மதம் மக்களை மயக்கும் அபினி-மார்க்ஸ்
மதத்தின் நம்பிக்கைகளின் பாற்பட்ட மனம் மிக குறுகிய தன்மையுடையதாகிறது
உலகியல் துன்பங்கள் , போராட்டங்கள் எல்லாம் மாயை என்றும் பேசும் அத்வைதம் ஒரு நிலை நாட்டப்பட்ட தத்துவமல்ல மாறாக வேதங்களில் காணப்படும்
இரண்டு பறவை கதை போலவே கதையாக மட்டுமே நம்பிக்கைகளில் உலவுகிறது .
நான் ஆன்மா நாந்தான் கடவுள் என்பதெல்லாம் தொடர்ச்சியான தவத்தின் மூலம் அடையப்பட கூடியது என சொல்லும் இந்து மதம்
இந்த உலகை அதற்கான களம் என்கிறது .
பரிணாம தத்துவத்தின் படி மனித பரிணாமம் என்பது குரங்கிலிருந்து வந்தது போலவே அதன் மதக்கருத்துக்களும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பரிணாமத்தன்மையுடையது என்கிறோம் (மார்க்சியர்கள்)
இந்த கதையின் நாயகன் அகோரிகளிடம் விடப்படுகிறான் ஜோதிடர்களின் கூற்றால் !
ஓரு பிச்சைகாரர்களும் பிணங்களும் பூக்களுடன் அலங்கரிக்கப்பட்டு எடுத்து செல்படும் தெருவொன்றில்
காசியில் ஒரு காலை வேளையில் அவனை திரும்ப அழைத்து செல்ல அவனது தந்தை வருகிறார் . இத்துடன் நாம் கதைக்குள் நுழைகிறோம் .
அகோரிகளிடம் இருந்து சாதாரண மனிதர்கள் வாழும் இடத்துக்கு வரும் ஆர்யா
தனித்து சங்குடனும் சடையுடனும் திரிகிறார் .
கதையானது காசியில் ஆரம்பித்து பிச்சைக்கார்களிட,மும் பரபிரம்மத்துடனும் முடிவடைகிறது
நமது கேள்விகள் பாலாவை நோக்கில் எந்த வகையில் எழுகிறது என்றால்
1.உடல் ஊனம் தவிர்க்க முடியாததா எனில் இன்னும் இந்த சமூகத்தில் ஏன் நிகழ்கிறது
2.பிச்சை என்பது முதலாளித்துவ சமூகத்தின் வெளிப்பாடுதானே
ஊனம் பிச்சை எடுத்தல் என்பவற்றை இல்லாதொழிக்க தீர்வு என்ன சொல்கிறீர்கள்
நான் கடவுள் என்பது எதற்கான தீர்வு ?
நான் மனிதன் என்பது ஏன் தீர்வு கிடைக்கவில்லையா?
கிடைக்காத தீர்வு நான் கடவுள் என்றதும் கிடைத்திடுமா?
படம் முழுக்க காட்டப்படும் தலைகீழ் தியானங்கள் உணர்த்துவது
கிடைக்கும் கைத்தட்டல்களும் சாதாரண மனிதனை
அசாதாரண நிலையில் புரியாத குழப்பம் நிறைந்த மனநிலையில் இருத்தி
எந்த தீர்வை நோக்கியும் சிந்திக்க முடியாமல் செய்கிறதே ?
உதாரணமாக அன்றாட பிரச்சனைக்கு போராடவேண்டும் என்ற மனநிலையை அழித்து
கடவுள் ஆன்மா என்ற கருத்துக்கள் மனிதனிடம் விதைப்பது என்ன?
தனது துன்பங்களுக்கு தீர்வாக ஒரு ஹீரோ வருவான் என்ற மனநிலையைத்தான் எல்லா படங்களும்
உருவாக்குகிறது அதற்கு உங்களின் நான் கடவுள் விதிவிலக்கல்ல மாறாக மேக மூட்டம்போல
கற்பனாவய கருத்துக்கலுடன் வரும் உங்கள் கதாநாயகன் பார்பனியத்தின் பழைமையான அதே
பல்லவியைத்தான் பாடுகிறான் .
ஊனம் -கர்மாவின் பயன் அல்ல அறிவியல் மூலம் ஊனத்தை குணப்படுத்தலாம்
அறிவியல் அதன் மருத்துவ பயன்கள் சமூகம் முழுக்க கிடைக்க சமூக மாற்றம்தான் ஒரே வழி
இல்லாவிட்டால் அகோரிகள் " வாழ முடியாதவர்களுக்கு தினம் தினம் " மரண வரம் அருள வேண்டியதுதான்
நாட்டில் பொருளாதார கொள்கை ,மறுகாலனியாதிக்கத்தின் விளைவாக அன்றாடம் வாழ வழியில்லாதவர்கள் அதிகமாகிவிட்டார்கள்
பதிலென்ன "அகம் பிரம்மாஸ்மி"
இன படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே செய்கிறது பதிலென்ன
"அகம் பிரம்மாஸ்மி "
இப்படி அகம் அகம் என சொல்லிகொண்டே போகவேண்டியதுதான்
உங்களை ஒரு விசயத்துக்காக பாராட்டலாம் பிச்சைக்காரர்களின் உலகம் எவ்வளவு வலியும் வேதனையும் நிறைந்தது என
சொன்னதற்காக
அவர்களையும் ஒரு சில முதலாளிகள் சுரண்டுகிறார்கள் என சொன்னதற்காக
நாம் வாழும் நாட்டிலே இந்தகைய மனிதர்கள் வாழ்கிறார்கள் என பதிவு செய்தமைக்காக
ஆனால் அடிநாதமாக ஒடூம் கருத்தியல் குருட்டுதன்மை வாய்ந்தது என்பது நீங்கள் அறிய வேண்டும்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு
-வள்ளுவர்
============================
Tags
சினிமா விமர்சனம்