இணையத்தில் பெண் புரட்சியாளர்களே கவனிக்கவும்

சிலரை பிரபலமாகவேண்டும் என்கிற பேய் ஆட்டுவிக்கிறது , அந்த வகையில் எழுதவரும் பெண்களும் விதிவிலக்கில்லை
இந்த பெண்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மத்தியதரவர்க்கம் அல்லது மேட்டுகுடி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஒரு சில உழைக்கும் வர்க்க பெண்கள் இருக்கலாம் இருந்தாலும் அவர்களின் அனுகுமுறையில் ஒரு நேர்மையை எதிர்பார்க்களாம் ஆனால்  இந்த பெண்களிடம் நீங்கள் எதையும் நேர்மையான முறையில் பேசவோ விவாதிக்கவோ முடியாது

எடுத்துக்காட்டு இந்த தமிழச்சி மற்றும் சாந்தி தனது படங்களை சினிமா போஸ்டரை போல பயன்படுத்தும்
இந்த தமிழச்சி பெரியாரின் கருத்துக்களை காபி பேஸ்டு செய்யும் வேலையை செய்கிறார் மற்றபடி சோபாசக்தியை
நோக்கி காதல் அம்மை வீசுவது பிறகு பிரிவு வந்தது  தன்னை யோக்கியமாக காட்ட இரண்டு குழந்தை கணவன்
என கண்ணீருடன் காட்சி அளிக்கிறார் .

எந்த தத்துவமும் நடைமுறை படுத்தப்படும் போதுதான் அது உயிர் பெறும் அவ்வகையில் மார்க்சியமும் நடைமுறையை
முற்றிலும் சார்ந்தது.

நடைமுறையில் இவரை போன்றவர்களின் வர்க்க குணாம்சம் என்னவென நமக்கு தெரியாது ஆனால்
எழுத்துக்களில் முற்போக்கு பொங்கி வழியும் அய்யோ புரட்சியை கூடையில் சுமப்பவர்களோ
என எண்ண தோன்றும் இந்த தமிழச்சிகள் என்ன செய்கிறார்கள் முற்போக்கை மதம்போல கடைபிடிக்கிறார்கள்

மதவாதியை போல தனது குரு சொன்னதை சொல்லும் சீடனை போல பெரியார் எழுத்துக்களை மந்திரம்போல
உச்சரிக்கிறார்கள் இதன் மூலம் மொத்த முற்போக்கு முகாமிற்கும் ஓட்டையை போடுகிறார்கள் .

சாந்தி திடீரென காம்ரேட் ஆன பெண் காம்ரேடு இவரும் சந்தன முல்லையை போன்றவர்தான் திடீரென காவியுடுத்தி
சந்நியாசம் போன சாமியார் சமூகத்தை சபிப்பதுபோல இவர்கள் திடீர் காம்ரேடுகள் இவர்களை புரட்சிகர
பெண்பாட்டாளி வர்க்கத்தோடு ஒரு சேரபார்க்கும் கட்சியையும் அதன் தோழர்களையும் பரிதாபமாக பார்பதை தவிர நம்மால் ஒன்றும் சொல்லமுடியாது .

திடீர் திடீரென பாலியல் குற்றச்சாட்டுகளை இவர்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம் ஆனால் இதன் மூலம் இவர்கள்
தங்களை பற்றிய உருவாக்க நினைக்கும் பிம்பம் அடி ஆழத்தில் இருந்து ஆட்டுவிக்கிறது

என்ன பிம்பம் அதான் அற்பமாக தன்னை தனது பெயரை அனைவரும் அறியவேண்டும் என உந்திதள்ளும் ஆவல்

இவர்களை தண்ணிஅடித்தவனை போல ஏழை , வறுமை  புரட்சி பெரியார் என பிதற்ற வைத்து இருக்கிறது

இவர்களில் ஒருவர் முன்பெல்லாம் செடிவளர்ப்பது தனது நாய்குட்டியை குளிப்பாட்டுவதென பதிவுகளை இட்டு
வந்தார் . ஈழ பிரச்சனையில் இந்த சாந்தி அன்னை (?) சோனியாவை ஆதரிக்க காரணம் அவர் சேலை உடுத்தும்
ஸ்டைல் நல்லா இருக்கும் என்பதால் மட்டுமே என விவாதம் முடிந்த கடைசியில் உளறி கொட்டினார் .

சந்தன முல்லையின் சிலபதிவுகளை பார்த்து இருக்கிறேன் தனது மகளுக்கு உடைமாட்டி அதை பதிவாக்கி இருப்பார் இப்படித்தான் இருந்தன இவர்களது பதிவுகள் .

ஒரே நாளில் இவர்கள் மாற காரணம் உடனே இவர்கள் சோசலிசம் , கம்யூனிசம் , சமத்துவத்தின் காவலர்களாகி விட்டார்களா என்ற கேள்வியை எழுப்புவதும் அதற்கு பதில் கண்டு பிடிப்பது மிக சுலபம்

ஐந்து ரூபாய் தர்ரேன்னா கூட்டத்தில் வந்து கத்துவேன்னு விவேக் நடித்த காமெடி மாதிரிதான் திடீர் புரட்சி மண்டைக்குள்
ஏறி ஆனாலும் அடிப்படையில் எந்த குணநல மாற்றமும் இல்லாதவர்கள்

சரி இவர்களை ஆதரிக்கும் ஒரு காம்ரேடு எல்லா இடத்திலும் போய் இலக்கியவாதிகள் மலம் உருட்டும் வண்டு என கதறி கதறி கமெண்டு போடுகிறார் இவர் யார்

இவருக்கும் மாதசம்பளம் முக்கால் லட்சம் களப்பணிக்கு இறங்குவேன் என சொல்லி சொல்லி இன்னும் இணையத்தில்
கம்பு சுத்தும் இவரோ ஒரு போராட்டமோ புண்ணாக்கோ நடத்தியதில்லை . அப்படி இருக்கையில் இவரைபோன்ற
கால் லட்சம் அரை லட்சம் சம்பளம் வாங்கும் காம்ரேட்டுகள்  ஒரு நபரை ஆய்வு செய்ய அவரது செயல்பாடுகளை பற்றி
கணிக்க தங்களிடம் நடைமுறை போராட்ட அனுபவம் எதுவும் இல்லாமையால் தவறுகிறார்கள் ;இவர்கள் நரியை பரியென முடிவு செய்துவிடுகிறார்கள் .

பெண்ணியம் பேசினால் வர்க்கம் பேசுவார்கள் வர்க்கம் பேசினால் பெண்ணியம் பேசுவார்கள் சூடானால் வசவில் இறங்கி விடுவார்கள்

இணையத்தில் அசுரன் முதல் முக்கிய தோழர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு முன்னேற்றத்த்தை வினவு முதல் இந்த
அரைவேக்காடு தோழர்கள் கீழிறக்கி விட்டார்கள் அசுரனும் வேறு வழியில்லாமல் இவர்களை பின் தொடர்கிறார்.

இந்த டுபாகூர் பெண் தோழர்களால் ஆங்காங்கே புரட்சி முதல்  பொதுவுடமை வரையிலான கருத்துக்கள் எள்ளி நகையாடபடுவதை அறியாதவர்கள் அல்ல இவர்கள் .

இணையத்தில் கம்பு சுத்தும் இந்த வீராங்கணைகளை அவர்களது பகுதியில் ஒரு சிறு போராட்டம் மற்றும் ஒரு போராட்டத்தின் இவர்களது ஆய்வு முறை இவற்றை கொண்டே தீர்மானிக்க முடியும் .

இல்லை என்றால் வாய்சொல்லில் வீரரடி என்கிற பாரதி பாடலைபோல அமையும் இவர்களது வாய்பந்தல்










--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

6 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post