கோவை சந்திப்பு தொடர்ச்சி

மிக முக்கியமாக
நண்பர்களை சந்திப்பது என்றால் உடனே அந்த சந்திப்பை உறுதியாக

செய்யனும் என நினைத்து இருந்தேன் . யார் யார் வராங்கன்ற தகவல் முதல்

நாள் சொல்லும் போது அதில் தமிழ்மணம் உருவாக்கிய காசி வருகிறார்னு

தெரிந்ததும் மகிழ்ச்சு நம்ம மீட்ல ஒரு விஐபி வரார்னு நினைச்சேன்.

முதல் நாளே பாண்டியன் (நம்பிக்கை பாண்டியன் போன் செய்தார் ) எப்போ
வருவீங்கன்னு ,அதுக்கு பிறகு அவரது அழைப்பு 9.45 க்கு ஞாயிற்றுகிழமை
நான் கெளண்டம்பாளையம் பஸ்ஸில் போகும்போதுதான் வந்தது.

பஸ்ஸை விட்டு இறங்கி நான் சிவாவுக்கு போன் செய்ததும் அவர் சொன்ன

அடையாளங்களில் வெகு எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது .

மாடியில் பந்தல் போட்டு ஒரு கல்யாண வீடு கெட்டப்பில் இருந்தது ,

லேசான மழைத்தூறல் இந்த சந்திப்பை இனிமையான பின்னனி இசையாக
அமைத்து கொண்டு இருந்தது . மாடியில் தூரத்தில் தெரியும் வெள்ளை

சட்டை போட்டவரை நான் கண்டுகொண்டேன் மஞ்சூர்ராசா என குழும

வட்டாரங்களின் அழைக்கப்படும் சுந்தர் அண்ணா.

எதோ வெகுநாள் பழகிய நண்பர்போலவே தோண்றினார். வாப்பா படிவழியே

மேலே ஏரி என சொன்னார். மேலே சென்றதும் ஒரு 15 ல் இருந்து 20 பேர்

இருக்கும் அமர்ந்து இருந்தார்கள் .

சரியா அப்போதான் பேச ஆரம்பித்து இருக்கனும் ..

வாங்க தியாகுன்னு தமிழ்பயணி சொல்ல ஓ இவர்தான் தியாகுவான்னு

அடையாளம் கண்டுகொள்ளும் வகையிலும் வரவேற்கும் வகையிலும் ஒரு
வார்த்தையில் இரண்டு பயன் அதுதான் தமிழ்பயணின்னு பேரோ ;)

அடுத்து என் சீட்டு எங்கே என் சீட்டு எங்கேன்னு தேடி போய்

உங்கார்ந்தேன் தனது சீட்டை தியாகம் செய்தார் அனு .

நீங்க பெரியவங்க உக்காருங்க என்ற நக்கலோடு (ஆமாம் பயமறியா

பாவையர் சங்கம் ஆச்சே).

பேப்பரில் என்னமோ எழுதிகொண்டே இருந்தார் . சரி சரி மேட்டருக்கு

வரேன் .

நான் வந்து சேரவும் பக்கோடா கேசரி வரவும் சரியா இருந்தது .

அந்த பக்கம் கருப்பு கண்ணாடி போட்டு ஒருத்தர் இருந்தாரே யாருன்னு

கேட்டேன் அவர்தாம்பா ஓசை செல்லான்னு ஓசையோடு சொன்னாங்க .

அறிமுக படலம் ஆரம்பித்தது . மஞ்சூரில் ஆரம்பித்து ஒவ்வொருத்தரா

அறிமுக படுத்த ஆரம்பிக்க செல்லா முறை வந்ததும் ஒரு குட்டி பிரசங்கம்

பண்ணிட்டார் ;).
அப்படியே அனு அவங்க என் அறிமுகம் வேணான்னு தப்பிக்கவும் நாங்க

விடாமல் பேச வச்சுட்டும்ல .

முக்கியமா ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பிளாக்கரா வந்து இருந்தார்.
யது.
பிளாக்கர்களை பற்றியும் அதன் வீச்சு பற்றியும் சிலாகித்தார்.

இன்னொருத்தர் இயற்கை காவலாளி அப்படின்னு அறிமுக படுத்தப்பட்டார்.
அவரு பல மேட்டர உள்ள வச்சுகினு இருக்கார் . வலைப்பூக்களை பற்றி
அதிகமான ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது அவர்தான் .

இப்பதான் இன்னொருத்தர் வந்தார் .அதான் சொன்னேனே திருப்பூரில்

இருந்துன்னு அவர் பெயர் யுவராஜ் சம்பத்துன்னு அறிமுக படுத்திகிட்டார்.
ரொம்ப வளத்தியா ஜிப்பா போட்டு இருந்தார் வரும்போதே பெரிய கும்பிடு

போட்டு வந்தார் .
அவரது அறிமுகம் ஒரு குட்டி பிரசங்கமே (*செல்லாவோட அண்ணனா
இருப்பாரோ)

பிளாக்கர்கள் அருமையான டூல்னு சொல்ல ஆரம்பித்தவர் .பயங்கர உணர்ச்சி

வசப்பட்டு இந்தியா டுடேவில் அட்டைபடம் எப்படி இந்தமாதிரி போடலாம்னு

கேட்டார் நான் பேந்த பேந்த முழித்தேன் .
மிக சீரிய பணிகளை செய்ய வேண்டும் அதற்க்கு தன்னாலான எல்லா

உதவிகளையும் தருகிறேன் சொன்னார். (இப்படியும் இருக்காங்களா திருப்பூர்

முதலாளிகளில் ) வித்தியாசமான மனிதர்களில் ஒருவர் என

நினைத்துகொண்டேன் .
"செம்மலர் "ன்னு ஒருத்தர் எழுதுகிறார் அருமைன்னு எல்லார்முன்னாலயும்
அவர் சொல்லபோக எனக்கு தர்ம சங்கடமாக நெளிந்தேன் (அதுக்காக

சொல்ல வேணாம்னு சொல்லல ஹி ஹி)

காலை சேசனை பெரிதும் எடுத்துகிட்டதுன்னா அது செல்லாவையும் ,யுவராஜ்

சம்பத் சாரும்தான் .

இதுக்கு இடையில் மழை ஆரம்பிக்க தொடங்கியது (அதுவும் பொறுத்து

பார்த்து இருக்கும் என்னடா நமக்கு மேலே கொட்டுராங்களேன்னு அது

பொங்கிடுச்சு )

உடனே நாங்கள் வீட்டுக்குள் டேராவை மாத்தினோம் .

சரி இன்னைக்கு போது நாளைக்கு எழுதுகிறேன் .

அனானிகள் பத்தி ,கும்மி பத்தின்னு இந்தசந்திப்பில் தொடாத மேட்டரே

இல்லைன்னி வச்சுகலாம் .

இருங்க இதுக்கிடையில் டொண்டு போன் போட்டு செல்லாவிடம் பேச

ஆரம்பித்தார் .

டோண்டு: என்ன செல்லா எல்லாரும் வந்தாச்சா ?

செல்லா: எல்லாரும் வந்தாச்சுங்க

டோண்டு : யார் யாரெல்லாம் வந்து இருக்காங்க எனக்கு தெரிஞ்சவங்க

அல்லது என்னை தெரிஞ்சவங்க இருக்காங்களா

செல்லா: ஒரு 20 பேர் இருக்காங்க ஆனா உங்களை யாருக்கும்

தெரியலையே

டோண்டு : அப்படியா

இப்படி போனது உரையாடல் என செல்லா சொல்லவும் எனக்கு சிரிப்பை

அடக்க முடியலை

சரிங்க நாளை தொடர்ந்து எழுதுகிறேன் .

பிளாக்கர்களை பிரபலபடுத்த என்ன செய்யலாம் , நாம் அடுத்து செய்ய

வேண்டியது என்னன்னு நிறைய பேசினோம் நாளைக்கு சொல்றேன் .

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post