அன்புள்ள சுகுணாவுக்கு
வணக்கம் தோழர் ,
உங்கள் கவிதைகளில் சில படித்தபின் நான் லெகுலரா உங்க பிளாக்குகளை படிக்க ஆரம்பித்தேன்
உங்கள் எழுத்துக்கள் புரிகிறமாதிரி தோணும் ஒரு நாள் நல்லா புரிந்துவிடும் எனும் நிலையில்
நீங்கள் விலகுவதா அறிவித்தது வருந்த தக்கது .
என்னை பொருத்தவரை யாரும் வலையுலகை விட்டு போவதை நான் விரும்புவதில்லை .
(டோண்டு மட்டும் போகனும்னு நினைக்கிறீங்களான்னு பாலா கேட்கிறார்)
மாற்று கருத்து கொண்டுள்ளவங்களா இருந்தாலும் தனது
நிலைபாட்டை எழுத்தில் தொடரனும் என்பதுதான்
எனது நிலைபாடு.
(அரிவால் வச்சிருக்கேன் நேர்ல வாடா என்பது சுத்த
சின்னபுள்ள தனம்)
தோழர்கள் அசுரன் அவர்களது விவாதத்தை பார்த்து
அசந்து போய் முத்தமிழில் அவருக்கான ஆதரவு குரல்
கொடுக்க ஆரம்பித்தேன் பிறகு அது போதாத இடம் என நகர்வு தமிழ் மணம் நோக்கி வந்தது.
இங்கு எழுதும் நபர்களில் அசுரன், நீங்கள் எல்லாம்தான்
ஓரளவு விசயம் தெரிந்த நபர்கள் .
முதலாளித்துவ ஆதரவில் எழுதும் அல்லது பார்பனிய ஆதரவில் எழுதும் நபர்கள் எல்லாம்
சும்மா தற்பாதுகாப்பு எழுதுகிறார்களே தவிர ஒண்ணும் பெரிய
அளவுக்கு காற்றை திருப்பும் விதமான எழுதாற்றல் எல்லாம் கிடையாது .
(என்னை பற்றி கேட்கிறீர்களா நான் எனக்கு தெரிந்ததை எழுதி வருகிறேன் நான் புத்திசாலி
அடுத்து இருக்கிற எவனுக்கு அறிவே இல்லைன்னு எல்லாம் சொல்லமாட்டேன் .
நானெல்லாம் சுமார் ரகம்னு தோழர்கள் சொல்றாங்க எதிரிகள் என்னை ஆழ்ந்த அறிவு இல்லாத
நட்டுன்னு ஆங்கித்தில் திட்டுகிறார்கள் :,))
தமிழச்சியை பத்தி சொல்லனும்னா அவங்க எல்லாம் பிரதி எடுக்கிறாங்க அவ்ளோதான் .
மத்தபடி காமெடி பார்ட்டிகள் நிறையபேர் இருக்கோம் (என்னை மாதிரி)
சரி விசயத்துக்கு வாங்க , ஜாதி புத்தின்னு வளர்மதி எழுதி இருக்க கூடாது , உங்க பணத்தை வாங்கிட்டு
தராமல் ஏமாத்தி இருக்க கூடாது .
இதில பணவிசயமா என்ன நடந்ததுன்னு வளர்மதிதான் சொல்லனும்
ஆனால் என்னால் மன்னிக்க முடியாத ஒரே விசயம் ஜாதி புத்தின்னு சொல்வதுதான் .
அதற்கு என் கண்டனங்களை பதிவு செய்கிறேன் .
வளர்மதிக்கு என்னுடைய கேள்விகள் இதுதான்
அவர் காப்பி அடிச்சு எழுதுனா என்ன ஆப்பி அடிச்சு
எழுதுனா உங்களுக்கு என்ன தோழர்
நீங்க உங்களால் இந்த சமூகத்துக்கு என்ன தரமுடியுமோ
அதை கொடுங்களேன்
அதை விடுத்து அவனுக்கு அது தெரியாது இது தெரியாதுன்னு
அறிவு போலீஸ் வேலை உங்களுக்கு யார் கொடுத்தாங்க
அல்லது உங்களை நாங்க வந்து கேட்டோமா
தோழர் இவருக்கு விசயம் இருக்கா இல்லையான்னு
புரியாத வார்த்தை மூலம் நீங்க எத்தனை பக்கத்துக்கு விளக்கம்
அளித்தாலும் ஒரு சின்ன பையன் கூட சொல்லிடுவான் நீங்க சுகுணாகிட்ட
வம்பு இழுக்கிறீங்கன்னு .
போனில் பேசினேன் ரொம்ப மனவருத்தத்தில் இருந்தார் நேற்று
எனக்கு என்ன சொல்லனும்னே தெரியலை .
ஊரே சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் அளவு கொடூரமான மனநிலை கொண்டவரா சுகுணா
இல்லைங்க போலி மேட்டரில் அவர் தனது கருத்தை சொன்னதுக்கு பின்நவீனத்துவம் அது இதுன்னு
நிறைய பேரு அவரை நோகடிச்சாங்க அதுக்கெல்லாம் அவர் விலகுறேன்னு சொல்லவில்லையே
எனக்கு கூட அவர்மேல கோபம் வந்தது அவர் பிளாக்கில் போய் கோபமா பின்னூட்டம்
போட்டேன் பிறகு விளக்கம் சொன்னார் முடிந்தது மேட்டர்.
ஆனா நீங்க செய்தது ரொம்ப ஓவருங்க (ஜாதிபுத்தி அது இதுன்னு என்னங்க நீங்க)
ஜாதி உணர்வுடன் நான் இந்த ஜாதின்னு அவர் எங்கயாவது சொல்லி இருந்தார்
எனில் அவரை கண்டிக்கலாம்
தான் இந்த ஜாதி என அகம்பாவத்துடன் திரியும் மட்டைகளை கண்டால் எனக்கும்
பிடிக்காது .
ஆனால் சுகுணாவின் எழுத்துக்களில் சாதிய ஆதரவு இல்லாமல் இருக்கும்போது
அவரை நீங்கள் சாடியது தவறே.
அன்புள்ள சுகுணாவுக்கு :
நீங்கள் மறுபடி எழுத வரனும் என்போன்றவர்களுடன் நிறைய
சண்டை போடனும் .
அதான் என்னோட வேண்டுகோள்
உங்களை நேரில் பார்த்தது இல்லை ஆனாலும் பேசியபோதே தோழன் எனும்
ஒரு மனரீதியான ஒட்டுதல் ஏற்பட்டு விட்டது .
மீண்டும் எழுதுங்கள் இல்லைன்னா ஒரு கவிதை போட்டு
உங்களை நான் இம்சை பண்ணுவேன் :))
--
தியாகு