செல்வனுடன் போர்

பாரதியார் எழுதிய ஒரு கடிதம் பயங்க சண்டையை எனக்கும்
செல்வனுக்கும் இடையில் கிளப்பியது . இருவருக்கும் இடையில்
நடந்த கவிதை போரை உங்களுக்கு தருகிறேன் .

பாரதியின்கடிதம்


எனது மடல்

இருக்கின்ற பிழையை சொன்னா
செருக்கென்று தலையைகொய்வார்
பொறுக்கின்ற மனவேண்டுமென
புது புது மொழிகள் சொல்வார் !
கவிபல புனைந்திட்டாலும்
செவிபல கேட்டிட்டாலும்
புவிபல புகழ்ந்திட்டாலும் தம்பி
பிழையது மாறாது காண்
பிழைப்பது யாரும் செய்வர்

எடுத்திடு உனது வாளை
என்றியம்ப மேலும்
தறித்திடு பகைவர் தலையை
என சொல்ல வந்தவனும்
பயந்தேறி பயல் தானென்றால்
அறிந்திடு அதனை நீயும்

சொல்லொன்று செயல்வேறு
சொல்லும் மொழிதானென்றால்
சொல்லாமல் போனால் என்ன
சொல்லுக்கு இழுக்கும் ஏன்

பாட்டிலே வித்தையதை
பாட்டியும் செய்யும் பார்
ரோட்டிலே சண்டையென்றால்
வீட்டிலே அடைந்தவன் என்று
பாட்டிலே சொல்கிறேன் கேள்
பழி பாவம் எனக்கல்ல சொல் !



செல்வனின் மடல்:

அச்சமில்லை என்கிறவனும்
சிறையின் பின் போகாமல்
திரையின் பின் போனதென்ன?
தலைமறைவாய் ஆனதென்ன?

ஆண்மகனாய் தான் நின்று
மீசைதனை தான் முறுக்கி
சொந்த பேரில் எழுதினான்
வந்த விளைவை சந்தித்தான்
பெண்மகவை சிந்தித்தான்
விதியதனை நிந்தித்தான்

நாடு விட்டு நாடோடி
புதுவையில் தான் அவன் அமர்ந்து
உண்ன உணவும் உடுக்க உடையுமின்றி
அடுப்பில் பூனை தான் தூங்க
பெண்டாட்டி தினம் ஏச
கைகள் தான் கூச
போலீஸ் தான் துரத்த
கடிதம் ஒன்றை கிறுக்கினான்
உன் படிமம் ஒன்றில் சறுக்கினான்

அவன் எழுதிய அனைத்திலும்
இருந்தது அவன் கை ஒப்பம்
நீயெழுதும் அனைத்திலும்
நிற்பது எவன் ஒப்பம


எனது பதில் மடல்:

சொந்தபேரில் எழுதியவன்
சோகமாகி போனதனால்
சொந்தபேரே காப்பாத்த
சொல்லிவைத்து வராதப்பா

வறுமையில் வாடியதாலோ
கொடுமையில் இருந்ததாலோ
கொள்கையில் சமரசம் ஏன்
குன்றே நீ சொல்லிடப்பா

என்பெயரில் எழுதுகிறேன்
நான்தானே கேட்கிறேன்
தியாகுவென்பது என்பெயர்தான்
தயங்காமல் நான்தறுவேன்
தரணிக்கு என்பெயரை
அச்சபட்டு போக உன்
மிச்ச பட்ட கவிஞனில்லை !

செல்வனின் பதில் மடல்:

முட்டிக்கு முட்டி தட்டி
லாடம் அதைக்கட்டி
பொன்னான உடல் அதனை
புண்ணாக தான் ஆக்கி
வாட்டிடுவர் வன்நெஞ்சர்
என உணர்ந்தான் கவிராயன்

அவன் கவியும் நீ படித்தாய்
அவன் கடிதமும் நீ படித்தாய்
எது அவன் உள்ளத்திலிருந்து வந்தது
எது அவன் உதட்டிலிருந்து வந்தது
என நீ அறியாயோ?
அறிந்தால் தான் சொல்லாயோ?

உன் பெயரில் நீ எழுத
புனை பெயரில் உன் தோழனெழுத
இதில் வீரன் நீயென்றால்
கோழை தான் யாரப்பா?
நீயும் இங்கே கூறப்பா?

எனது பதில்:

என்பெயரில் நான் எழுப்பிய
கேள்விக்கு பதில் சொல்லப்பா
பலவிசயம் பேசி பதிலை
நீ மழுப்பாதே!

தோழனது தளமிருக்கு
அங்கு சென்று நீ கேளு
பதிலை சொல்ல
அவர் இருக்கார்!

தொடர்ச்சி ..

பயன்படாமல் போன
பாரதி பிம்பமும்
பலனற்று போன அவன்
வாய் ஜம்பமும்

முருக்கிய மீசைமீறி
முனகலாய் கதறுவதேன்
செதுக்கிய பின்னும்
செதுக்காத அவன் பயந்தான்

பதுக்கிய பயமே உண்மை
செதுக்கிய கவியல்ல என்று
ஒதுக்கினால் ஓடுவந்து
ஒப்பாறி வைப்பதும் ஏன்

சுதந்திர காற்றில்
அம்மியே பறக்கும்போது
அதில்பறந்த அவனது மீசை
முருக்கிய தோற்றம் காட்டும்

அதைபற்றி கவலை வேண்டா
கதை பற்றி கதறுவதேன்
காட்டிய ஓர் கடிதம்
காட்டுமா காட்சியெல்லாம் !

11 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post