பெல் நிறுவனத்திற்கு மூடுவிழா

தோழர் பிரதாப்பின் மடல்:

நம் இந்திய நாட்டின் முதுகெலும்பு நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் நாட்டின் மின்சார சுய சார்பின் முக்கிய அங்கமாக பன்னெடுங்கால்மாக சேவை செய்துவருகின்றது. மேலும் இது நவரத்தினா நிறுவனங்களில் ஒன்றாகும். சமீபத்தில் மத்திய அரசின் என்.டி.பி.சி. நிறுவன தலைவர் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதன்படி நாட்டின் மின் தேவையை ஈடுகட்டும் அளவுக்கு மின் சாதனங்களை உற்பத்தி செய்யும் திறம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் இந்த நிறுவனம் பல்வேறு வெளிநாடுகளுக்கு குறைந்த விலையில் தரமான மின்சார உற்பதிக்கான பொருள்களை உருவாக்கி நிறுவி தந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் சிலவும் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்.

இப்படி பட்ட நிறுவனத்தின் மீது மத்திய அமைச்சர் ஒருவரும் திறம் குறைவு என்று கருத்து கூறியுள்ளார். பெல் நிறுவன தலைவர் எந்த வகையில் திறனை உயர்த்திக்கொள்ளவேண்டும் என்று கேட்டார். ஆனால் அதை பற்றி என்.டி.பி.சி நிறுவ்வனமோ, அந்த அமைச்சரோ எந்த பதிலும் தெரிவிக்க முடியாமல் வாய் மூடி மௌனியாகியுள்ளனர். இந்த நடவடிக்கைகளை கொண்டு பார்க்கும்போது பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நாட்டின் சுய சார்பை பலிகொடுக்க இந்திய அரசு தயாராகி வருகிறது என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. விரைவில் பெல் நிறுவனம் மூடப்படும் அல்லது நலிந்த நிருவனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதை இவர்களின் பேச்சுகள் சூசகமாக தெரிவிக்கின்றன.

ஒரு புறம் குடியரசுத்தலைவர் நாட்டின் முன்னேற்றம் மற்றும் இந்தியா 2020 குறித்தும், சுயசார்பு குறித்தும் பகற் கனவு கண்டுகொண்டிருக்க மறுபுறம் அரசு அவரின் கனவுகளுக்கு முற்றிலும் எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுதான் ஒரு பாரத ரத்னாவிற்கு இந்திய அரசு தரும் மதிப்பு.
--
வலைப்பூ(BLOG) : http://agnisiraku.blogspot.com/

நா.பிரதாப் குமார்.

8 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post