கேணை அதிகாரிகளும் பாவப்பட்ட மக்களும்

கேணை அதிகாரிகளும் பாவப்பட்ட மக்களும்

ரேசன் கார்டு கொடுத்தால்தான் இனிமேல் சிலிண்டர் தரப்படும்
என பாரட் கேஸ் நிருவனம் சொல்லி விட்டது,

வெளியூர்களில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு வந்த மக்கள்
தாலுகா அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாகவே காத்து கிடக்கிறார்கள்

இதில் என்ன பிரச்சனை என்றால் ரேசன் கார்டுக்கு அப்ளை செய்ய

இன்னின்ன விசயங்கள் தேவை என்ற அறிவிப்பு பலகையோ

அல்லது பேப்பரில் விளம்பரமோ எதுவும் இல்லை.

நாலு மணி நேரம் ஐந்து மணி நேரம் நின்ற ஒரு வயதான மனிதர்\

அலுவலரை நெருங்கியது வி ஏ ஓ விடம் கையெழுத்து வாங்கவில்லை

எனவே வாங்கிவாருங்கள் என சொல்லப்பட்டது .

ஏற்கனவே சக்கரை வியாதியால் அவதிப்பட்ட அந்த பெரியவர் மயங்கி

விழுந்தார் .

வரிசைக்கு மக்கள் வருவதற்கு முன்பே ஒரு அதிகாரி அவர்களது

படிவங்கள் சோதனை இடலாம் அல்லவா ?

தேவையான விசயங்கள் படிவத்தில் இல்லை என தெரிந்தால்

அவர்களை உடனே அனுப்பி வாங்கி வரச்சொல்லலாம் அல்லவா?

"நாங்க என்னசார் செய்யமுடியும் ? எனும் " பொறுப்பற்ற பதில்

சொல்வதை அதிகாரிகள் அரசாங்கள் நிறுத்திகொள்ள வேண்டும்

இல்லாவிட்டால் மக்களால் உதைக்கப்படுவார்கள்

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post