2009 -எனக்கு என்ன சொன்னது

 வாழ்க்கை ஒரு ஆண்டுக்குள் சுருக்க முடியாதது அதன் விஸ்தீரம் எப்போதும் காலத்தால்  அளக்க முடிவதுதான் என்றாலும் அது தரும் உணர்வுகள் காலத்தில் கால் பாவி நிற்கும்  என சொல்ல முடியாதது ( ரொம்ப குழப்புகிறேனா? )

இந்த ஆண்டில் என்ன சிந்தனைபெரிதான தாக்கத்தை எனக்கு ஏற்படுத்திய என சாராம்சமாக பார்க்கையில் அது ஈழ பிரச்சனைதான்

ஈழத்தின் மிகப்பெரிய விடுதலை இயக்கம் சோர்வடைந்து பின்னடைவை சந்தித்ததும் அதன் தலைவர் பிரபாகாரன் இறந்தார் அல்லது அவரைபோல ஒரு உடல் காட்டப்பட்டது இதெல்லாம் என்னை மிகவும் பாதித்தது.

ஏன் ஒரு இனத்துக்கு இத்தனை நெருக்கடி நாம் ஒரு மீளாய்வை நடத்த வேண்டும் .

நம்மிடையே தலைவன் என்ற போர்வையில் உலவும் நரிகள் யார் , என்பது நமக்கு தெரிய வந்தது இந்த ஆண்டில்தான்

என்னதான் ஆனாலும் நாம் ஜனநாயகத்தில் வாழ்கிறோம் எனும் சிபிஎம் ஆட்களின் சப்பைகட்டுகூட முடிவுக்கு
வந்தது . பணம் கொடுத்து மதுரையில் ஓட்டை அழகிரியால்
விலைக்கு வாங்க முடிந்தது.

ஆங்காங்கே சீல் பிடித்து இத்தனை நாள் நமது உடலுக்கு ஊடுருவி இருந்த புண் வெடித்து கிளம்பியது இந்த ஆண்டில்

நமது சமூக பொருளாதார உறவுகளில் மேம்போக்காக இருக்க முடியாது என்பதை பங்கு சந்தை வீழ்ச்சி உலக பொருளாதார வீழ்ச்சி எடுத்து காட்டி நமது முதலாளித்துவ
ஜாம்பவான்களை குட்டி கரணம் அடிக்க வைத்தது .

போலித்தனம் , போலி ஜனநாயகம் , போலி உற்பத்தி பண்டமாற்று நடைமுறையான முதலாளித்துவம்
இவற்றை பார்த்தோம்

தனிமனிதன் தனது ஆன்மாவை தேடும் மதங்கள் இன்னும்

பழைய பஞ்சாங்கமாக ஏமாற்று வித்தையாக இருப்பதை இந்த ஆண்டு மீண்டும் நிரூபித்தது

பக்கத்து வீட்டில் இருந்த புரோட்ட மாஸ்டர் ஒரு போலி சாமியாடி என வீரு கொண்டு ஒரு பெண் அவனை அடித்தது

போப் ஆண்டவரை அடிக்க முயன்ற பெண் என என்னை
முற்போக்கு பெண்கள் வியப்பில் ஆழ்த்தினார்கள்

வரலாற்றில் -2009 - அதன் தாக்கங்களையும் மன அளவில்
அதன் தாக்கத்தை என்னுள்ளும் அதிகமாக ஏற்படுத்திய

2009 போய் விட்டது

வரும் வருடம் நிச்சயமாக கடந்த நிகழ்வுகளை விட முற்போக்கான நிகழ்வுகளை கொண்டு இருக்கலாம் 2010

காலம் என்ன செய்யும் கோலம் என்ன செய்யும்

நாம் தான் செய்ய வேண்டும்

இந்த ஆண்டை வெற்றிகரமானதாக



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post