ஒரு சண்டை நடந்தது
இருவரின் சண்டைதான்
அது என அருகில் சென்றோம்
அங்கே பலர் இருந்தனர்
சிலர் ஒருவனுக்கும்
சிலர் மற்றவனுக்கும்
பேசிக்கொண்டு இருந்தனர்
சண்டையை விலக்க
ஒருவன் முயன்றான்
அவனைபோலவே
பலரும் செய்தனர்
சண்டைமுடிந்ததும்
கீழே இறந்து
கிடந்தது முதலில்
விலக்க முயன்றவன்தான்
சண்டைக்கு
அவன் காரணமல்ல
சண்டையின் யாருடைய
சார்பும் அல்ல
சண்டையும் அவனால்
அல்ல
யாரால் சொல்லமுடியும்
அங்கே சண்டையிட்டது
இருவர்தான் என்றும்
மற்றவர்கள் விலக்க
வந்தவர்கள் என்றும்
நான் நினைக்கிறேன்
இறந்தவன் மட்டுமே
விலக்க வந்தவனென்று !
(அங்கிங்கெனாதபடி எங்கும் நடக்கும் அனைத்து சண்டைக்கும் பொருந்தலாம்)
--
தியாகு