சாதி மருட்டினை மோதி விரட்டி
சாதிக்க பிறந்த சூரியனே!
இல்லை கடவுள் இருந்திடில்
இருக்குமே சமதர்ம நீதி யென்றாய்!
உதிக்கின்ற சூரியனும் அடிக்கின்றகாற்றும்
அனைவர்க்கும் பொதுவானபோது -பூமியில்
பிறக்கின்ற பிள்ளைக்கும் பிறந்து
இறக்கின்ற மனிதற்க்கும் பூமிபொதுவே என்றாய்!
வெள்ளை தாடியும் கருப்பு சட்டையும்
கையில் தடியும் வார்த்தையில் வெடியும்- கொண்டுநீ
நடந்ததால் விடிந்தது எங்கள் காலை!
சாமி இருந்திடில் வேதம் இருந்திடும்- பேதம்
இருந்திடும் அதனால் சாமிஒழித்திட
புறப்பட்டஎங்கள் புதுசாமியே!
சாதிக்க பிறந்த சூரியனே!
இல்லை கடவுள் இருந்திடில்
இருக்குமே சமதர்ம நீதி யென்றாய்!
உதிக்கின்ற சூரியனும் அடிக்கின்றகாற்றும்
அனைவர்க்கும் பொதுவானபோது -பூமியில்
பிறக்கின்ற பிள்ளைக்கும் பிறந்து
இறக்கின்ற மனிதற்க்கும் பூமிபொதுவே என்றாய்!
வெள்ளை தாடியும் கருப்பு சட்டையும்
கையில் தடியும் வார்த்தையில் வெடியும்- கொண்டுநீ
நடந்ததால் விடிந்தது எங்கள் காலை!
சாமி இருந்திடில் வேதம் இருந்திடும்- பேதம்
இருந்திடும் அதனால் சாமிஒழித்திட
புறப்பட்டஎங்கள் புதுசாமியே!
Tags
கவிதை