அன்னை காளிக்கு கடுதாசி

ஒளிதரும் கதிரும் பணிதரும் முகிலும்
களிதரும் நின் கருணைமுகமும்- தமிழின்
தனிதரும் 'ழ' கரமும் பெற்றேனாயினும்
பொருள்தரும் லகரமும் தருவாய்! தாயே!

கணிதரும் கதம்ப காட்டிடை வசிக்கும்
கவிஞர் பாட்டிடை தவழும் தாயே!
நினதரும் அன்பர் நிலைதனை உயர்த்து
நெஞ்சத்து கணலினை மூட்டு காளி!

சுகம் தரும் வாழ்வும், சொந்த நாட்டிடம்
சால்பும் தருவாய்- பதம் தரும் தமிழின்
பண்ணிணை பயனொடு தரும் அன்னையே!
நிதம் தேடி சோற்றினை திண்றிடும்
நிலைதனை மாற்றிடு தேவி!

அறிந்தது உணர்த்தி பரம்தனை தந்த
பரம்பொருளாம் தேவி- உனதருமை
மகன்தனை மாற்றான் காட்டிடைஊழியம்
செய்திட திருவுளமோ!
இதம்தரும் கொண்றை மாலையணிந்து
நிதமும் கண்ணியாய் திகழும் தேவி!

அன்புடன்
தியாகு
(அபிராமி அந்தாதி போலஎழுத நினைத்துஎழுதியது)

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post