தெருவெங்கும்
மணக்கும்
தேர்தல் பொங்கல்
வாணவேடிக்கை
வார்த்தை
சவடாலில் !
சலிப்புடன் தேதி
கிழிக்கும் மக்களிடம் -பல்
இளித்து ஓட்டுக்கு
பதுங்கும் கூட்டம்!
வண்ணத் தொலைக்காட்சி
வாசலில் நிற்கையில்
திண்ண சோறின்றி
திகம்பர பயணம்!
விரல்களில் தடவிய
மைகளில் தெரியுது
நெத்தியில்
தீட்டிய நாமம்!
வயித்தை விற்றபின்
வாழ்வது எப்படி
வர்க்கதீர்வுதான்
வசந்தத்தின்
இடிமுழக்கம்!
-தியாகு