வாழ்வின் முக்கிய தேவைஎது

ஒரு கல்லூரி விரிவுரையாளர்! தனது தத்துவ வகுப்பில் இருக்கிறார்மேசையின் மீது சில பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன!.
வகுப்பு துவங்குகிறது! ஆசிரியர் அமைதியாக ஒரு காலியான குடுவையைஎடுகிறார்,அதில் பந்துக்களை நிரப்பினார் பிறகு மாணவர்களை பார்த்து இந்த குடுவை நிரம்பி இருக்கிறதா என்று கேட்க "ஆம்" பதிலலிக்கின்றனர்.
பிறகு அந்த குடுவையில் சிறிய கூலாங் கற்களை போடுகிறார் சிறிது குடுவையை ஆட்டியதும் சிறிய கற்கள் கொஞ்சம் இருந்த இடத்தை அடைத்து கொண்டது.
மறுபடியும் மாணவர்களை கேட்கிறார் குடுவை நிரம்பி விட்டதா என்று மாணவர்கள் வாயடைத்துபோய் 'ஆம்"என்கின்றனர்.
பிறகு மணலைஎடுத்து குடுவையில் போடுகிறார் அது மீதமுள்ள இடத்தை அடைத்து கொள்கிறது.
இப்பொழுது அவர் மாணவர்களை பார்த்து "இந்த குடுவைதான் நமது வாழ்க்கைக்கு உதாரணம் அதில் உள்ள பந்துக்கள் வாழ்வில் சில முக்கியமான தேவைகளான "கடவுள்", "ஆன்மா" "ஆன்மீகம்" ஆகியன
இவை வாழ்வில் அனைத்தையும் இழந்த பிறகும் நம்முடன் இருப்பன. அது தவிர குடுவை இன்னும் நிரப்பப்பட வேண்டும், கூலாங் கற்கள் குடும்பம்", "நண்பர்கள்" "ஆரோக்கியம்"ஆகியவற்றை குறிக்கிறது
மற்றும் மணலானது மற்ற அனைத்தையும் குறிப்பது அதாவது "வீடு",கார் மற்றும் அனைத்து உலக பொருள்களையும் குறிப்பது.
மணலை முதலில் போட்டால் மற்ற எதையுமே குடுவையில் போடமுடியாது அதுபோல வாழ்வில் முக்கியமற்ற சிறிய விசயங்களை கொண்டு நிரப்பிவிட்டால் மற்ற எந்த விசயங்களையும் கொண்டு வர முடியாது.
"வாழ்வில் எது முக்கியம் என்பதில் கவனம் செலுத்துங்கள்"

அன்புடன்
தியாகு

நன்றி உதயசங்கர் :பெங்களூர்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post