வருட பிறப்பு கொண்டாட்டம் சில கேள்விகள்

ஒவ்வொரு ஆண்டும் எனக்கு வருட பிறப்பு என்பது இரவு முழித்து அன்று நியூ செஞ்சரி புத்தகாலயம் முதல் அனைத்து புத்தக கடைகளிலும் தோழர்களுடன் புத்தக வேட்டை ஆடுவதிலேயே முடியும் விடிந்ததும் பை நிறைய புத்தகங்களுடன் வந்து அம்மாவிடம்

காசை கரியாக்கிறானே என்று வாங்கி கட்டி கொள்வேன்
முக்கியமாக எனதருமை தோழர் கனகுவுடன் தொடர்ந்து விவாதித்து கொண்டு
கடைவீதியில் சுற்றி திரிவேன்


ஒரு பக்கம் சபரி மலைக்கு மாலை போட்டு செல்லும் நண்பர்கள்
வழியனுப்ப அழைப்பார்கள் அவர்களுடன் செல்வதன் நோக்கம்
புத்தகம் வாங்க சுற்றலாம் என்பதுதான்.


இரவு பனிரெண்டு மணிக்கும் " ஹாப்பி நியூ யியர் " எனும் வெறித்தனமான கூச்சல்

எங்கள் இருவரின் முகத்திலும் சிரிப்பைத்தான் வரவழைக்கும் .

நேற்று என்பதன் தொடர்ச்சிதான் நாளை அதன் தொடர்சிதான் வருடம் என்பது

எங்கோ நூல் அறுந்து விட்டதாகவும் நாளைமுதல் ஏதோ இவர்கள்

வேறு மனநிலையில் சுரண்டலற்ற ஒரு சுகமான வாழ்க்கை நடத்தபோவது போலவும்

அடித்தொண்டையில் இருந்து சத்தம் எழுப்பு பிறகு  அடித்த பீரை அடுத்தவன் மேல் துப்பி  , சண்டை போட்டு போலீஸ் காரனிடம் அடிவாங்கி திரிபவர்கள்

வாழ்க்கை என்பது காலண்டரில் கிழிக்கப்படும் தேதியில் மாறுவதாக

கற்பனை செய்கிறார்கள் .

உண்மையில் நமது வாழ்க்கை அவ்வளவு எளிதாக மாற்றம் கொள்ள கூடியதா

என சிந்திப்பதில்லை .

வெறும் ஆராவார கொண்டாட்த்தில் பெண்களுடன் மதுவருந்தும்

இந்த வர்க்கம் தனது காசை காட்டி பந்தா பண்ண கிடைத்த நாட்களுள் இதுவும் ஒன்று

இதில் ஆங்கில் வருட பிறப்பை கொண்டாடாதே தமிழ் வருடபிறப்பை கொண்டாடு

என்கிறது ஒரு கும்பல் . எதை கொண்டாடிநாளும் அடிப்படையில் நமது எண்ணங்களும்

அதைகொண்டு சமூக மாற்றமும் வராவிட்டால் பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும்

பழைய பிற்போக்கும் தனங்கள் கொண்ட பழைய ஆண்டே.

இந்த ஆண்டுமுதல் நான் குடியை நிறுத்திவிடுவேன் என்றோ

இந்த ஆண்டுமுதல் நான் யாரையும் சுரண்டமாட்டேன் என்றோ

இந்த ஆண்டுமுதல் நான் ஆணாதிக்க வாதியாக இருக்க மாட்டேன் என்றோ

நாமெல்லாம் எதாவது ஒரு ஆண்டை குறித்துகொண்டு

மாறிவிட்டோம் என்றால்

அதன் பிறகு பிறக்குமே அதுதான் புத்தாண்டு




--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post