வலைபதிவர் சந்திப்பு -கோவை

எனது முதல் சந்திப்பு வலைப்பதிவர்களுடன்

நான் சென்றபோது சுமார் இருவது பேர்களாவது

இருந்தார்கள் .

காலையில் விவாதங்கள் நடந்ததாக ராஜவனஜ்

சொன்னார்.

பாலபாரதி கடுமையான உழைப்பில் கலைத்து இருந்தார்

குறுந்தாடியுடன் இருந்த பாமரன் பேச்சால் கவர்ந்து இழுத்தார்.

மற்றபடி நம்ம வினையூக்கிதான் இனிமே கண்டிப்பா உங்க கவிதையை

படிக்கிறேன் என வாக்குறுதி தந்தார் :))

நான் புதிய ஆள் என்பதால் நிறைய பேருக்கு தெரியவில்லை

ஈகலப்பை உருவாக்கிய முகுந்து மிக நன்றாக பேசினார்.

மத்தியானம் இரண்டு மணிக்கு பைக்கில் பறந்து போய்

நண்பர்களை பார்த்ததில் அந்த கஸ்டம் பறந்துடுச்சி.

வெறும் எழுத்துக்கள் வடிவிலேயே நான் பார்த்த மனிதர்கள்

இரத்தமும் சதையுமா இருக்கும் போது ஏற்படும் உணர்வு

சொல்ல முடியாதது.

அறைக்கு வெளியே ஒரு சின்ன உரையாடலும் எங்களுக்குள்

நடந்தது. அப்போ நம்ம பாமரன் கிட்ட கருத்து பகிர்ந்து கொண்டோம் ,

"பின் நவீனத்துவம் பற்றி" .

ம் காலையில் வந்து இருக்கனும் . தவறவிட்டுட்டேன்

தமிழ்மணம் ஒரு நண்பர்களை உருவாக்கும் கருவியா?

ஓசை செல்லா உடல்நலம் சரியில்லாமல் போக நமது பாலா

அசராமல் அனைத்து வேலைகளையும் செய்து

கட்டை விரலை உசத்தி விட்டார்.

hats off தல!

லிவிங் ஸ்மைல் வித்யா போன்றவர்களை சந்திக்க நினைத்தேன்

ஆனால் அவரெல்லாம் காலையிலேயே வந்து சென்றுவிட்டார்கள்

என சொன்னார்கள்.

கடைசியாக வந்த செந்தழல் இரவி மற்றும் ராஜாவை பார்த்து

பேசிவிட்டு கிளம்பினேன் .

நான் பைக்கில ரொம்ப தூரம் போகனும்மய்யான்னுட்டு .

ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன்

என் கூட எனது சகோதரன் வந்து இருந்தான் , நான் பிளாக்கர் வைத்து இருப்பதையும்
அதில் எழுதப்படும் விவாதிக்கப்படும் விசயங்களையும் கேட்டு இதெல்லாம் எந்தளவு
உபயோகப்படும் என சொன்னவன். அங்கே குழுமி இருந்தவர்களின் உற்சாகத்தை பார்த்து
வலைப்பூவில் எழுதுவது பற்றிய தனது கருத்தை மாற்றிகொண்டான்

விரிவா எழுத நேரமில்லை மன்னிக்கவும்


தியாகு

8 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post