குடிப்பதை நிறுத்து!

குடிப்பதுஎனது குலப்பழக்கம் அல்ல!-ஆனாலும்
குடிக்கிறேன் அதை நிறுத்தவா?

கவலைகள் மறைகிறது தற்காலிகமாக
மணதின் கணம் குறைகிறது சொற்ப்பமாக.
குடிக்கிறேன் அதை நிறுத்தவா?

கடன் வாங்கி குடிக்கிறேன் கடனை அடைக்க
மறுபடி கடன் வாங்கினேன் கொஞ்சமாக-கடன்
கொடுத்தவனை சாமாளீக்க குடிக்கிறேன்.
குடிக்கிறேன் அதை நிறுத்தவா?

காண்பவன்தான் காணப்படுபவனும்என்று சொன்னார் கிருஸ்ணமூர்த்தி
அதை குடிக்கும்போதுஉணர்கிறேன்
குடிக்கிறேன் அதை நிறுத்தவா?
குடிப்பதற்க்கு மாற்றாகஏதாவது உள்ளதா -இருந்தால் சொல்லுங்கள் !
குடிக்கிறேன் அதை நிறுத்தவா?

சமத்துவம்என்று சொன்னார்கள் -அது குவாட்டரில் உள்ளது!
குடிக்கிறேன் அதை நிறுத்தவா?

சமுதாய மாற்றம்என் கண்ணில் தெரிகிறது குடிக்கும்போது !-போதை தெளிந்தவுடன் பழாய்போன பழைய சமுதாயம் முன்னால் நிற்கிறது குடிக்கிறேன் அதை நிறுத்தவா?

குடிப்பதற்க்கு காரணங்கள் உண்டுஎன்னிடம்-அதை நிறுத்த
ஒரு காரணம் சொல் கண்ணே!
குடிக்கிறேன் அதை நிறுத்தவா?

அன்புடன்
தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post