மா.சிவக்குமாரின் தரும சிந்தனையின் மேல் விவாதம்

மா.சிவக்குமாரின் தரும சிந்தனையின் மேல் விவாதம்

மா.சிவகுமாரின் இந்த பதிவை படித்துவிடுங்கள் இதிலிருந்து எனது விவாதம்

தொடங்குகிறது

http://masivakumar.blogspot.com/2012/01/blog-post_18.html

திரு மா. சிவக்குமார் மட்டுமல்ல சமூகத்தில் நிலவும் வறுமைக்கு இறங்காதவர்கள் யாருமே இல்லை ஆனால் அதற்கான காரணத்தை

ஆராயவும் அதை தீர்பதற்கும் தான் யாரும் முன்வரவில்லை .

அவரது பதிவில் சொல்லி இருக்கும் அந்த பசிப்பிணிக்கு காரணம் முதலாளித்துவம்தான் என்கிற எனது குற்றச்சாட்டுடன் எனது விவாதம்

தொடங்குகிறது

சாராம்சமாக:

இந்த விவாத்த்தில் முதலாளித்துவம் என்ற காரணத்தில் ஆரம்பித்த நான் கூலி உழைப்பும் மூலதனமும் எதிர்விகித தொடர்புடையன என்பதை நிருவ முயன்று இருப்பேன் விசயத்தை மொத்தமாக பார்க்காமல் தனிதனியாக சிவக்குமார் மட்டுமல்ல நிறைய பேர் இவ்வாறுதான் பார்க்கிறார்கள் என்பதால் பிரச்சனையின் அடிநாதம் கூலி உழைப்பு முறை நிலவும் இந்த சமூகத்தின் உற்பத்தி முறைதான் என்பதை ஆணித்தரமாக நிருவ முயல்கிறேன்

-------------------------------------------------------------

தியாகு: மா சி இந்த அவல நிலைக்கு காரணம் முதலாளித்துவம் தானே

மா.சி: அதுதான் தெரியவில்லை. எப்படின்னு நீங்க விளக்கமா எழுத வேண்டும்

ராஜ்குமார் சின்னசாமி: இந்த முதலாளித்துவம் பேசும் ஆட்கள் யார்?

முதலாளி ஆக முடியாதவங்களா ?

அமெரிக்க கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களா?

தள்ளு தள்ளு அடுத்தவர்களை தள்ளும் ஆட்களா?

இல்லை உண்மையாகவே சோ கால்ட் முதலாளித்துவத்தில் பாதிக்கப்பட்டவர்களா ?

தியாகு:

முதலாளித்துவம் பேசும் ஆள்கள் குட்டி முதலாளியா இருக்கிறவுகதான் (இணையத்தில்) தானும் ஒரு பெரிய முதலாளி ஆவோம் என்கிற நப்பாசையில் இருக்கிறவக

நம்ம அதியமான் அண்ணாச்சி முதலாளித்துவம் குழந்தை பருவத்தில் செய்த சாதனைகளை இன்னும் அது செய்துட்டு இருக்கிறதா கனவு காண்பவர்

ஆனால் முதலாளித்துவம் அழுகி நாறி விடும் நிலமைக்கு வந்த பிறகும் அதுதான் காரணம் என சொல்லாமல் அது இன்னும் முழுக்க முழுக்க வந்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என ஆத்து ஆத்துன்னு சொற்பொழிவு ஆத்திட்டு இருக்கார் வினவுல

நம்ம மாசி பாவம் முதலாளித்துவத்தின் கோர பிடியில் நடக்கும் அவலங்களை வெறுப்பவர் ஆனால் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர் தனது கொள்கையின் படி நின்று முதலாளித்துவத்தை ஆதரிப்பதா அல்லது மனசாட்சியின் படி நின்று சோசலிசத்தை ஆதரிப்பதா என தடுமாறுபவர் (என் கணிப்பு இதை ஒத்துக்க மாட்டார் )

வேற வழியில்லாம தனது மனசாட்சிக்கும் , கொள்கைக்கும் சமரசபடுத்தும் படி இருக்கும் வினவோடு ஐக்கியமானவர் மா சி

மா.சி :

இந்த அவல நிலைக்குக் காரணம் முதலாளித்துவம் என்று விளக்காமல் வேறு ஏதோ சொல்கிறீர்கள்.

1. நாம் விவாதத்துக்குப் பயன்படுத்தும் இணையம் கூட முதலாளித்துவத்தின் மூலம் உருவானதுதான். அப்படி இருக்கையில் அவல நிலைக்கு காரணம் முதலாளித்துவம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

2. முதலாளித்துவம் குழந்தை பருவத்தில் என்ன சாதனைகள் செய்தது என்று ஒரு பதிவு போடுங்கள். அந்த சாதனை பருவத்திலிருந்து இப்போது அழுகி நாறி விடும் நிலைமை எப்படி ஏற்பட்டது என்றும் விளக்க வேண்டும்.

3. மனசாட்சியின்படி ஏன் சோசலிசத்தை ஆதரிக்க வேண்டும்? எனது மனசாட்சிக்கும் கொள்கைக்கும் வினவு எப்படி சமரசப்படுத்துகிறது என்றும் எனக்குப் புரியவில்லை.

தியாகு:

//1. நாம் விவாதத்துக்குப் பயன்படுத்தும் இணையம் கூட முதலாளித்துவத்தின் மூலம் உருவானதுதான். அப்படி இருக்கையில் அவல நிலைக்கு காரணம் முதலாளித்துவம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? //

ஒரு சமூக அமைப்பு தானாக தோன்றி விடாது நிலவுடமை சமூகத்தில் இருந்து முதலாளித்துவமும் முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசமும் தோன்றும் ஏனெனில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்பது அதிகரிக்கும் போது உற்பத்தி உறவு என்பது காலுக்கு பத்தாத சட்டையாகி விடுகிறது

//2. முதலாளித்துவம் குழந்தை பருவத்தில் என்ன சாதனைகள் செய்தது என்று ஒரு பதிவு போடுங்கள். அந்த சாதனை பருவத்திலிருந்து இப்போது அழுகி நாறி விடும் நிலைமை எப்படி ஏற்பட்டது என்றும் விளக்க வேண்டும். //

இன்று நாம் அடைந்துள்ள முன்னேற்றம் அனைத்திற்கும் முதலாளித்துவமே காரணம் ஆனால் அந்த வளர்ச்சி சர்வாம்ச வளர்ச்சியாக இல்லாமல் நீங்கள் சுட்டி காட்டும் படி ஒரு குழந்தை வெளிறி சாகும் போது இன்னொரு குழந்தை நன்கு புஸ்டியாக வளருவதற்கு காரணம் இந்த சந்தை பொருளாதாரம் தான்

தற்போது அழுகி நாறிவிடும் நிலமைக்கு வந்ததற்கு காரணம் அது நாடுகளை பிடித்து சுரண்டு முடித்து விட்டது தனது சொந்த நாட்டு மக்களுக்கு இன்னொரு காலனி நாட்டில் இருந்து சுரண்டு கொண்டுவந்து கொடுக்க ஏதுமில்லாத போது அவர்கள் தெருவில் இறங்கி விட்டார்கள்

எந்தளவு மூலதனம் வளர்கிறதோ அந்தளாவு அது கூலி உழைப்பை அதிகரிக்கிறது வறுமையை அதிகரிக்கிறது மூலதனத்தின் சிக்கல் அதுதான்

//3. மனசாட்சியின்படி ஏன் சோசலிசத்தை ஆதரிக்க வேண்டும்? எனது மனசாட்சிக்கும் கொள்கைக்கும் வினவு எப்படி சமரசப்படுத்துகிறது என்றும் எனக்குப் புரியவில்லை.//

60 ஆயிரம் சம்பளம் வாங்கினவன் 10 ரூபாய் அதிகம் கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே என ஒரு கமெண்டில் சொன்னீர்கள் அது உங்கள் கொள்கைக்கு முரணான மனசாட்சியின் குரல் உங்கள் கொள்கையோ சந்தை பொருளாதாராம் (உங்கள் கொள்ளை சந்தை பொருளாதாரம் சரி என்பது )

வினவு இதைத்தான் செய்கிறது சுரண்டல் அமைப்புதான் தூக்கி எறியப்பட வேண்டியது (மூலதனம் ) என்கிற பணத்தை அல்ல என லெனின் சொன்னதற்கு மாறாக சுரண்டலை வகைப்[படுத்துகிறது சின்ன சுரண்டல் பெரிய சுரண்டல் என மதிப்பிடுகிறது அந்த இடத்தில் அதன் வர்க்க சமரசம் உங்கள் தடுமாற்றத்துக்கு இளைப்பாருதல் தருகிறது .

இதுதான் நீங்களும் வினவும் சந்திக்கும் புள்ளி

மா.சி:

//ஒரு சமூக அமைப்பு தானாக தோன்றி விடாது நிலவுடமை சமூகத்தில் இருந்து முதலாளித்துவமும் முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசமும் தோன்றும் ஏனெனில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்பது அதிகரிக்கும் போது உற்பத்தி உறவு என்பது காலுக்கு பத்தாத சட்டையாகி விடுகிறது //

உற்பத்தி சக்திகள் என்றால் என்ன? அவை வளரும் போது உற்பத்தி உறவு (என்றால் என்ன?) எப்படி காலுக்கு பத்தாத சட்டையாகிறது?

//இன்று நாம் அடைந்துள்ள முன்னேற்றம் அனைத்திற்கும் முதலாளித்துவமே காரணம் ஆனால் அந்த வளர்ச்சி சர்வாம்ச வளர்ச்சியாக இல்லாமல் நீங்கள் சுட்டி காட்டும் படி ஒரு குழந்தை வெளிறி சாகும் போது இன்னொரு குழந்தை நன்கு புஸ்டியாக வளருவதற்கு காரணம் இந்த சந்தை பொருளாதாரம் தான்//

அதாவது முதலாளித்துவம் நம் முன்னேற்றத்தை உருவாக்கியது, ஆனால் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கியது என்று சொல்கிறீர்களா?

//தற்போது அழுகி நாறிவிடும் நிலமைக்கு வந்ததற்கு காரணம் அது நாடுகளை பிடித்து சுரண்டு முடித்து விட்டது தனது சொந்த நாட்டு மக்களுக்கு இன்னொரு காலனி நாட்டில் இருந்து சுரண்டு கொண்டுவந்து கொடுக்க ஏதுமில்லாத போது அவர்கள் தெருவில் இறங்கி விட்டார்கள் //

முதலாளித்துவத்துக்கும் நாடு பிடிப்பதற்கும் என்ன தொடர்பு? காலனி நாட்டில் இருந்து சுரண்டி கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று என்ன தேவை. அவர்களே விளைச்சல்/உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ளலாமே!

//எந்தளவு மூலதனம் வளர்கிறதோ அந்தளாவு அது கூலி உழைப்பை அதிகரிக்கிறது வறுமையை அதிகரிக்கிறது மூலதனத்தின் சிக்கல் அதுதான் //

முதலீடு வளர்ந்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், அதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் உயரும். அதில் என்ன சிக்கல்?

வினவு தொடர்பான கருத்தையும் கொஞ்சம் அடிப்படையிலிருந்து விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தியாகு:

(இதை பகுதிகளை வேறு இங்கிருந்து எடுத்து போட்டு இருக்கேன்) (http://www.desathinkural.org/)

உற்பத்திச் சக்திகளினுள் உற்பத்திச் சாதனங்களும் (இவற்றின் உதவியால்தான் பொருளாயத நலன்கள் உற்பத்திச் செய்யப்படுகின்றன). இச்சாதனங்களைப் பயன்படுத்தி, தம் அனுபவம், ஞானத்தைக் கொண்டு பொருளாயத நலன்களை உற்பத்திச் செய்யும் மனிதர்களும் அடங்குவர். உற்பத்தி அனுபவம் உடைய மனிதர்கள்தான் இதில் தீர்மானகரமான பங்காற்றுகின்றனர். இவர்கள்தான் சமுதாயத்தின் பிரதான உற்பத்திச் சக்தி. மனிதர்கள் இல்லாவிடில் மிக நவீனமான இயந்திரத்தை வைத்து கூட ஒன்றும் செய்ய முடியாது. மனிதர்கள்தான் புதுப்புத இயந்திரங்களைக் கண்டு பிடித்து உருவாக்குகின்றனர், இவற்றைப் பின் உற்பத்தியில் பயன்படுத்துகின்றனர்.

உற்பத்திச் சாதனங்கள் சமுதாயத்தின் பொருளாயத தொழில்நுட்ப அடித்தளத்தை ஏற்படுத்துகின்றன. உழைப்புச் சாதனங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக உழைப்புக் கருவிகள்தான் சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகளிடையே மிகவும் மாறுபடும் தன்மையுள்ளன, நவீனப்படுத்தும் அம்சங்களாகும். இவற்றிலிருந்துதான் பொருளாயத உற்பத்தியில் முற்போக்கான மாற்றங்கள் ஆரம்பமாகின்றன; இவைதான் இறுதியில் மனித சமுதாயத்தின் வாழ்வில் எல்லா மாற்றங்களையும் நிர்ணயிக்கின்றன.

மா.சி :

//இயந்திரமும் தொழிற்சாலையும் உற்பத்தி சக்திகள்தாம் ஆனால் முதல் போட்ட முதலாளிகள் இல்லை//

, புரிகிறது. முதல் போட்ட முதலாளியும் சேர்ந்து உழைக்கும் இடத்தில் மட்டும்தான் அவர் உற்பத்தி சக்தி. (மளிகைக் கடை அண்ணாச்சி, லேத் பட்டறை போட்டிருக்கும் டெக்னிசியன் போன்றவர்கள்)

//முதலாளிகள் என்பவர்கள் செய்யும் வேலைகளை பெரிய நிறுவனங்களில் கூலிக்கார மானேஜர்கள் செய்கிறார் கள் சார் //

ரிலையன்ஸ், டாடா போன்ற நிறுவனங்களில் சம்பளத்துக்கு வேலை பார்க்கு ceoக்களும் உற்பத்தி சக்தியில் சேருவார்கள்தானே. முகேஷ் அம்பானி, அனில் அம்பானி முதலாளிகள் அவர்களிடம் வேலை பார்க்கும் மேனேஜர்கள் உற்பத்தி சக்திகள்.

//கம்பெனி வளர வளர முதலாளியின் கொஞ்சூண்டு மூளை உழைப்பு தேவைப்படாமல் போய் விடுகிறது அது ஏன்//

அதுதான், கூலிக்கு மேனேஜராக ஆள் வைத்துக் கொள்கிறார்கள் என்று சொல்கிறீர்களே?

தியாகு:

//முதலீடு வளர்ந்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், அதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் உயரும். அதில் என்ன சிக்கல்?//

இந்த சிக்கலை பார்க்கலாம் அதாவது மூலதனம் அதிகரிக்க அதிகரிக்க வேலை வாய்ப்பு அதிகரிக்கனும் ஆனால் மூலதனம் அதிகரிக்க அதிகரிக்க அமெரிக்கா போன்ற நாடுகள் அந்த நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்காமல் ஏன் மற்ற நாடுகளில் வேலை வாய்ப்பை அதிகரிக்கிறது அவற்றிற்கு எதாவது தரும சிந்த்னையா ?

மா.சி:

மொத்தத்தில் வேலை வாய்ப்பு அதிகரிக்கத்தானே செய்கிறது. அமெரிக்காவில் கிடைக்கும் வசதிகள் இந்தியா போன்ற முன்னேறும் நாடுகளுக்கும் கிடைக்க வைப்பது இது போன்ற வளர்ச்சியினால்தானே. அது நேரடியாக தரும சிந்தனையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிகர விளைவு இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் முடிகிறது. (ஐடி துறையில் வாய்ப்புகள், எஞ்சினியரிங் கல்லூரிகள் முதலியன).

தியாகு:

மொத்தத்தில் வேலை வாய்ப்பு அதிகரிக்கத்தானே செய்கிறது.//

அந்த மொத்தம் சார்பு நிலையானதுதானே தனது நாட்டு தொழிலாளர்களை பட்டினி போட்டு விட்டு அடுத்த நாட்டுக்கு எப்படி வேலை வாய்ப்பை வழங்கலாம் சிவக்குமார்

(இந்தியா போன்ற நாடுகள் வளரட்டும் என்ற தர்ம சிந்தனை அமெரிக்க முதலாளிகளுக்கு வந்துடுச்சான்னு கேட்டேன்)

மா.சி:

//அந்த மொத்தம் சார்பு நிலையானதுதானே தனது நாட்டு தொழிலாளர்களை பட்டினி போட்டு விட்டு அடுத்த நாட்டுக்கு எப்படி வேலை வாய்ப்பை வழங்கலாம் சிவக்குமார் //

பட்டினி போடவில்லை, வேண்டுமென்றால் சொந்தமாக வைத்திருக்கும் கார்கள் 4க்குப் பதிலாக 2ஆக குறைந்திருக்கலாம். அமெரிக்காவில் சராசரி மக்கள் இந்திய பணக்காரர்களை விட வசதியாக வாழ்கிறார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஐடி துறை வேலைகள் இந்தியாவுக்கு வந்து விட்டதால் அவர்கள் எல்லாம் பட்டினி கிடக்கப்போவதில்லை.

//(இந்தியா போன்ற நாடுகள் வளரட்டும் என்ற தர்ம சிந்தனை அமெரிக்க முதலாளிகளுக்கு வந்துடுச்சான்னு கேட்டேன்)//

தர்ம சிந்தனை இல்லை என்று நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவில் வறுமை ஒழிய, பட்டினி குறைய அமெரிக்க முதலீடுகளும் உதவுகின்றன என்பது நாம் கண்கூடாக பார்க்கும் ஒன்று.

தியாகு:

//(இந்தியா போன்ற நாடுகள் வளரட்டும் என்ற தர்ம சிந்தனை அமெரிக்க முதலாளிகளுக்கு வந்துடுச்சான்னு கேட்டேன்)//

தர்ம சிந்தனை இல்லை என்று நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவில் வறுமை ஒழிய, பட்டினி குறைய அமெரிக்க முதலீடுகளும் உதவுகின்றன என்பது நாம் கண்கூடாக பார்க்கும் ஒன்று./

காரணத்துக்கு நீங்கள் போகவே மாட்டீர்களா சிவகுமார் தரும சிந்த்னை காரணம் இல்லை என்றால் என்ன காரணம்

மா.சி:

அமெரிக்க நிறுவனங்கள் தமது தொழிலை விரிவுபடுத்துகிறார்கள். அதற்கு வேலை செய்ய மக்கள் தொகை அதிகமான இந்தியா போன்ற நாடுகளில் அவுட்சோர்ஸ் செய்கிறார்கள். அதுதான் காரணம்.

அமெரிக்காவில் மக்கள் தொகை குறைவு அதனால், அத்தனை பேர் வேலைக்கு கிடைக்க மாட்டார்கள்.

தியாகு:

//அமெரிக்க நிறுவனங்கள் தமது தொழிலை விரிவுபடுத்துகிறார்கள். அதற்கு வேலை செய்ய மக்கள் தொகை அதிகமான இந்தியா போன்ற நாடுகளில் அவுட்சோர்ஸ் செய்கிறார்கள். அதுதான் காரணம். /

தவறான காரணம் அங்கே கூலி அதிகம் இந்தியாவில் கூலி குறைவு

மா.சி:

உண்மை. இந்தியாவில் நிறைய பேர் இருப்பதால் கூலி குறைவுதான். அமெரிக்க முதலீட்டின் மூலம் இந்திய சராசரி நாள் கூலி அதிகமாவதன் மூலம் பலருக்கு ஏழ்மை தீர்ந்திருக்கிறது. உதாரணமாக, நாட்கூலியாக வேலை செய்பவர்களுக்குக் கூட ரியல்எஸ்டேட் வளர்ச்சி காரணமாக, தினக் கூலி உயர்ந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் வளர்ச்சி ஐடி துறையினால் என்று உங்களுக்கே தெரியும்.

இப்படி ஏழை மக்களுக்கும் நன்மை செய்கிறது அமெரிக்க முதலீடு. அதே நேரம் அமெரிக்காவில் சிலருக்கு ஆடம்பரத்தில் சிறிதளவு பாதிப்பு என்றால் ஒட்டுமொத்த மனித குல அளவில் அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?

தியாகு:

http://www.wisegeek.com/what-is-outsourcing.htm (

There are many reasons that companies outsource various jobs, but the most prominent advantage seems to be the fact that it often saves money. Many of the companies that provide outsourcing services are able to do the work for considerably less money, as they don't have to provide benefits to their workers and have fewer overhead expenses to worry about. Depending on location, it may also be more affordable to outsource to companies located in different countries.

மா.சி :

அமெரிக்க அவுட்சோர்சிங் மூலம் இந்திய மக்களுக்கு நன்மை ஏற்பட்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

தியாகு:

//உண்மை. இந்தியாவில் நிறைய பேர் இருப்பதால் கூலி குறைவுதான்.// ஒத்து கொண்டதற்கு மிக்க நன்றி அப்போ கூலிக்கும் பொருளின் மதிப்பிற்கும் சம்பந்தம் இருக்கா இல்லையா ?

மா.சி :

//அப்போ கூலிக்கும் பொருளின் மதிப்பிற்கும் சம்பந்தம் இருக்கா இல்லையா//

திடீர் என்று நடுவில் தொடர்பில்லாமல் ஏதோ கேட்கிறீர்கள்? பொருளின் மதிப்பு சந்தையில் அந்த பொருளின் டிமாண்ட்/சப்ளை மூலம் தீர்மானமாகிறது. கூலியும் வேலை செய்பவர்களின் சப்ளை/டிமாண்ட் மூலம் தீர்மானமாகிறது.

இரண்டுக்கும் நேரடியாக என்ன தொடர்பு இருக்கிறது?

தியாகு:

/திடீர் என்று நடுவில் தொடர்பில்லாமல் ஏதோ கேட்கிறீர்கள்? பொருளின் மதிப்பு சந்தையில் அந்த பொருளின் டிமாண்ட்/சப்ளை மூலம் தீர்மானமாகிறது. கூலியும் வேலை செய்பவர்களின் சப்ளை/டிமாண்ட் மூலம் தீர்மானமாகிறது.

இரண்டுக்கும் நேரடியாக என்ன தொடர்பு இருக்கிறது?//

என்ன சார் இப்படி கேட்டு விட்டீர்கள்

பொருளின் மதிப்பு கூலியால் தீர்மானிக்கப்படுகிற காரணத்தால் தான் அமெரிக்காவின் வேலை இந்தியாவுக்கு வருகிறதே தவிர சந்தை மதிப்பின் படி அல்ல

தியாகு:

கூலி , விலை , லாபம் , தரும சிந்தனை இதெல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையது

தியாகு :

சரி அடுத்த பகுதிக்கு வருவோம் கூலி குறைவாக இருப்பதால் இங்கு வந்த வேலை வாய்ப்பு இன்னும் கூலி குறைவான ஒரு நாடு கிடைக்கும் போது அந்த நாட்டுக்கு செல்லும் என்று சொல்கிறேன் ஏற்று கொள்கிறீர்களா இல்லையா

மா.சி :

//பொருளின் மதிப்பு கூலியால் தீர்மானிக்கப்படுகிற காரணத்தால் தான் அமெரிக்காவின் வேலை இந்தியாவுக்கு வருகிறதே தவிர சந்தை மதிப்பின் படி அல்ல//

இந்தியாவில் சந்தை மதிப்பின்படி கூலி குறைவு. அமெரிக்காவில் சந்தை மதிப்பின்படி கூலி அதிகம். பொருளின் (சேவையின்) மதிப்பு மாறாமல் இருக்கிறது. அப்படி கூலியைப் பொறுத்து பொருளின் மதிப்பு மாறினால், இந்தியாவில் குறைந்த சம்பளத்தில் வேலை வாங்கும் போது விற்கும் விலையும் குறைந்து லாபம் குறைந்து விடுமே!

தியாகு :

/இந்தியாவில் சந்தை மதிப்பின்படி கூலி குறைவு. அமெரிக்காவில் சந்தை மதிப்பின்படி கூலி அதிகம். பொருளின் (சேவையின்) மதிப்பு மாறாமல் இருக்கிறது//

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஒரே கூலி மதிப்பாய் இருந்தால் தான் சந்தை மதிப்பு மாறாமல் இருக்கிறது என்று பொருள்

இத்துடன் சிவக்குமார் அடுத்து விவாத்த்தை நகர்த்த வில்லை என்பதால் இத்துடன் முடிக்கிறேன் .

8 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post