சிவாஜி படம் ஓடும் தியேட்டர் பக்கத்தில்
நம்ம ராம பக்தர்கள்
கோசமிட்டவாறு செல்ல
அதாங்க /// பனமரத்துல வவ்வாலா
அத்வானிக்கே சவாலா //
ன்னுட்டு
கத்திகிட்டே போகவும் .
நம்ம பாஸ் பாஸ் மொட்ட பாஸ் ரசிகன் கேட்டான்
யோவ் என்னாத்துக்கு எல்லா கூட்டமா போறீங்க ?
ன்னவும்
" அட உனக்கு தெரியாதா இந்த கருணாநிதி எங்க
தலைவன் அத்வானிக்கே சவால் விட்டுடாருப்பா அதான்
ஊர்வலமா போறோம் "
" ஓ அப்படியா எதுக்கு சவால் விட்டார் "
"அதான் ராமன் இருந்தாருள்ள எங்க கடவுள் அவரு
கட்டிங் போட்டாருன்னு சொன்னாரு அதுக்கு அத்வானி
கண்டிச்சாரு அதான் ஒண்டிக்கு ஒண்டி கூப்பிடராரு
கருணாநிதி "
"ஓ அப்படியா"
"ஏம்மா சவால் விட்டா சந்திக்க வேண்டியதுதானே"
"இன்னா நீ இப்படி சொல்லிட்ட அவர்கிட்ட யாராவது
சவால் விடமுடியுமா .
ஈராக் பிரச்சனைக்கு புஸ்ஸுக்கு சவால் விடுவாரா
மன்மோகன் சிங் .
அல்லாங்காட்டி பின்லேடனை புஸ்சுதான் ஒண்டிக்கு
ஒண்டி கூப்பிடுவாரா "
" அட போய்யா இவரு இந்தியாவிலதானே இருக்காரு
பேச கூப்பிட்டா வரவேண்டியதுதானே . என் தலைவனா
இருந்தா இந்நேரம் கிளம்பி இருப்பார்"
"உங்க தலைவன் என்னாத்த கிழிச்சாரு ஒரே ஆளா நூறு பேர சினிமால அடிப்பாரு நீங்களும் கைதட்டி
கும்பிடு போட்டு குஜாலாகிடுவீங்க "
"ஏ ஏ இரு இரு இன்னா நீ திடீருன்னு என் தலைவனை
பத்தி தப்பா பேசுற . எதோ போனா போகுதுன்னு உன்னண்ட பேசினா ரொம்ப கலாய்கிற . உன் தலைவன்
இராமன் மட்டும் இன்னாவாம் கடல்ல பாலம் போட்டாராம் இத நாங்க நம்பனுமா? "
"ஏப்பா சினிமாவில செய்யறதெல்லாம் பொய் , ஆனா இராமர் அனில் முதுகுல போட்ட கோடே அழியல
இதுலர்ந்து தெரியல அவர் எம்மாம்பெரிய கடவுளுன்னு"
"இத பார்ரா டகால்டி வேலைய இந்த கதையெல்லாம்
பெரியார் கிழவன் ஏற்கனவே கிழிச்சுட்டான் கோடு போட்டாராம் கோடு . அப்ப சீதை முதுகுல எங்க கோட்ட காணோம்"
" ஏ நீ ரொம்ப உடாதா உங்காலு சிவாஜி படத்துல எப்படி நூறு காரை அடிச்சு உடச்சு தப்பிகிறார் .
அப்பாலிக்கா செத்து பிறகு உயிர் வருது இதெல்லாம் டகால்டி இல்லையா"
" யோவ் என் தலைவன் நேரடியா சண்டை போடுவான்
உன் ஆளு மரத்துக்கு பின்னால நின்னு அடிப்பான் இதா வீரம் "
" அட நீ வேற அவரு நேரடி சண்டை எத்தனை தபா போட்டு இருக்காரு . "
"சரி இராமர் எந்த காலத்துல வாழ்ந்தாருன்னே உனக்கு தெரியாது எதுக்கு நீங்க ராமர் பாலம்னு தகாராரு பன்றீங்க சுத்த பேஜாருப்பா உங்களோட "
"இத பார் நீ எப்படி ரஜினியை நம்புறியோ அதே மாதிரி தான் நான் இராமர் இருந்தாரு அப்படின்னு நம்புறேன் "
பாலம் போட்டாரு எல்லாம் உண்மைன்னு என்னான்ரே
மவனே எவனாவது நம்பிக்கைல கேள்வி கேட்டான்னு வைய்யு ஒரே சொருகுதான்"
"இத பார்ரா நான் ரஜினி செய்றதெல்லாம் பொய்யுன்னா
நீ ராமன் செய்ததெல்லாம் பொய்யின்னு சொல்லிடுவயா"
"நான் ஏன் சொல்லபோறேன் . நீ எல்லாம் எப்படி வேணா பேசுவ ஆனா நாங்க வானர படை ஒரே மாதிரி தான் பேசுவோம் "
இராம் இராம் என கிளம்பிட்டார் ராம பக்தன்
--
தியாகு