உலகம் அழிவு குறித்த வதந்திகள்

உலகம் அழிவு குறித்த வதந்திகள்


 


இந்த உலகத்தை கடவுள் ஒரே நாளில் உக்கார்ந்து படைத்தார் என்பதும்

அவருக்கு மூடு அவுட்டானால் ஒரே நாளில் சீ போன்னு அழித்து விடுவார்
என்பதும் எவ்வளவு ரசிக்கத்தக்க நகைச்சுவை .இந்த நகைசுவைக்கு மேலும்
மெருகூட்ட மாயன்களின் காலண்டரில் இன்று 21.12.2012 பிற்பாடு

தேதி இல்லை என்பதால் உலகம் இருக்காதுன்னு கூட சேர்த்து கட்டி
இதை பலமான பொய் மற்றும் நகைச்சுவையாக ஆக்கியது செய்தி

ஊடகங்களும் அவற்றின் முதலாளிகளும்தான் .

    மாயன்களே கூட ஜீ பூம்பான்னு மந்திரம் போட்டு அவர்கள்

காலத்தில் ராக்கெட் செய்திருப்பார்களா என்ன ? மாயன்களை படிக்கும்

போது அவர்களின் அறிவியல் அறிவு நமது அறிவியல் அறிவை விட

அதிகமாக இருக்கிறதுன்னு படிச்சிட்டு இன்னும் நமது அறிவியல் அறிவும்
தருக்க அறிவும் கூடனுமே ஒழிய . நமது தர்க்க அறிவு மேலும் கீழ் நோக்கி
போய் மாயன்களின் அறிவியல் அறிவையே கேலுக்கூத்தாக்கும் அளவுக்கு
ஆகா இனிமே உலகம் அழிஞ்சிடும் நாளைக்கு அழிஞ்சிடும்னு நம்புவதும்.

    செத்தாலும் திருந்தாத நமது மக்களின் மனப்போக்கை

குறிக்கிது.
    இன்றைக்கு காலையில் எழுந்ததுமே கேட்க ஆரம்பிச்சிட்டாங்க
இன்னைக்கு உலகம் அழிஞ்சிடுமாமேன்னு .
    நாம் நமது வாழ்வும் வாழ்க்கையை , சுற்று சூழலை  எல்லாம்
கழிவுகளால் நிரைத்து விட்டோம் . நமெக்கென்று எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போவதற்கு நிரைய காரணங்களை நாம் உருவாக்கிவிட்டோம் .
    நமது வாழ்க்கை சுரண்டலை அடிப்படையாக கொண்டு நகர்கிறது உண்மையான மனிதத்துவம் எங்குமே செத்து போய்விட்டது.
முதலாளித்துவம் அழிகி நாறிப்போய் அது கலாசாரா மட்டத்தில் தனிநபர் வாதத்தை விதைத்து அந்த விதை இப்போது மரமாகிவிட்டது. இனிமேல் அழிந்து போவதை தவிர வேறு வழி இல்லை.எனவே அப்படி அழிந்து போனால் என்ன என்கிற மகிழ்சி கரமான அடி மன எண்ணம் அனைவர் மனதிலும் ஓடிக்கொண்டு இருப்பது தெரிகிறது.
    நாள் தோறும் ஏறும் விலைவாசி , கரண்டு கட் - பள்ளிக்கு
அழும் நிதி, வேலை இன்மை, முதலாளித்துவ சுரண்டல், ஓடும் பஸ்ஸில் பெண் கற்பழிப்பு, அரசுகளில் ஊழல் முகம் இவை எல்லாம்
ஒரு முடிவுக்கு வராதா என்கிற ஆசையும் மக்களிடம் இருக்கிறது
எனவே  அழியவேண்டும் என்றால் எது அழியவேண்டும் என்பதே
நாம் சிந்திக்கவேண்டிய விசயம் .

  முதலாளித்துவம் அதன் உச்சத்தை அடைந்துவிட்டது அது இனிமேல் சொல்லும் ஒரே தீர்வு அழிவுதான் ஆனால் நாங்கள் கம்யூனிஸ்டுகள் அழிவை முதலாளித்துவத்திற்கும் தீர்வை  ஒரு பொன்னுலகத்திற்கும் தருகிறோம்.
    இந்த முதலாளித்துவ உலகம் இந்த போட்டிமயமான கொடூரமான ஒழுங்கு இந்த சுரண்டல் அமைப்பு இனிமேலும் நீடித்து இருக்க லாயக்கற்றது இது அழியத்தான் வேண்டும் .

        உழைக்கும் மக்களின் கரங்களில் இந்த உலகை மாற்றும் வேலை வந்து விழும் போது அதை அவர்கள் போராடி பெறும் போது உலகத்தின் அழிவு பற்றிய புரளி மட்டுமல்ல உலகத்தின் அழுகி நாறிய பழைய நம்பிக்கைகள் அனைத்துக்கும் ஒரு முடிவு கட்டி விடுவார்கள் .

    சிந்தனயை முன்னோக்கி செழுத்துபவர்களால் உலகம் நடைபோட்டு வந்திருக்கிறது.
   

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post