முதலில் போலி கார்டு என்றால் என்ன என சொல்லி விடுகிறேன்
ஒரு நபரோ அல்லது பல நபர்களோ உண்மையில் இல்லாமல் பொய்யாக
ஒரு பெயரில் ரேசன் கார்டுகள் இருப்பது தவறுதான்
அடுத்து ஒரே நபர் அல்லது குடும்பத்துக்கு நாலு ஐந்து கார்டுகள் இருப்பது
இதில் ஒன்றை தவிர மத்த அனைத்து போலி கார்டுதான்
இதையெல்லாம் ஒழிப்பதில் நமக்கு எந்த ஆச்சேபனையும் இல்லை
ஆனால் தற்போது இவர்கள் செய்து வருவது
1.அரசு அலுவலர்களை அல்லது தனியார் வாத்தியார்களை \
ஒவ்வொரு தெருவுக்கும் அனுப்புவார்கள்
அங்கே சென்று இவர்கள் ஒரு மரத்தடியில் காபி டீ வரவழைத்து சாப்பிட்டு கொண்டே
அங்கு கொண்டு வருபவர்களுக்கு மட்டும் சரிபார்த்தாச்சு என கையொப்பம் இடுவார்கள்
இதில் பெரிய ஜோக் என்னவென்றால் இதன் நோக்கமே போலி கார்டை கண்டு பிடிப்பது
அதற்கு இவர்கள் -அதிகாரிகள் நேரடியாக வீட்டுக்கு செல்லவேண்டும் அங்கு அந்த விலாசத்தில்
குறிப்பிட்ட நபர் இருக்கிறாரா என பார்க்கவேண்டும் அந்த வேலை நடப்பதில்லை
சரி அடுத்ததாக சுமார் 40 ஆயிரம் கார்டுகள் கோவை மாவட்டத்தில் போலி கார்டுகள்
என முத்திரை குத்தி இருக்கிறார்கள்
எப்படி போலி என கேட்டால் அவர்கள் தற்போது அந்த விலாசத்தில் இல்லையாம்
திருப்பூர் மாதிரியான ஊர்களில் ஒரே விலாசத்தில் மூன்று மாதத்துக்கு மேல் யாரோ
ஒரு சிலர் மட்டும்தான் இருப்பார்கள் 5 வருடம் எல்லாம் வீடு மாறாமல் யாரும் இருக்க மாட்டார்கள்
சரி வீடு மாறினால் ரேசன் கடையில் தெரிவித்து விலாசம் மாற்றிகொள்ளும் நடைமுறையும்
கிடையாது .
விலாசம் மாற்றுவதற்கு தாசில்தார் அலுவலகத்துக்கு போவதற்கு பதில் புதிய ரேசன் கார்டே
ஒரு மனிதன் வாங்கி விடலாம் அவ்வளவு நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது இதில்
இப்போது இவர்கள் கண்டுபிடித்துள்ள 40 ஆயிரம் ரேசன் கார்டுகளும் விலாசம்
மாறியவர்கள் தாம்
சரி விலாசம் மாறியதை அறிவிக்க ஒரு 20 நாள் கெடு கொடுத்தார்கள் என்றால்
அதை ஒரு போஸ்டுகார்டில் எழுதி சம்பந்த பட்டவர்களுக்கு அனுப்பினால் தானே தெரியும்
அதை செய்வதில்லை தாசில்தார் பேப்பரில் ஒன்று போடுவார் நடமுறையில் ஒரு
நடைமுறை நடக்கும்
வேலை வெட்டியை விட்டுவிட்டு ரேசன் கார்டுக்காக அலைபவர்களோ பாவம்
ஜென்ம பாவம் செய்தவர்களாகி விட்டார்கள்
அதிகாரிகள் பிளக்சிபலாகவும் சரியான நடைமுறையுடனும் நடந்து கொள்ளாதவரை
உழைக்கும் மக்களுக்கு கிடைக்கும் இந்த மாதிரி சலுகைகளும் கூட பிடுங்கப்பட்டு
அவர்கள் அனாதைகளாக்க படுகிறார்கள்
ரேசன் கார்டு இல்லாவிட்டால் ஒரு பேங்க அக்கவுண்டு தொடங்க முடியாது
ஒரு கேஸ் வாங்க முடியாது எதுவும் செய்ய முடியாது
ஆனால் ரேசன் கார்டு வாங்குவதோ அமெரிக்கா சென்று வருவதை விட
கடினமான செயல்
என்னதான் தீர்வு மக்கள் திரண்டு தாசில்தார் அலுவலகங்களை முற்றுகை இடவேண்டும்
போராட்டம் மட்டுமே தீர்வு
செய்தி:
3.வீடு, வீடாக ரேஷன் கார்டு சரி பார்ப்பு நெல்லை மாவட்டத்தில் நாளை முதல் ஆரம்பம் * பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்
திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் வீடு, வீடாக ரேஷன் கார்டு சரி பார்ப்பு பணி நாளை (1ம் தேதி) முதல் ஆரம்பமாகிறது.
நெல்லை மாவட்டத்தில் நாளை (1ம் தேதி) முதல் வரும் 30ம் தேதி வரை ரேஷன் கார்டு சரி பார்க்கும் பணி நடக்கிறது. இதற்காக தல தணிக்கையாளர்கள், மேல் தணிக்கையாளர்கள் சனி, ஞாயிறு நாட்களில் வீடு, வீடாக வந்து ரேஷன் கார்டில் பதிவு செய்துள்ள விபரங்களை சரி பார்ப்பர். எனவே, ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருந்து தணிக்கையாளர்களுக்கு ஆய்வின் போது பார்வைக்கு கொடுத்து இப்பணியை முழுமையாக செய்து முடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தல தணிக்கையாளர் வீட்டிற்கு வரும் போது ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் உள்ள நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டைகள், மின் இணைப்பு அட்டை, காஸ் இணைப்பு பாஸ் புத்தகம் விபரம், குடும்ப தலைவர் அல்லது ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் தணிக்கையாளருக்கு விபரங்களை தெரிவித்து தணிக்கை படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================