எந்தன் உறவு நீ
ஈழத்தமிழா
எந்தன் உயிரே
ஈழத்தமிழா ஈழத்தமிழா.
உந்தன் இரத்தம்
எம்முடைதன்றோ
எந்தன் இதயம்
உனக்கு துடிக்கும்
ஈழத்தமிழா .......................
போர்களின் சத்தம்
கேட்டு வாழ்கிறாய்-இனவெறி
பேய்களுடனே
போரில்சாகிறாய்
ஈழத்தமிழா ......................
நாங்கள் உன்னுடன்
இருக்கிறொம் என்றும்
எங்கள் உயிர்களோ
உனக்கு துடிக்கும்
ஈழத்தமிழா ......................
எத்தனை படைகள்
மோதி அழியும்
எத்தனை துயர்தான்
வந்துமுடியும்
ஈழத்தமிழா ......................
அத்தனை துயர்களும்
கண்டு மலைக்கும்
மலைபோல் உந்தன்
உறுதி நிலைக்கும்
ஈழத்தமிழா ......................
துயருக்கு அழுகையில்
கண்ணீரானோம்
பசிக்கு நீ அழுகையில்
ரொட்டியானோம்
ஈழத்தமிழா ......................
சொந்த நாட்டிலே
அகதியானாய்
சொந்த மண்ணிலே
அடிமையானாய்
ஈழத்தமிழா ......................
எனினும் அதைநீ
ஏற்க மறுத்தாய்
எரியும் மலையென
எழுந்து நிற்கிறாய்
ஈழத்தமிழா ......................
தோளுக்கு உனக்கு
துவக்கே ஆவோம்
தோட்டாவாவோம்
தொடுவானுனக்கே
ஈழத்தமிழா ......................
நாளை உனக்கொரு
வெற்றியாவோம் -வெற்றி
மாலையாய் உந்தன்
கழுத்தை சேர்வோம்
ஈழத்தமிழா ......................
--
தியாகு
-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""
--- சே குவேரா
============================