பனியன் தொழில் சிறந்து விளங்கும் நகரம் திருப்பூர்! திரும்பிய பக்கமெல்லாம் இதே பேச்சு! ஆனால் இங்கே குடிக்க தண்ணி விலை குடுத்து வாங்கனும்! வாரம் ஒருமுறை வரும் தண்ணீரை சேமிக்க தெரியாதவன்செத்தான் வீட்டுகாரர் வீட்டிலேயே தண்ணீ வாங்கி கொள்ளலாம் குடம் ஒரு ரூபாய்! எதிர்த்து பேசினால் வீட்டை காலி செய்! மாதம் ஒருமுறை சாணியால் முற்றத்தை மொழுக வேண்டும்! மாடுகள் குறைவான ஊரில் சாணீக்குஎங்க போக தண்ணீர் அளவாகத்தான் பிடிக்கவேண்டும் அதிகம் தேவைப்பட்டால் அதற்க்கும் பணம் தர வேண்டும்! எனக்கு பிடித்தால் நீ குடியிருக்கலாம் இல்லாவிட்டால் அவ்வளவுதான் ! எதிர்த்து பேசினால் வீட்டை காலி செய்! வீட்டை காலிபண்ணும்ஒரு மாதம் முன்பாகவே சொல்ல வேண்டும் இல்லாவிட்டால் அட்வான்ஸ் கிடைக்காது! இரவு பத்துமணீக்குமேல் லைட்எரிய கூடாது! சொந்தகாரர் யாரும் வரகூடாது! வந்தால் இரண்டுநாளில் போக வேண்டும்! என்ன நினைபார்கள் இதை சொன்னால் வந்தவர்கள்! எதிர்த்து பேசினால் வீட்டை காலி செய்! வீட்டில் இப்படியென்றால் அலுவலகம் பனிரன்டு மணீ நேர வேலை இதுதான் மெக்கானிக்கல் வாழ்க்கை விரும்பினால் வாருங்கள் திருப்பூர்
தியாகு
தியாகு
Tags
கவிதை