விநாயகர் சதுர்த்தி


சின்ன குழந்தையாக இருக்கும்போதே விநாயகர் சதுர்த்தின்னா
 
கொண்டாட்டம் தான் ஏன்னா கொழுக்கட்டை விதவிதமா
 
செய்வாங்களேன்னுதான்.
 
 
பிறகு களிமண்ணால் செய்த பிள்ளையார் பொம்மைகளை நாங்களும்
 
ஒரு கோவில் கட்டி அதுல வச்சி விளையாடுவது பிறகு ஊரணியில்
 
கரைப்பது   என எங்கள் நண்பர்கள் கூட்டம் அசத்தும் விநாயகர் ஒரு
 
அமைதியான கடவுள்  ஒரு தருப்பை புல்லுக்கும் கொஞ்சம் தண்ணிரும்
 
வைத்து கூட கும்பிடலாம்னு    சொல்லுவாங்க  அவர் ஒரு
 
பொதுவுடமைவாதியும் கூட தனது கோவிலுக்குள் இவன் வரக்கூடாதுன்னு
 
சொல்வதில்லை பாருங்க ஏன்னா அவர் இருக்கும்
 
அரசமரத்தடியில்தான் எல்லாரும் உங்கார்ந்து கதை பேசுவாங்க
 
பள்ளி கூடத்தில் ஒண்ணாப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை
 
பரீச்சையில் காப்பாத்திய பிள்ளையார்  கல்லூரியில் கூட வர மறுத்து விட்டார்
 
களிமண்ணில் உருவம் செய்ய ஆரம்பிக்கும்போது பிள்ளையார்தான் எளிதாக வந்தார்
 
அரளிப்பூன்னு ஒண்ணு சாத்துவாங்க அவருக்கு அது எப்பவும் இரயில் ரோட்டில் தாராளமா கிடைக்கும் .
 
தனக்கு மிக ஆடம்பரமான பூக்களோ ஆடைகளோ கூட அவர் கேட்பதில்லை
 
ஏன் வருடத்துக்கு ஒரு தடவை எடுத்து தரும் வேட்டியோடு அமைதி காப்பார் .
 
 பிறகு எந்த சாமிக்கு வேண்டுதல் வைத்தாலும் உடனே செய்துடனும்னு
 
சொல்லுவாங்க ஆன விநாயகர் அப்படி இல்லைங்க ஏதும் தொந்தரவு
 
தருவதில்லை தனக்கு சேரவேண்டிய கடனுக்கு என சொல்லுவாங்க.
 
பிறகு இவர் மேல எனக்கு என்னா கோபம்னா இவர் திருட்டை
 
ஊக்கப்படுத்துவதுதானுங்க   ஆமாம் ஒரு ஊரில் பிள்ளையார்
 
வைக்கனும்னா அடுத்த ஊரில் இருந்து திருடிட்டு தான்
 
வரனும்னு ஒரு விதி இருக்கு அதை வச்சதுக்குத்தான் .
 
 
தனது யானை முகத்துடன் தோற்றமளிக்கும் இவர் அவங்க அம்மா
 
அதாங்க பார்வதியின்  அழுக்கில் இருந்து பிறந்தவர்னும் சொல்லுவாங்க
 
இருக்கலாம் இவரை ரொம்ப நாளைக்கு  ஊரில எவனும் குளிப்பாட்டுவது
 
இல்லையே அதான் சொன்னேன்.
 
 
ஒரு காலத்தில பிள்ளையாருக்கு கெடா வெட்டி இருக்கலாம் பிறகு
 
அவரோட ஆனை முகத்துக்கு லாஜிக்கா ஒத்துவரைலன்னு நம்ம மக்கள்
 
சைவம் படைச்சு இருக்கலாம்க
 
ஆனா பாருங்க அவருக்கு பூணூல் மாட்டியதுக்கு இவனுகளை 
 
 உதைக்கனும்.
 
சரசுவதிக்கு மடிசார், லச்சுமிக்கு மடிசார் கட்டி விட்டவனுங்கதான் இதையும்
 
செய்தானுங்க  பிறகு சாமிக்கெல்லாம் மீசையை மழிச்சு விட்டுட்டு தானும்
 
சாமியும் ஒண்ணுன்னு  அறியாத மக்களிடம் சொல்லிகிட்டு இருக்காங்கன்னா
 
பார்த்துக்கங்களேன் .
 
 
சரி பிள்ளையாருக்கு வாங்க,  இந்து முன்னனி இவரை மசூதி தெருவழியா எடுத்துட்டு போய்
 
முஸ்லீம்களிடம் வம்பிழுக்கும் வரை அவர் ஒண்ணும் தீண்டப்படாத அமைதி விரும்பாத கடவுள்
 
இல்லைங்க
 
 
ரொம்ப செலவு வைக்காத சாமிய ரொம்ப செலவு செய்து கும்பிடாதீங்க
 
அவரை அமைதியா ஆலமரத்தடியிலேயே இருக்க விடுங்க
 
மசூதி வழியா எடுத்துட்டு போகாதீங்க அவர் ஒரு அமைதி விரும்பி
 
சண்டைக்கு அவர சாக்கா வைக்காதீங்கன்னு ஊரு காரனுகளை கேட்டுகிறேன்.
 
 
நாமலும் முஸ்லீம்களும் சண்டை போட்டா யாருக்கு லாபம்
 
இதை பிள்ளையாரோ அல்லாவோ  யாருமே விரும்ப மாட்டாங்க
 
 
எத்தனையோ பிள்ளையார் சதுர்த்திக்கு போஸ்டர் ஒட்டிடோம்க
 
பிள்ளையாரை வைத்து அரசியல் பண்ணாதடா பரதேசின்னு
 
 
கேட்பதில்லைங்க.
 
 
நான் பிள்ளையாரிடம் கேட்பதெல்லாம் இதுதான்
 
தடைகளை விலக்கும் பிள்ளையாரே
கடைகளை உடைப்பது தெரியுமா
சிலைகளை எடுத்து சென்று முஸ்லீம்
பகைகளை பெறுவது தெரியுமா
வினைகளை அறுப்பது உண்மையெனில்-இந்த
பதர்களை அறுப்பது எப்போ .
 
 
(கல் அல்ல உங்கள் பிள்ளையார் என்றால் நல்லது செய்யுங்கள் )
 

--
--
தியாகு
=============================

12 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post