தொலைதூர கல்வி வழங்கும் புண்ணியவான்கள் கவனத்திற்கு

நன்றி : தமிழ் நெஞ்சம் (முத்தமிழ்)
 
எனக்குத் தெரிந்த வரையிலே, அனைத்துத் தொலைதூரக்கல்வி வழங்கும்
பல்கலைக்கழகங்கள் எல்லாமுமே இந்தக் கொடுமையை ஆற்றி வருகின்றன.

இந்த பல்கலைக்கழகங்களில் யார் படிப்பார்கள்?

"சிறுவயதில் படிக்க இயலாத சூழ்நிலைகளால் - பாதியில் படிப்பை
விட்டுவிட்டவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு."

- இது நல்ல நேரடியான அணுகுமுறை.

இங்கே படிப்பவர்கள் - சிறு வயது / கைக்குழந்தைகளைக் கொண்ட இளம்
தாய்மார்கள் நிறையப்பேர். இது மறுக்க இயலாத உண்மை. அனைவரும் அறிவர்.

இந்த 'அக்னிநட்சத்திர' - சுட்டெரிக்கும் சூரியனின் கொடுமைக் கால
நேரத்தில்தான் - எல்லா நிலையங்களுமே 'பரீட்சைகளை' நடத்துகிறார்கள். இந்த
'அக்னி' நட்சத்திர நேரத்தில் படிப்பதே கடினம். தனது ஊருவிட்டு வேறு
ஊருக்குச் சென்று பல மைல்களுக்கு அப்பால் - 'பரீட்சை' எழுதச்செல்லும்
இளம் தாய்மார்களின் நிலைமை பரிதாபம்.

தனது கைக்குழந்தையை சமாளிப்பதே பிரம்மப்பிரயத்தனம். அதைச் சமாளித்து
படித்து, பல மைல்கள் பிரயாணித்து பல்கலைக்கழகம் சென்று பரீட்சைகள் பல
எழுதிப் பட்டம் வாங்கி பணிக்குச் செல்லவேண்டும்.

எல்லாமே ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்..

ஒரே ஒரு விசயத்தைத்தவிர. அதாவது 6 பரீட்சைகளையும் திங்கள் முதல் சனி வரை தொடர்ந்து போட்டுத்தாக்கி
விடுகிறார்கள். அவர்கள் படும்பாடு பெரும் கவலையை ஏற்படுத்துகிறது..

பெண்களுக்கு 'மனவலிமை' அதிகம்தான். ஆனாலும் அவர்களின் மன அழுத்தம் -
தொடர்ச்சியான 6 பரீட்சைகளால் அதிகரிக்கிறது. மன அழுத்தம் ரொம்பவுமே
மோசமானது. அதைப்பற்றி இந்த பல்கலை நிர்வாகங்களுக்குச் சிறிதளவாவது அக்கறை
வேண்டும்.


நான் கேட்டுக்கொள்வது இரண்டே இரண்டு கோரிக்கைகள்தான்

ஐயா புண்ணியவான்களே

1) பரீட்சையை அக்னி நட்சத்திர நேரத்தில் படுத்தும் வெயிலில்
வைக்காதீர்கள்".

2) எல்லாப் பரீட்சைகளையும் தொடர்ந்து ஒரே தொடர்ச்சியாக ' திங்கள் முதல் சனி'
வரை வைக்காதீர்கள்.



--
தியாகு

-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post