அந்த கட்சி தலைவர் பதவி ஏற்பு விழாவுக்கு போன ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் இடம் கொடுக்கலைன்னு முக ரொம்பவே வருத்த படுகிறார் .
இதை ஒரு டிவில கிண்டி கிண்டி பேசிட்டு இருந்தாங்க அதில் ஒரு திமுக வேட்டி சொல்லுது ,ஏன் தா . பாண்டியனுக்கு அந்த மாதிரி புரோட்டோ கால் எல்லாம் இல்லையா ? எங்க தலைவருக்கு அவரது மகனுக்கு மட்டும்தான் புரோட்டாகாலான்னு?
வயசான காலத்தில உங்களால இனிமே சட்டசபைக்கு வரமுடியாது அதான் ஸ்டாலின் வராரு அவரு கூட நீட்டா பேசிக்கலாம்
ஆனா இந்த பாமக காரறு பையன் அன்புமணி இதை எதிர்பார்த்தாராம் என்னா டிவிஸ்டு பாருங்க ?
//சென்னை: நேற்று திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த
முதல்வர் ஜெயலலிதா இன்று அவரை சட்டசபையில் பார்த்ததும் வணக்கம் கூறி
அசத்தியுள்ளார்.
திமுகவும், அதிமுகவும் எலியும், பூனையுமாக மோதிக் கொள்வார்கள் என்று தான்
மாநில, தேசிய, சர்வதேச அளவில் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அந்த அளவுக்கு அவர்கள் மோதிக் கொள்வார்கள்.
அறிக்கை மூலமாகவும் தொடர் போர் நடந்து வந்தது.
//மீடியா கார பயலுக இதை மெனகெட்டு உக்கார்ந்து நாலைஞ்சு பேர அழைச்சிட்டு வந்து 1 மணிநேரமா கிண்டி கிட்டு இருக்காங்க
வேற விசயமே இல்லையா நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கு
பிரச்சனையே இல்லாத பிரச்சனையை ஏன் மீடியா மூடியா பேசுது
அய்யா உமது பார்வைக்கு
1.
பிரச்சாரம்
சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுகவினர் மேடைதோறும் ஜெயலலிதாவை
தாக்கிப் பேசினார்கள். சொன்னீங்களே, செஞ்சீங்களா? என்னம்மா இப்படி
பண்றீங்களேம்மா என்று ஜெயலலிதாவை குறி வைத்து பிரச்சாரம் செய்தார்கள்.
2.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெயலலிதா திமுக தலைவர் கருணாநிதியின்
குடும்ப அரசியல் பற்றி மேடைதோறும் விமர்சித்தார். இப்படி தேர்தல்
நேரத்திலும் கூட அவர்கள் மோதிக் கொண்டிருந்தனர்.