ஈழத்தமிழன் இந்தியாவிடம் பிச்சை கேட்கவில்லை"- நகைமுகன் சிறப்பு பேட்டி

நகைமுகன்...பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத பெயர். தனித் தமிழர் சேனையின் நிறுவனர். பாரதீய பார்வார்ட் பிளாக்கின் தேசிய தலைவர். ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில்  நடைபெற்ற கண்டனப் பொதுகூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தவரிடம் ஈழவிவகாரம் குறித்துப் பேசினோம்.அதிகாலை-க்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி இங்கே:-

"இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிடம் பிச்சை கேட்கவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது அச்சமில்லாத வாழ்க்கை. மற்றபடி நிவாரணம் எனும் பெயரில் பிச்சை கேட்கவில்லை. பழ.நெடுமாறன் சேகரித்த நிவாரணப் பொருட்களை மட்டும் ஏன் அங்கு கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.?

ஈழத் தமிழனின் பசி இப்பொழுதுதான் கருணாநிதிக்கு தெரிந்ததா?இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை தடுக்காமல், நிவாரணப் பொருட்கள் வழங்குவதால் ஈழத் தமிழன் வாழ்ந்துவிடமுடியாது. ஈழத் தமிழர்களுக்கு அத்தியாவசியத் தேவை எது? என்பதை தமிழக முதல்வர் புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இலங்கையில் அப்பாவி தமிழர்களைக் கொல்வதையும், இந்துக் கோவில்களை இடித்து நொறுக்குவதையும் ஒரு சாதனையாகவே சிங்கள ராணுவம் செய்து வருகிறது. இதனை இந்து மதப் பிரச்சனையாக இங்குள்ள பாஜக, வி.எச்.பி, சிவசேனா போன்ற  அமைப்புக்கள் பார்க்கவேண்டும். ஒருமுறை அதிபர் ஜெயவர்த்தனே, தமிழர்கள் அனைவரும் பௌத்த மதத்திற்கு மாறிவிட்டால் பிரச்சனையே வராது என்றார். ஆகவே இங்கு மொழி இல்லை பிரச்சனை. மதமே முக்கியப் பிரச்சனை. எனவேதான் இதனை மதப் பிரச்சனையாக பார்க்கவேண்டும் என்று நான் கூறிவருகிறேன்.

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவது அறவே பலன் தராது. அவை அனைத்தும் ஈழத் தமிழனின் கைகளுக்கு கிட்டப் போவதில்லை. எனவே சேரிக்கும் நிவாரணப் பொருட்களை எல்லாம் இங்குள்ள அகதிகளிடம் கொடுத்தாலாவது அவர்களுக்கு உதவியாக இருக்கும். அவர்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். மற்றபடி அங்கு சென்று சேரும் பொருட்கள் எல்லாம் இலங்கை ராணுவத்துக்குத்தான் உதவப் போகிறது.

இந்தியாவிற்கு அகதிகளாக தப்பி வருபவர்களை கூட இங்கே வரமுடியாமல் இலங்கை கடற்படை தடுத்து வருகிறது. அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். ஈழப்பிரச்சனைக்கு தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களால் மட்டும் தீர்வு காண முடியாது. இது ஒட்டு மத்த இந்துக்களின் பிரச்சனை. எனவே இந்தியாவில் உள்ள 85 கோடி இந்துக்களும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ் ,சிங்கள கலாசாரம் ஒன்றுக்கொன்று முரண்பட்டது. இவை இரண்டும் எப்போதும் ஒத்துப்போகாது. எனவே கலாசார முரண்பாடு கொண்ட இவ்விவாகரத்தை மதரீதியான பிரச்சனையாக இந்துக்கள் அணுக வேண்டும்".

ஈழத்தமிழ் விவகாரத்தில் இப்படி ஒரு அணுகுமுறையா..?

 நன்றி: அதிகாலை வெப்


--
தியாகு

-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post