செல்லாவுக்கும் இன்னொருவருக்கும்

கடைசியில் நீ
கடித்தே விட்டாய்

முழுவதும் அறிந்த
முட்டாள் என உனை
முழுமையாய் எப்படி
சொல்வேன்!

புழுதிகள் உயர
பறக்கலாம் நண்பா
பொழுதுகள் விடிய
அது புலமா

சூரியன் கடலில்
மூழ்கலாம் நண்பா
இருளின் ஆட்சி
நிஜமா

கொடுப்பதும்எடுப்பதும்
இலாதொரு  அறிவை
குடங்களில்
அடைக்க உளமா

நடிப்பது உலகின்
இயல்பு எனவே
நடிப்பதை
கற்று தரவா

விளம்பர உலகில்
நடக்கலாம் எனில்
விளம்பர
பொம்மையா நீயும்

தத்துவம் வாழ்வின்
தரிசனம் என்றால்
கித்துவம்
பேசுகின்றாய்

நடப்பது போரெனில்
நீயும் பிடிலை
நகைக்கவே
ஊதுகின்றாய்

இதம்பட சொல்லினும்
வர்க்கம் உன்னை
இடிக்கவே
சொல்கிறது !

தனிஒரு தாக்குதல்
இல்லை
இதுவொரு
வர்க்க தாக்குதல்
உணரு!







--
தியாகு

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post