அதைத்தான் குவாலிட்டி மேனேஜ்மெண்டு சிஸ்டம் (QMS)என அழைப்பார்கள்
அதாவது உங்கள் மேலாண்மை சரியா இருந்தா பொருளின் தரமும் சரியா
இருக்கும் என்ற லாஜிக்கில் தரப்படுவது இந்த சான்றிதழ் .
உதாரணமாக எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பனியன் தரமானதுதானா
என்பதை எங்கள் நுகர்வாளருக்கு நாங்கள் எப்படி தெரிவிப்பது .
நாங்கள் விளம்பரம் செய்யலாம் ஆனால் விளம்பரத்தின் மூலம் நாம்
சொல்வதைத்தான் நுகர்வாளர் பார்கிறார் .அதை நம்பாமலும் போகலாம்.
இப்போ இடையில் ஒரு நபர் தேவைபடுகிறார் . அவர்தான் இந்த
சான்றிதழ் வழங்கும் நிறுவனம் . (மற்றபடி இதுக்கு ஆங்கிலத்தில் பல
வார்த்தைகளை கோர்வைபடுத்தி சொல்லும் வாங்கியங்கள் இருக்கு அதை சொன்னா நிறைய பேர் ஓடிடுவாங்க அதான் சொல்லலை;)
இதுக்கு த்மிழ் விக்கி பீடியா அடிப்படையான சில கேள்விகளுக்கு மட்டும்
அருமையான பதில் அளிச்சு இருக்காங்க அதை ஏன் நாம திரும்ப ரீ இன்வெண்டு பண்ணனும்னு அதையே அப்படியே இங்கு தரேன்
iso என்றால் என்ன?
உலகின் பல நாடுகளின் நாடளாவிய சீர்தர (நியமங்கள்) நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட, சீர்தரங்களை உருவாக்கும் உலக நிறுவனமே அனைத்துலக சீர்தரப்படுத்தல் (நியமப்படுத்தல்) நிறுவனம் ஆகும். ISO எனப்பொதுவாகக் குறிப்பிடப்படும் இது ஒரு அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். எனினும் இது உருவாக்கும் தரங்கள் (நியமங்கள்), நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலமோ அல்லது நாட்டுத்தரங்கள் (தேசிய நியமங்கள்) மூலமாகவோ சட்டமாகும் வாய்ப்புகள் இருப்பதால், வேறு பல அரசுசார்பற்ற நிறுவனங்களைவிட இது சக்தி வாய்ந்ததாகும். உலகின் பல பெரிய வணிக நிறுவனங்களும், இதன் உறுப்பு நாடுகளிலிருந்து குறைந்தது ஒவ்வொரு தரங்கள் (நியமங்கள்) நிறுவனமும் இதன் நடவடிக்கைகளில் பங்கு கொள்கிறார்கள்.
இது மின் கருவிகள், துணைக்கருவிகளின் தரம் நிறுவும் அனைத்துலக மின்தொழில்நுட்பக் பணிக்குழு (கமிஷனுடன்) (IEC) நெருக்கமாக இணைந்து தொழிற்பட்டு வருகிறது.
பெயர்க் காரணம்
ISO என்பது இந்த நிறுவனத்தின் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகப் பிழையாகக் கருதப்பட்டு வருகிறது. பல்வேறு மொழிகள் வழங்கும் பல நாடுகள் இந்த நிறுவனத்தில் இருப்பதால், ஒவ்வொரு நாடும் தங்கள் மொழிகளிலுள்ள இந்நிறுவனத்தின் பெயர்களை வெவ்வேறு விதமாகச் சுருக்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமுகமாக சமம் எனப் பொருள் தரும் isos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ISO (ஐஎஸ்ஓ) என்ற பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஐஎஸ்ஓ நிறுவும் தரங்களில் (நியமங்களில்) மிகப் பெரும்பான்மையானவை ஒரு குறிப்பிட்ட உற்பத்திப்பொருள் அல்லது செயல்முறைகளுக்கெனச் (process) சிறப்பாக உருவாக்கப்பட்டவை. சில ஒரு துறை முழுவதற்குமே பொதுவாகப் பொருந்தக் கூடியவை. இப்போது பரவலாக அறியப்படுகின்ற ஐஎஸ்ஓ 9000 மற்றும் ஐஎஸ்ஓ 14000 தொடர் இலக்கங்கள் கொண்ட நியமங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தனவாகும்
மேல இருக்கும் சில வார்த்தைகளுக்கானா விளக்கம்
சீர் தரங்கள் : Standards :
சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ISO), அனைத்துலக மின்தொழில்நுட்ப ஆணையம் (IEC) என்பவற்றின் வழிகாட்டல் கையேடு (ISO/IEC Guide 2:1996) நியமம் என்பதற்குப் பின்வருமாறு வரைவிலக்கணம் தருகிறது.
- குறிப்பிட்ட சூழலில் உகந்த அளவு ஒழுங்குமுறையை அடையக்கூடிய வகையில் பொதுவான மற்றும் திரும்பத்திரும்பப் பயன்படுத்துவதற்கான விதிகள், வழிகாட்டல்கள், அல்லது செயற்பாடுகளுக்கு அல்லது அவற்றின் விளைவுகளுக்கு இருக்கவேண்டிய இயல்புகள் என்பவற்றைத் தருகின்றதும், பொது இசைவு மூலம் உருவாக்கப்பட்டு, அதிகாரம் பெற்ற அவை ஒன்றினால் அங்கீகரிக்கப்பட்டதுமான ஒரு ஆவணம் ஆகும்.
இதன்படி நியமம் என்பது பின்வரும் இயல்புகளைக் கொண்டுள்ளது.
- பொது இசைவுமூலம் உருவாக்கப்படல்.
- அதிகாரம் பெற்ற அவை ஒன்றினால் அங்கீகரிக்கப்படல்.
- உகந்த (optimum) அளவு ஒழுங்குமுறையை அடைவதை நோக்கமாகக் கொண்டிருத்தல்.
- பின்வருவனவற்றுள் ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ உள்ளடக்கமாகக் கொண்டிருத்தல்:
- விதிகள்
- வழிகாட்டல்கள்
- செயற்பாடுகளுக்கு இருக்கவேண்டிய இயல்புகள்
- அவற்றின் விளைவுகளுக்கு இருக்கவேண்டிய இயல்புகள்
ஆக ஒரு வழியா தர சான்றிதழ் யாரால் எதுக்கு உருவாக்கப்பட்டதுன்ற ஒரு கருத்து படிமம் உங்களுக்கு கிடைச்சு இருக்கா . மேலும் என் அனுபவத்தை இனிமேல் தான் எழுதனும் தொடரும்