மாறுதல் என்ற வார்த்தையை தவிர அனைத்தும்
மாற்றத்துக்கு உட்பட்டவை -மார்க்ஸ்