தமிழ் சினிமா தலைவர்களை நல்குமா






  தமிழ் சினிமா தலைவர்களை நல்குமா


  தமிழ்கூறும் நல்லுலகம் அறிவியல் அறிஞர்களை , வல்லுநர்களை கல்லூரிகளில் இருந்தும் கலாசாலைகளில் இருந்தும் நல்கும் பேறு பெற்று இருந்தாலும் அது  தலைவர்களை மட்டும் ஏனோ சினிமாவில் இருந்து வெளியே பிதுக்கி தள்ளுகிறது.

எந்த துறையிலானாலும் அதன் வல்லுநர்கள் எப்படு உருவாகிறார்கள் : அதற்குரிய படிப்பு மற்றும் செயல்திறனுக்கு அனுபவத்தை அறிவது அதற்கான காலகட்டம் இதை வைத்துத்தான் நாம் அவர்களிடம் செல்கிறோம் தீர்வை நோக்கி நகர.

ஆனால் நாட்டின் அரசியலை மட்டும் பாவம் சினிமாவின் கதா நாயக நாயகிகளிடம் கொடுத்து விடுகிறோம் அதாவது ஒரு ஜீன்ஸ் பேண்டை வாங்க நாம் மெனெக்கெடும் அளவு கூட நமது தலைவர்களை தேர்ந்தெடுக்க யோசிப்பதோ செலவிடுவதோ இல்லை.

காரணம் நாம் உருவாக்குவதல்ல தலைவர்கள் மேலிருந்து திணிக்கப்படுகிறார்கள் .

நாலு படத்தில் ஏழைபங்காளனாக பேசிவிட்டாலே அந்த நடிகர் புரட்சி தலைவர்

ஆகிவிடுகிறார் பாவம் வாழ் நாள் முழுவதும் நடந்து புரட்சிகர கட்சியை கட்டுபவர் ஏழைகளோடு ஏழையாக பிறந்து இறந்து போனவருக்கு அய்யோ பாவம் பிழைக்க  தெரியாதவர் என பட்டம் சூட்டுகிறோம் மறுபுறம் நாம் பிழைப்பை இழந்து வருகிறோம் என்ற உணர்வின்றி.

காய்ச்சலுக்கு ஊசி போடுவதற்கு கூட ஆம் கம்பவுண்டர்களை நம்புவதில்லை அவனது படிப்பு என்ன என்பதை கேள்விக்குள்ளாக்குகிறோம் விமர்சிக்கிறோம் .ஏனெனில் அது நமது உடல் சம்பந்தபட்டது  தெரியாமல் போட்டுவிட்டால் அடுத்து பாலுதான்

ஊத்துவார்கள் என்கிற பயம் நமக்கு ஆனால் ஓட்டு போடும்போதும்  கொஞ்சமும் யோசிப்பதில்லை போஸ்டாபிசில் கவர்களுக்கு சீல் குத்துவதை போல குத்தி தள்ளுகிறோம் .

இது ஏனென்றால் அரசியல் பற்றிய அறிவு நமக்கில்லை அதை சினிமாதான் போதிக்கிறது ரமணா படத்தில் நல்லவனாக நடித்தாரே என்று விஜ்ய காந்தை தலைவனாக ஏற்று கொள்வது எவ்வளவு அறிவீனம் . அழகான முகம் இருந்தால் நாட்டை ஆளலாம் என எந்த ஒரு நடிகையும் கணக்கு போடுவது எவ்வளவு பலகீனமான இத்யம் உடையவன்
தமிழ் ரசிகன் என்பதை எடுத்து காட்டுகிறது.

பிழைப்புவாதம் , சுயநலம் சமூக அக்கறை இன்மை இவற்றின் உச்சத்தில் வாழ்ந்து வரும் நம்மால் நம்மில் இருந்து ஒரு தலைவனை உருவாக்க இயலாது.

ஏனெனில் தலைவன் என்பவன் எங்கிருந்தோ வருவதில்லை நம்மிடம் இருந்துதான் வரவேண்டும் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் .

சமூகம்தான் தனிமனிதனை படைக்கிறது தனிமனிதன் சமூகத்தை படைப்பதில்லை

நமக்கான அரசியல் என்பதை அறிந்து கொள்ளும் போதுதான் நமக்கான தலைவன் யாரென அறிய முடியும் . கைதட்டலுக்காக பேசுபவனோ , எதெற்கெடுத்தாலும் உடனடி தீர்வுகளை பாக்கெட்டில் வைத்து கொண்டு சுத்துபவனோ நமது தலைவனாக இயலாது.


சினிமாவில் பேசி கைதட்டல் வாங்குபவனை நமது பட்டியலில் இருந்து தூக்கி எறிய வேண்டும் முதலில் பிறகுதான் தலைவர்களை தேடும் சந்து சினிமா அல்ல என்பதை உணர முடியும் .

நினைத்து பாருங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பற்றி தெரியாத ஒருத்தனிடம் நாட்டின் பொருளாதாரம் . நாட்டின் மின் தேவையை பற்றி தெரியாத ஒருத்தனிடம் நாட்டின் மிந்தேவையையை தீர்மானிக்கும் கோப்பு.அவனுக்கு ஆமாம் சாமி போட்டு காலில் விழும் ஒரு கூட்டம் .

இன்னொரு புறம் ஒரு சாதாரண கிளர்க்கு வேலைக்கு லட்சம் பேர் பரீட்சை எழுத எந்த பரீட்சையும் இன்றி தேர்ந்தெடுக்கப்படும் தலைவன் ஆயிரம் பரீட்சை எழுதி வரும் ஒரு அதிகாரியை வேலை வாங்குவது.

சரி படிக்காதவர்கள் அரசியலுக்கு வரகூடாது என சொல்வதாக் நான் நினைக்கிறேன் என கருதவேண்டாம் .

மக்களிடம் தங்களை தேர்ந்தெடுத்து கொள்ளும் ஒரு வழிமுறை இல்லை அப்படிபட்ட வழிமுறைகளை அறிந்து கொள்ள இந்த சுயநல  தலைவர்கள் விடுவதில்லை அதற்கு மக்களுக்கு உண்மையான அரசியலை எந்த கட்சியும் போதிப்பதில்லை. ஏனெனில் குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்க இயலும் குட்டை தெளிவானால் மீன் அகப்படாது.

அரசியல் என்பது பிழைப்புக்கான கருவி இல்லை என்பதை மக்கள் உணரும் போதுதான் அரசியல் என்றால் என்னவென்ற கேள்வி எழும் அதை தொடர்ச்சியாக தேடும் போதுதான் அரசியல் என்பது நடைமுறை வாழ்கை அதன் பிரச்சனைகளோடு சம்பந்தபட்டது என்கிற

உணர்வு வரும் நடை முறை வாழ்க்கையை அதன் பிரச்சனைகளுக்கு வரிகளும்  சட்டங்களும் தீர்வு தராது என்பதை உணரும் போதுதான் நிரந்தத தீர்வுக்கான தத்துவம் பற்றி தேட துவங்குவோம் .

அதுவது புதரை சுற்றி ஓடுவதுதான் மிச்சம்

அறுபது ஆண்ட்சுகாலம் ஓடிவிட்டது இன்னும் இருள் நீங்கவில்லை

யார் விளக்கை ஏற்றுவது ? யார் மக்களிடம் போவது ?

படித்த பண்பாளர்களே வீட்டின் டிவி திரையில் இருந்து கண்ணை எடுங்கள்
வாழ்வின் நிதர்சணத்தை பாருங்கள்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post