
நிலத்தை கொத்தி
நீரை சாத்தி
மரத்தை வெட்டி
மடுவை குடைந்து
கரத்தை உயர்த்தி
கழனி காத்து
சிரத்தை உயர்த்தி
வா என் தோழா!
இருக்கும் வாழ்க்கை
சடுதியில் மாற்று
மருட்டும் உலகை
உழைப்பால் திரட்டு
உயிரொடு கலக்கும்
தோழமைகொண்டு
சிரத்தை உயர்த்தி
வா என் தோழா
கலைப்பை விரட்டி
உழைப்பை பெருக்கி
மலைப்பை தகர்க்கும்
மனமது கொண்டு!
சலிப்பை வெறுக்கும்
சாட்டை கொண்டு
சிரத்தை உயர்த்தி
வா என் தோழா
களிப்பை அளிக்கும்
பாட்டுடன் சிந்து
முழிப்பை அளிக்கும்
தத்துவம் கொண்டு
சிகப்பை பூண்டு
சினமது கொண்டு
சிரத்தை உயர்த்தி
வா என் தோழா
-தியாகு