நகாசு பட்டென்றும்
நட்சத்திர பட்டென்றும்
நகண்டு திரிகிறது
ஒரு கூட்டம்
ஒரு வேளை சோத்துக்கு
உழைத்து மாடாய்
உருகி திரிகிறது
இன்னொரு கூட்டம்
புளிச்ச ஏப்பத்தின்
புளிப்பு வாடையை
பெருத்த பகட்டாய்
பேசுது ஒரு கூட்டம்
பசிச்ச வயிறுக்கு
பலகாரம் கேடான்னு
நலிந்து போனது
இன்னொரு கூட்டம்
கந்தல் கட்டிய
கணவானை (காந்தி)
தலைவனாய்
பேசிதிரியுது
முதல் கூட்டம்
ஒரு பயலும்
தலைவனில்லையென
எதிர்த்து நிற்கிறது
பிந்திய கூட்டம்
புளிச்ச கூட்டம்
புரிந்து கொள்ளாது
பசிச்ச கூட்டத்தை
பசிச்ச கூட்டம்
அறியுமா
நகாசு பட்டை யோ
நாயுடுத்தும் பட்டையோ
--