சில்லரை வர்த்தகத்தின் அந்நிய முதலீடு பாகம் -1

சில்லரை வர்த்தகத்தின் அந்நிய முதலீடு -பாகம் 1

இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தில் அந்நியமுதலீடு வந்தால் இந்தியா வகை தொகை இல்லாமல் சுரண்ப்டப்படும் என்றும் பன்னாட்டு சுரண்டல் மூலதன கும்பல் கொழித்து வளரும் என்றும் நாடு முழுக்க உள்ள வர்த்தகத்தை கைப்பற்றிய பின் கேட்பாரற்ற வகையில் விலைவாசி உயரும் என்றும் இதன் மூலம் நாடு மறுபடியும் ஒரு காலனி நாடாகும் என்றும் எங்கும் கூக்குரல் எழுகிறது

சில்லரை வியாபாரிகள் முழுங்கப்படும் விதி:

முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாது விதி சிறு முதலாளிகள் பெரிய முதலாளிகளால் முழுங்கப்படுவது இதில் ஆச்சரியப்படவும் அதிர்ச்சி அடையவும் ஏதுமில்லை சின்ன சின்ன கடைக்காரர்கள் ஏற்கனவே இந்தியாவின் பெருமுதலாளித்துவ கடைகளால் ரிலயன்ஸ் பிரஸ் போன்ற் கடைகளால் முழுங்கப்படுகிறது இனிமேல் பன்னாட்டு முதலாளியால் முழுங்கப்படும்

சில்லரை வணிகர் யார் நடுத்தர வணிகர் யார்?

இன்றைக்கு சில்லரை வணிகர்களை விட நடுத்தரவணிகர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுவார்கள் ஏனெனில் பெரிய மால்கள் வருவது சின்ன சின்ன ஊர்களிலும் கிராமங்களிலும் அல்ல அடுத்து சின்ன கடைக்காரர்களும் மக்களின் வாங்கும் சக்தியும் ஒன்றிணைந்து உள்ளது அதனால் இவர்கள் அழிய வாய்ப்பில்லை அதாவது இந்தியாவின் மொத்த வருமானமும் மாதவருமானமாக மாறாத பட்சத்தில் இவர்களுக்கு அழிவில்லை

ஏனெனில் அன்றாடங்காய்ச்சிகள் தான் பெரும்பாலும் கொண்ட நாடு இந்தியா இவர்களும் இந்த சில்லரை வணிகர்களும் கடன் என்கிற பந்தத்தில் இணைக்கப்பட்டு இருக்கிறார்கள் எனவே இவர்களுக்கு அழிவில்லை

பாதிக்கப்படப்போவது மொத்த கடைகள் என இருக்கும் கடைகளே இவர்களுக்கும் ஏழை மக்களுக்கு எந்த சம்பந்ததும் இல்லை இவர்கள் அழிவது வரலாற்றின் விதி

விவசாயிகளும் கமிசன் மண்டிகளும்:

நாட்டில் விவசாய பொருளுக்கு விலை கிடைக்கவில்லை என்றால் அதன் முதல் எதிரிகள் இந்த கமிசன் மண்டி வியாபாரிகள் தான் இவர்களே இன்று தனிமுதலாளிகளான பெரும் கடைக்காரர்கள் இவர்களே விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி ஒன்றுக்கு பத்தாக வித்து மக்களையும் விவசாயிகளையும் ஒரு சேர கொள்ளை அடிப்பவர்கள் இவர்கள் அழியவேண்டும்

மக்களும் பெரு வியாபாரிகளும் :

கள்ள சந்தை , கலப்படம், பதுக்கல் சந்தை தாருமாறான விலையேற்றம் எல்லாம் நடைபெருவது இந்த பெருவிவசாயிகளாலேயே இவர்கள் முதலாளித்துவ போட்டியில் இன்னும் அழியவில்லை என்பதாலும் உள்நாட்டுகாரன் என்கிற தைரியத்தாலும் ஜாதி அரசியல் காப்பரணாலும் காக்கப்பட்டு வருகிறார்கள் இவர்கள் எந்நாளும் முற்போக்கான வர்க்கமாகவோ மக்களுக்காக போராடுவதற்கோ வரப்போவதில்லை

அந்நிய முதலீடும் ரூபாய் மதிப்பும் :

அந்நிய முதலீட்டின் மூலம் FDI உள்ளே வந்தால் ரூபாயின் மதிப்பு உயரும் என்றாலும் முக்கியமாக இந்தியாவின் காய்கறிகள் பழங்கள் 59 மெட்ரிக் டன் அளவுக்கு பாதுகாப்பு பெட்டக வசதி இல்லாமையால் கெட்டு போவதாகவும் அதனால் அந்நிய மூலதனம் இந்த துறையில் வருவதால் இதை குறைக்க முடிவும் என்றும் கூறப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை

/இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 59 மெட்ரிக் டன் பழங்களை வீணாக்குகிறது
செய்தி மொத்தத்தில் 50 சதவீதம் பாதுகாப்பு வசதிகளும் ( Around 50 per cent of the 5,400 cold storages are located in Uttar Pradesh, Punjab and West Bengal.) தான் இருக்கு //

புரட்சிகர ஏமாற்று :

சிறு வியாபாரிகள் உழைக்கும் வர்க்கமாக மாறிவிடுவார்கள் என்பது ஏமாற்றாகும் இதை நம்ப வேண்டாம் பாதிப்பு பெரு முதலாளிகளுக்கு மற்றும் சீனாவை போன்று சிறு முதலாளிகள் இந்தீயாவில் புரட்சிகர வர்க்கமில்லை மாறாக இவர்கள் பாட்டாளிகளுக்கு எதிரான வர்க்கமாகவே இவர்களை சுரண்டி திண்பவர்களாகவே இருக்கிறார்கள்

பெரிய நிருவனங்களின் சமூக உற்பத்தியில் சங்கம்:

பெரிய நிருவனங்கள் வரும்போது அதிலிருக்கும் தொழிலாளிகளை திரட்டுவதும் போராடுவது எளிதானதாகும்

ஆகவே சில்லரை வணிகத்தின் அந்நிய முதலீடு பாட்டாளிவர்க்கத்துக்கு எதிரானது என்கிற பொய்யை நம்ப வேண்டாம்




--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post