அந்த விவாதம் இங்கேயும் தொடரும்
***********************
//நாம் primitive communism என்று அழைத்த சமூகங்கள் கூட primitive ஆகவும் இல்லை கம்யூனிஸ்டாகவும் இல்லை என்பது சமூகவியல் ஆய்வாளர்களின் முடிவு.
உற்பத்தி உறவுகள் என்ற சொற்றொடரே மீண்டும் பரிசீலிக்கத்தக்கது என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து//
இதில் இவர் குறிப்பிடும் பொருளாதார நிபுணர் யார் என்று எனக்கு விளங்கவில்லை. அனேகமாக இவர் தன்னையே குறிப்பிடுகிறாரோ என்னவோ. கம்யூனிஸ சமுதாயம் என்பது
தனிச் சொத்துரிமை இல்லாத ( ஒழிக்கப்பட்ட ), வர்கங்கள் அற்ற சமுதாயம். இவர் குறிப்பிடும் primitive communism என்னும் புராதனப் பொதுவுடைமைச் சமூகத்தில்
தனிச் சொத்து இருந்தது அல்லது வர்கங்கள் இருந்தது என்பதற்கு இவர் எந்த ஒரு தரவும் வைக்கவில்லை. அதே நேரம் மார்க்ஸிய விஞ்ஞானம், தக்க சான்றுகளோடு புராதனப்
பொதுவுடைமைச் சமூதாயத்தை விளக்கி இருக்கிறது. அதனை தரவுகளின் அடிப்படையில் உடைக்கும் எந்த வாதமும் நமது அனானி நன்பரிடம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
அதே போன்றது தான் இவர் சொல்லும் "உற்பத்தி உறவுகள்" குறித்தான வாதங்களும். முதலில் உற்பத்தி உறவு என்றால் என்ன என்கிற குறைந்த பட்ச அறிவு நமது
அனானி நன்பருக்கு இருக்கிறதா என்பதே சந்தேகத்துக்குறியது என்பது அவரது வாதங்களில் இருந்தே தெளிவாகிறது. உற்பத்தி வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு மக்கள் கூட்டத்திற்கு
இருக்கும் உறவுகள் எல்லா காலங்களிலும் எல்லாவித உறவுகளிலும் இருந்தே தீரும். அது கணிணி யுகமான இன்றைக்கும் மிக அழகாகப் பொருந்தியே வருகிறது. இதனை
எந்த முதலாளித்துவ பொருளாதார நிபுணரும் கூட இதுவரையில் உடைக்க முடிந்ததில்லை.
//மூலதனத்தை அடிப்ப்டையாய்க் கொண்ட சமூகங்களில் தனிமனித சுதந்திரமும், அடிப்படை வாழ்க்கை வசதிகளும் கிடைப்பதை கண்கொண்டு பார்க்க மறுக்கும் கருத்துக்
குருடர்கள் சோஷலிசம் , கம்யூனிசம் என்ற சொர்க்கத்தைக் காட்டி இன்றைய மனித வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கிறர்கள்//
இவர் குறிப்பிடுவது போல மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் தனிமனித சுதந்திரமும் அடிப்படை வாழ்க்கை வசதிகளும் எங்கே நிறைவு செய்யப்பட்டிருக்கிறது என்கிற
தகவலோ உதாரணங்களோ இல்லாததே இவர் எப்பேர்பட்ட பொய்யர் என்பதை நமக்குப் புரியவைக்கிறது. மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட / இன்னும் சொல்லப் போனால்
தனது மூலதன நலனுக்கும் விரிவாக்கத்திற்கும் அடுத்த நாடுகளைக் கூட சுரண்டவும், போர்கள் மூலம் அடிபணியவும் வைக்கத் துணிந்த அதே அமெரிக்காவில் தான் இன்னும் பெருவாரியான
மக்கள் அடிப்படை மருத்துவ வசதி கூட கிடைக்காமல் அல்லலுரும் செய்திகள் வந்தவன்னம் உள்ளது. குறைந்த பட்சம் நமது அரைகுறை அனானியை செய்தித் தாள்களாவது படிக்குமாறு
கேட்டுக் கொள்கிறேன். கையில் காசு வாயில் தோசை என்பது போல மக்களின் அடிப்படை உரிமைகளான மருத்துவம், கல்வி - ஏன் தண்ணீரைக் கூட வியாபாரமாக்கி வைத்திருக்கும்
மூலதனத்தை உயர்த்திப்பிடிப்பதே அனானியின் மக்கள் விரோத வர்க்க குணாம்சம் வெளிப்படையாகிறது.
//கம்யூனிசம் என்பது உங்கள் கற்பனையில் உதித்த சொர்க்க லோகம் என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி. அதையே தான் நானும் சொல்கிறேன். கற்பனாவாதம் கனவுலகிலும்,
மதவாதிகளின் ஆசைகாட்டலிலும் , சினிமா டூயட்டிலும் வரலாமே தவிர சமூக அலசலில் வரலாகாது. கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் வீழ்ச்சியிலும், ரோமானியாவின் சோஷலிச
ஆளும் வர்க்கம் நடத்திய அராஜகத்திலும், கம்யூனிஸ்ட் போல் போட் நடத்திய படுகொலை மைதானங்களுக்கு அப்புறமும், ஒரு படித்த அன்பர் கம்யூனிசம் பேசும்
வேதைனையை என்ன சொல்ல?//
இன்றைய சமுதாய வளர்ச்சிப் போக்கினை ஆய்வு செய்து இன்றைய பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்று அனானி முன்வைத்தால் மேற்கொண்டு விவாதிக்க நன்றாக இருக்கும். கம்யூனிச
சமுதாயம் என்பது கற்பனாவதமல்ல, மாறாக அதனை நோக்கிய பயணத்தை மார்க்ஸிய அறிஞர்கள் படிப்படியாக விஞ்ஞானப்பூர்வமாக எழுது வைத்திருக்கிறார்கள். அந்தப் பயண்த்தில்
ஒரு இடைப்பட்ட கட்டம் தான் சோசலிஸ சமுதாயம். அனானி குறிப்பிடுவது போல ரஷ்யா ஒரு கம்யூனிஸ சமுதாயமாக இருக்கவில்லை. மேலும் உலகில் ஒரே ஒரு நாட்டில் கம்யூனிஸ
சமுதாயம் அமைய வாய்ப்பும் இல்லை. எல்லா நாடுகளும் சோசலிச கட்டுமானத்தில் உறுதிப்பட்டவுடன் தான் கம்யூனிச சமுதாயத்திற்கான பாய்ச்சல் ஒரே நேரத்தில் நிகழும். அப்புறம்,
போல்பாட் கம்யூனிஸ்ட் என்பது எனக்கு புதிய செய்தி - குறைந்த பட்சம் அதற்காவது ஏதாவது தரவுகளை முன்வைத்தி வாதாடும் நேர்மை இல்லாமல் போனது வருத்ததிற்கு உரியது.
//சோஷலிசத்தின் தோல்விகள் : சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியில் பிற நாடுகளின் பங்கு இருக்கலாம் என்று ஒப்புக் கொண்டாலும் கூட போல் போட்டின் படுகொலைகளுக்கும்,
மாஓவின் படுகொலைகளுக்கும், ஸ்டாலினின் படுகொலைகளுக்கும், ஹங்கேரி, ஆஃப்கானிஸ்தானை சோவியத் யூனிய்ன ஆக்கிரமித்ததற்கும் யார் காரணம்? திபெத்தை சீனா
ஆக்கிரமித்ததற்கும், வடகொரியவும், கியூபாவும் அடக்குமுறை நாடுகளாய் இருப்பதற்கும் யார் காரணம் என்று தெரிவியுங்கள்.//
ஒரு அரசு அமைப்பு எப்போது தோல்வியுறுகிறது? அது தனது மக்களுக்கான தேவைகளையும் அபிலாஷைகளையும் நிறைவு செய்யும் கடமையில் இருந்து தவறும் போது தான். அப்படியானால்
இன்றைக்கு உலகில் எல்லா போர்களுக்கும் காரணமான ஏகாதிபத்தியம் ( முதலாளித்துவத்தின் முன்னேறிய வடிவம் ) படுதோல்வியடைந்துள்ளதோடு, உலகின் அமைதிக்கு பெரும்
கேடாகவும் மக்கள் விரோதமானதாகவும் இருந்து வருகிறது. சோவியத்தின் முதலாளித்துவ மீட்சியில் பிற நாடுகளின் பங்கு என்பதையும் தாண்டி வேறு பல காரணங்களும் உண்டு.
இது பற்றி தோழர் அசுரன் பல்வேறு கட்டங்களில் பல்வேறு பதிவுகள் எழுதி இருக்கிறார். மாவொவின் பாய்ச்சல் பொருளாதாரம் பற்றியும், தோழர் ஸ்டாலின் மேலான அவதூறுகளை உடைக்க்கும் விதத்தில்
மறுக்கவியலாத தரவுகளின் அடிப்படையில் பல கட்டுரைகள் தமிழ்மணத்தில் எழுதப்பட்டு விட்டது. (கீழே சுட்டி இருக்கு)அப்போதெல்லாம் நமது அன்புக்குரிய அனானி எங்கே இருந்தார் என்ன செய்து
கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போதும் அவர் விரும்பினால் அது சம்பந்தமான சுட்டிகளை தர நாம் தயார். ஆனால் அதே அறிவு நாணயத்தோடு
நமது அனானி அந்தப் பதிவுகளுக்கு வந்து தனது மறுப்பு வாதங்களை முன் வைக்கத் தயாரா என்பதை சொல்ல வேண்டும். இங்கே வேறு இழையில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்
சூழலில் ஏற்கனவே பதிலளிக்கப்பட்ட விஷயங்களைக் கிளறுவதில் உள்நோக்கம் இருப்பதாகவும் நான் சந்தேகிக்கிறேன். இதே அம்சத்திலான உரையாடலைத் தொடர அது சம்பந்தமான
பதிவுகளுக்கு வருமாறு அனானி நன்பரை அன்புடன் அழைக்கிறேன்.
//கிம் இல் ஜாங், போல் போட் போன்றோரின? // -
இவர்கள் யார்? இவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று நம் அனானி எப்படி சொல்கிறார்? இவர்களது அரசியல் நடவடிக்கைகள்
கம்யூனிஸ சித்தாந்தங்களை அடியொற்றியது தான் என்று நிறுவ அனானியிடம் தரவுகளும் அசைக்க முடியாத ஆதாரங்களும் இருந்தால் மேற் சொன்ன பதிவுகள் ஏதாவது ஒன்றில்
அனானியைச் சந்திக்க நானும் ஆவலாய் இருக்கிறேன்.
//மார்க்ஸ் கோட்பாட்டின் அடிப்ப்டையான உற்பத்தி உறவுகள் தான் சமூகத்தின் நிர்ணய சக்தி என்பதையும், இந்த் தவறான அடிப்படையில் ஏற்பட்ட வர்க்கக் கோட்பாட்டையும்
தான் தவறென்று சுட்டிக் காட்டியிருக்கிறேன்.//
எப்படித் தவறானதென்று சொல்லாமல் வெறுமே தவறு தவறு என்று நீங்கள் சொல்லிவிட்டால் நாங்கள் எந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்வது? நீங்கள் என்ன கருத்து நாட்டாமையா?
இதே விதமாக என்னாலும் பல "தவறுகளையும்" "கருத்துக்களையும்" முன்வைக்க முடியும்... உதாரணத்துக்கு சில
1) ஹெட்கேவாருக்கும் கோல்வால்கருக்கும் ஹோமோ உறவு இருந்தது
2) பின்னூட்ட பாலாவும் டோ ண்டு ராகவனும் ஒருவர் தான்
3) கோல்வால்கர் செத்த போது அவருக்கு எய்ட்ஸ் இருந்ததாக பல அறிஞர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இதே ரீதியில் என்னாலும் "வாதாட" முடியும். ஆனால் நாம் கேட்பது என்னவென்றால் நீங்கள் தவறு என்று குறிப்பிடும் மார்க்ஸிய விஞ்ஞானம் எந்த அடிப்படையில் தவறு என்று
விளக்க வேண்டும் என்பதே!
//முதலில் தேவை சப்ளையின் மாற்றங்கள் பற்றி. தேவை, சப்ளை என்பது அடிப்ப்டையான சமூக பொருளாதாரச் சித்தாந்தம் .உடலின் அடிப்படையான பசியைப் போல. எந்தப்
பொருளின் தேவை, எந்த பொருளின் சப்ளை என்பது நிச்சயம் மாறுபடத்தான் செய்யும். உதாரணமாக நம் நாட்டில் கட்டடம் கட்ட சிமெண்ட் தேவை. சில நாடுகளில் மரம்
தேவை. சில நாடுகளில் செங்கள்ளாலும், சில நாடுகளில் கன் கிரீட் சிலாப்களாலும் கட்டுகிறார்கள். மர வீடுகள் கட்டப் படும் நாடுகளில் சிமெண்டுக்குத் தேவை
இல்லை. அங்கு அதை உற்பத்தி செய்ய மாட்டார்கள். நம்முடைய உணவுப் பழக்கங்களும் கூட மாறி வருகின்றன. அரிசி சாதம் சாப்பிடாத வட இந்தியாவில் கோதுமைக்கு
டிமாண்ட் அதனால் கோதுமை தான் சப்ளை உண்டு. அங்கு அரிசி போக வேண்டும் என்றால், அரிசியின் பயணத்துக்கான செலவும் உற்பத்திச் செலவு போல அதன்
விலையைப் பாதிக்கும். போக்குவரத்தில் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்கள் கரிக்கும், பிறகு மின்சார உற்பத்திக்கும் டிமாண்ட் ஏற்படுத்தி அதனால், கரிச்
சுரங்கங்கள், மின்சக்தி உற்பத்தியின் தொழில் நுணுக்கங்கள் என்று மாறுதல் நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் ந்ம கண்கள் முன்பு நடந்த மாறுதல்களைப்
பார்த்தாலே அதன் உண்மை தெரியும். //
மீண்டும் அ.உ.அ.பொ! எல்லாச் சமூகங்களிலும் தேவை இருக்கவே செய்யும். கம்யூனிஸ்ச சமுதாயமாக இருந்தாலும் தேவைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் முதலாளித்துவ
சமுதாயத்தில் உற்பத்தி என்பது தேவைக்காக அல்லாமல் மூலதனத்தின் நலனுக்காவே இருக்கும். மாறாக ஒரு சோசலிச சமூகத்திலும் கம்யூனிச சமூகத்திலும் உற்பத்தி என்பது
மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியதாயும், எல்லா தரப்பு மக்களுக்குமானதாகவும் இருக்கும். ஒரு முதலாளித்துவ உற்பத்தி முறையானது மக்களின் வாங்கும் திறனை
அதிகரிப்பதில்லை என்பதொருபுறமும், வாங்கும் திறன் கொண்ட புதிய சந்தைகளுக்கான போட்டியும் கொண்டதாக இருக்கும். உதாரணமாக, கோடிக்கணக்கான மக்கள் பட்டினியில்
வாடும் நிலையில், உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்வார்கள். விலையை நிலைநிறுத்த, உபரி உற்பத்தியான தானியங்களை ( உற்பத்தி சக்திகளை) கடலில் கொட்டி அழிப்பார்கள்.
//இன்று சோஷலிச நாடுகள் என்று அழைக்கப் படும் சமூகங்களும் கூட தேவை, சப்ளை அடிப்படையில் தான் இயங்கி வருகின்றன. மூலதன நாடுகளுக்கு
முறைந்த செலவில் உழைப்பை வழங்கித்தான் சீனா வளர்ந்து வருகிறது. "காகிதப் புலி" அமெரிக்காவுடன் உறவு நிக்சனால் தொடங்கி வைக்கப் பட்டபோது, நிக்சனின்
நோக்கம் சோவியத் யூனியனைத் தனிமைப் படுத்துவதாய் இருந்தது. சீனாவிற்கு "சகோதர" சோஷலிச நாட்டிற்கு எதிராய் காகிதப் புலியுடன் கூட்டுச் சேர்ந்து, சீனவை
பொருளாதார ரீதியாய் உயர்த்த முயல்வதில் எந்த நெருடலும் இல்லை. முழுக்க மூலதன நாடாகியும், கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை, சீனாவின் ஆளும் "வர்க்கம்"
தாங்குவதில் உள்ள சுயநலம் இது தான்: கம்யூனிஸ்டுக் கட்சியின் பெயரை வைத்துக் கொண் டு மற்ற எந்த மாறுபட்ட கருத்தும் எழாமல் செய்துவிட முடியும்.
பாலுன் காங் அடக்கு முறை, தியனமன் சதுக்கம் என்று அடக்குமுறைக்கு உதாரணங்கள் உள்ளன. காஸ்ட்ரோ தன் ஆட்சியை 40 வருடமாய் விடாப்பிடியாய் தக்க
வைத்துக் கொண்டுள்ளார். இந்த சமூகமும் தேவை சப்ளையை அடிப்படையாய்க் கொண்டு தான் இயங்குகிறது. அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடையை
ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கியூபாவின் சுருட்டும், கரும்பும் ஐரோப்பாவிற்கு ஏறுமதி செய்து தான் கியூபா இயங்கி வருகிறது. ஸோஷலிச சொர்க்கத்தை விட்டு ,
உயிரைப் பணயம் வைத்து கள்ளத் தோணியில் அமெரிக்காவிற்கும்பயணப்படும் சோஷலிச விரோதிகள், துரோகிகள் கியூபாவிற்கு அனுப்பும் டாலர்களும் கூட கியூபாவின்
பொர்ருளாதாரத்தை தூக்கி நிறுத்துகிறது. //
"இன்றைய சோஷலிச நாடுகள்" என்று அனானி குறிப்பிடும் நாடுகள் சோசலிச நாடுகள் இல்லை. சீனாவில் முதலாளித்துவ மீட்சியானது மாவோவின் காலத்துக்கு பின்னே
உடனடியாகத் தொடங்கி விட்டது. இந்த சமூகம் தேவை சப்ளையை அடிப்படையாகக் கொண்டு தான் இயங்குகிறது - ஆனால் அதன் நலன் யாருக்கானதாய் இருக்கிறது?
என்பது தான் கேள்வி! தேவை சப்ளையை அடிப்படையாய்க் கொண்டு தான் உற்பத்தி நிகழ்கிறது - ஆனால் அது யாரை ஊதிப் பெருக்க வைக்கிறது / யாரை சுரண்டுகிறது?
இன்றைய சமூகத்தில் நிச்சயமாக சப்ளை என்பது சமச்சீராக இல்லை. இந்த உண்மையை மறைத்துக் கொண்டு தான் அனானி வாதாடி வருகிறார். எல்லோருக்குமான தேவை என்பது
தேவைக்கான விதத்தில் பூர்த்தி செய்யப்படுகிறதா என்றால் இல்லை என்பதே பதில். பருத்தி விதைக்கும் விவசாயியும் / நெய்து துணியாக்கும் நெசவாளியும் தங்களது சொந்த
தேவையைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் கந்தலைத் தான் உடுத்தித் திரிகிறார்கள். இன்று வினியோகம் என்பது சர்வ நிச்சயமாக சமச்சீராக இல்லை என்பதும்
இந்த முரண்பாடு தான் சோசலிசத் தீர்வை நோக்கி மக்களைத் தள்ளும் காரணி என்பதையும் நான் இங்கே முன்வைக்கிறேன். இதன் அடிப்படையில் வாதாடுமாறும் அனானி நன்பரைக்
கேட்டுக் கொள்கிறேன்.
சுட்டிகள்:பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள்!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_27.html
சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_8142.html
தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_24.html
மாவோ - மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_22.html
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள்!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_27.html
சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_8142.html
தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_24.html