இராமர் பாலத்தை பத்தி எல்லாரும் பேசுகிறார்கள் ஆனா
இராமர் நடந்த ரோடு எங்க ஊரில் இருந்து இராமநாதபுரம் வரை போகுது .
அட கொப்புறான இதுபார்றா புதுதகவல் என அத்வானி
வகையறா சூலாயுதத்துடன் ஆஜர்.
எங்கய்யை எங்க இருக்கு இராமர் நடந்த ரோடு .
இதோ இங்க தோண்டுங்க வரும்னான்.
தோண்ட தோண்ட மண்ணா வந்தது
என்னடா வெறும் மண்தானே வருதுன்னதும்
அட வெங்காயம் அந்தகாலத்தில ஏதுடா தாரு
அதனால மண்ணுதான் வரும் அப்படின்னான் நம்ம
ஆளு
சரி இன்னும் தோண்டுவோம்னு தோண்ட ஆரம்பிச்சானுக
இதற்கிடையே அத்வானிக்கு விசயம் தெரிந்து
அவர் தனது ரதத்தை எடுக்க சொல்லிவிட்டார் .
வீட்டுக்கு ஒரு ஆள் இராமர் ரோட்டை தோண்ட
வேணும் என்றும்
ஆளுக்கு ஒரு தட்டும் மண்வெட்டியும் வேணும் என்று
தண்டோரா போடாம அறிவிச்சடு ப.ஜக
புராண இதிகாசங்களில் அத்தகைய ரோடு
இருந்ததுக்கான
ஆதாரங்களை தேட சொல்லி இந்தி ,தமிழ் அறிஞர்
களுக்கு செய்தி பறந்தது .
சன் ராஜ் என உள்ளூர் டிவி பொட்டி காரன்ல இருந்து
அசலூர் சி என் என் பிபிசி என எல்லாம் வேட்டியை
சே பேண்டை மடிச்சு கட்டி களத்துல இறங்கிட்டானுவ
"ஏ இராமா எல்லாம் உனது கிருபைன்னு " அம்மணகட்ட சாமியார்கள் வந்து டெண்டு போட்டு
கஞ்சா செடிய தூளாக்கி ஹூக்கா குடிச்சுகிட்டே
இராம இராம இராம் னு பாட ஆரம்பிச்சுட்டானுக
அங்க கடைபோட்டு இருந்த ராமசாமிக்கு நல்ல வசூல்
ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் வித்தவன்
இப்போ காவிதுணி விக்கிறான் கோமணம் முதல் துண்டு வரை அனைத்து விக்கிறான் விபூதி ஜவ்வாது சந்தனம்
என அவன் கடை வியாபாரம் ரெக்கை கட்டி பறக்குது .
ஏன் சூலாயுதம் கூட விக்கிறானாம்.
ஒரு நாள் ஆச்சு இரண்டு நாள் ஆச்சி
உள்ளூர்காரனுக அசரவும் வடநாட்டு காரனுக குழிக்குள்ள இறங்கி அள்ளுறானுக மண்ணை
ராம் ராம்னு .
இதை கேள்வி பட்டு கலைஞர் அதாங்க பத்து வருசத்துக்கு முன்ன ஆட்சில இருந்தாரே அவரு
ராமனா "அது யார் எந்த பள்ளி கூடத்துல படிச்சார் "
என கேட்க போக .
உடனே திண்ணையில் எழுதும் மலர்மன்னன் கோஸ்டி "ஆ ! இந்து மதம் எப்பேர் பட்ட மதம், ராமன்தான் ஒவ்வொரு சிறுவனும்
சீதைதான் ஒவ்வொரு சிறுமியும் என சிந்திக்கும்
இந்தியாவில் வந்து இராமனை பார்த்து யாருன்னா கேட்டார் அந்த ஆளு ".
"இதெல்லாம் புவியியலாளர்கள் அல்லவா சொல்லவேண்டும் இங்க ஒரு ரோடு இல்லைன்னு இவர் யார் சொல்வதற்கு".
"பாதம்னா என்ன அது கால் காலை எங்க வைப்போம்
ரோட்டில வைப்போம் இராமர் பாதம் என சில இடங்களில் இருப்பதாலும் ,
இராமர் எல்லா இடங்களிலும் நடந்து இருப்பதாலும்
இங்கே இருப்பது நமது இராமர் நடந்த ரோடே
இதில் மாற்று கருத்து இல்லைன்னு "அறிக்கை விட
"எங்கள் மத நம்பிக்கையில் கேள்வி கேட்காதேன்னு"
எல்லா பயலும் கூவ ஆரம்பிச்சுட்டான்னா பார்த்துக்கங்க.
"இத்தகைய சீனா கவர்ந்துகொண்ட நிலத்தைப் பற்றிச் சர்வ சாதாரணமாகக் கருதிய நேருவின் வழி வந்தவர்களின் கையில்தான் இன்று அதிகாரம் உள்ளது " என எழுத ஆரம்பிச்சுட்டார் மலர்மன்னன்.
இமயத்தில் மீன் கொடி பறந்ததை நிரூபிக்க முடியுமா ?
கண்ணகி மதுரையை எரிச்ச சாம்பலை காட்ட முடியுமா?
இன்றைக்கு ரோட்டை தோண்ட வேண்டாம் என நம்மை புண்படுத்துபவர்கள்
நாளை நம்மை ரோட்டில் நடக்க விடுவார்களா? சிந்திக்க வேண்டும்.
ராமர் சீனாவுக்கு சென்றதாக (இராவனனை தேடி ) ஒரு இராமயணம் சொல்கிறது
அடுத்து நாங்கள் சீனாவின் தெருக்களை தோண்டுவோம் "
என எழுதி தள்ளவும் குவிக்கவுமாக இருந்தார்கள் மக்கள்.
சரி தோண்டுனவன் என்னானான்னு கேட்கிறீங்களா.
அட அவன் தோண்டி தோண்டி பூமியை ஓட்டை போட்டு அப்பாலைக்கா அமெரிக்காவில போய் எந்திருச்சு பார்த்தா . அங்க வந்தது பாரு ரோடு .
தப்பி இவன் வந்தான் ரோட்டுக்கு நடுவில.
அமெரிக்க போலிஸ் இவனுகளை விசா இல்லாமல் வந்த குத்ததுக்காக புடிச்சி செயில்ல போட்டாங்களாம்
அமெரிக்க செயில்ல போயி இவனுங்க கலாசாரம் சார்ந்த கலிதான் வேணும்னு சொல்றானுகலாம்
இந்த கூத்த எங்கபோயி சொல்றது :)
--