அண்ணாச்சி கடையினிலே சந்தனம் மணக்குது
என்ன மணக்குது கடையில் என்ன மணக்குது
கல்லா மணக்குது அண்ணாச்சி கல்லாமணக்குது
சுரண்டி சுரண்டி சேர்த்த காசில் மணமும் கமழுது
சுரண்டிலின் வடிவத்தில் வாழ்வும் மணக்குது
நேச சக்தியை நினைக்கும் போது நெஞ்சம் மணக்குது
எதிரி சக்தி மேல தான் கோபம் பிறக்குது
விவசாயியை சுரண்டுவதால் வாழ்வு மணக்குது
விவசாயியை சுரண்டுவதால் வாழ்வு மணக்குது
பேசாமல் திரும்பி வர தலையும் குனியுது
புரட்சிகர அரசியலின் நாத்தம் அடிக்குது -வீர
வெள்ளையனை கண்டுவிட்டால் உள்ளம் குளிரிது
புரட்டுகளை சொல்ல உள்ளம் ஆசை கொள்ளுது
புரட்டுகளை சொல்ல உள்ளம் ஆசை கொள்ளுது
புரட்டி புரட்சி பேசுவதால் குழப்பம் மிஞ்சுது
போராட்டத்தின் களத்தினிலே பவனி வருகிறார்
வெள்ளையன் பொதுவுடமை படைக்கவுமே
ஆசை கொள்கிறார் .
போதாத காலம் வந்து புரட்டி எடுக்குது
புரட்சிகர நேசத்தினால் புயலும் விலகுது
அண்ணாச்சி கடையிலே சுரண்டல் இல்லைப்பா
அண்ணாச்சி தானப்பா நேசசக்தியப்பா
நேச சக்தியப்பா நேச சக்தியப்பா
(கட்சியின் செயல்தந்திர நடவடிக்கையை காப்பாத்த வேண்டி கட்சியின் நேச சக்தியை காப்பாத்த
ஒரு பாமர மக இக தொண்டன் எழுதிய பாடல் இது )
சில்லறை வணிகத்தில் பன்னாட்டு மூலதனம் குறித்த விவாதத்தில் வினவும் அதன் அல்லகைகளும் சில முக்கியமான பகுதிகளை தவறாக திரிக்கிறார்கள் இது ஒட்டுமொத்த கம்யூனிச அரசியலுக்கும் விரோதமானது
அதென்னவென்றால் சிறிய வணிகனின் மூலதனத்தை காப்பாற்ற பெரு வணிக நிறுவனங்களை எதிர்க்கனும் என்பது அவர்கள் வைக்கும் வாதம் இது மார்க்சியமா
இந்த வாதத்தின் ஊடே அவர்கள் கொண்டு வந்த முக்கிய கருத்துக்கள் (?)
1.வால்மார்ட் சின்ன வணிகனை ஒழித்து விடுவான்
அவனுக்கு போட்டியே சின்ன வணிகன் தான் என்பது
இதற்கு நமது பதில்
1.1. வால்மார்ட்டுக்கு போட்டி இங்கே இருக்கும் பெருவணிகனே என்பதும் அந்த பெருவணிகனின் சுரண்டலை சுரண்டல் என ஏன் சொல்ல கூடாது என்பதும் நமது பதில் இதன் மூலம் இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் பெருவணிக நிறுவனங்களுடன் வால்மார்ட் போட்டி போடுவதை சொல்லாமல் ஏமாற்றும் பிற்போக்கு தனத்தை எதிர்த்தோம் .
2.இதன் மூலம் நீங்கள் வால்மார்ட்டை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு :
வால்மார்ட்டு ஒரு முதலாளித்துவ நிறுவனம் என்பதால் அது எல்லா முதலாளிகளும் செய்யும் மொள்ளமாறித்தனம் அனைத்தையும் செய்யும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை ஆனால் அதே மொள்ள மாறித்தனத்தை சுரண்டலை இங்கிருக்கும் அண்ணாச்சிகளும் செய்வார்கள் செய்கிறார்கள் இல்லையென மறுக்க முடியுமா ?
இப்போது வால்மார்ட்டையா உள்நாட்டு முதலாளியையா அண்ணாச்சி கமிசன் மண்டிகளையா யாரை ஆதரிக்கிறீர்கள் ஏன் ஆதரிக்கிறீர்கள் என அவர்களை கேட்டால் அவர்கள் வால்மார்ட்டை மட்டும் எதிர்கிறார்கள்
எங்களை கேட்டால் அனைத்துமே முதலாளித்துவ நிருவனங்கள் அதற்கே உரிய சுரண்டல் பாதையில் செல்லும் ஆகவே ஒட்டுமொத்தமாக இந்த முதலாளித்துவ அமைப்பை எதிர்ப்பதே சரியானது
3.வினவுக்கு எதிர்கட்டுரை போடுவதற்கான விளக்கமும் விவாதமும்தான் நான் செய்கிறேன் என்பது சரியா?
இல்லை வினவு ஒரு கட்டத்தில் ரிலையன்ஸை எதிர்க்கிறோம் என அந்த நிறுவனம் உள்ளே வரும்போது சொன்னது சில போராட்டங்களை செய்தது ஆனால் ரிலையன்ஸ் வந்தபிறகு எந்த போராட்டமும் நடக்கவில்லை தொடர்ச்சியாக செய்யவில்லை மாறாக ஒரு புதுபடம் வரும்போது அதற்கு தோரணம் கட்டும் ரசிகனின் மனப்பான்மையை விட்டு கொஞ்சமும் மாறாமல் பெருமூலதன எதிர்ப்பை சம்பரதாயமாக செய்துவிட்டு மற்ற வேலைகளை செய்வதும் அப்போது
குட்டி முதலாளி நல்லவன் அவன் உழைக்கிறான் எனவே சுரண்டுகிறான் என்பன போன்ற எதிர்புரட்சி சவடால்களை விடுவதும் என செயல்படும் அரசியல் ஓட்டாண்டி தனத்தை கண்டிக்கவே தொடர்ச்சியாக நாம் இயங்க வேண்டியதாக உள்ளது
மேலும் இந்த செயல்முறையின் ஊடே மார்க்சியத்தை தனக்கு தகுந்தமாதிரி திரிக்கிறது அதாவது சின்ன முதலாளி நல்லவன் அவன் கடையில் வேலைபார்ப்பவன் சுரண்டப்பட்டாலும் அவனுக்கு முதலாளியாகும் வாய்ப்பு இருக்கு என சொல்லி மக்களுக்கு முதலாளித்துவ பாதையை காட்டுகிறது
இது எதிர்புரட்சியாகும் முதலாளித்துவம் என்பதை தீர்மானிப்பது முதலாளித்துவ உற்பத்தி வினொயோகமுறையே தவிர அதன் அளவுகள் கிடையாது
மொத்தமாக முதலாளித்துவத்தை ஒழிக்காமல் பெரிய முதலாளியை மட்டும் ஒழிக்க இயலாது மேலும்
சுரண்டலுக்கு உள்ளாகும் பாட்டாளிகளுக்கு முதலாளித்துவ கனவை விதைப்பது மிக தவறான செயலாகும்
சிறிய வணிகன் புரட்சிகரமான வர்க்கமா என்பது குறித்து :
சிறிய வணிகன் அழிவதை பற்றி அது முதலாளித்துவ விதி என்றால் இல்லை அப்படி சொல்வது பாசிசம் என்றும் எனவே சிறு வணிகனை தாங்களே காப்பாத்த போவதாகவும் சொல்கிறார்கள் இவர்களை குறித்து மார்க்ஸ் என்ன சொல்கிறார் கம்யுனிஸ்டு கட்ட்சி அறிக்கையில்
----------------
மார்க்ஸ் இவரைப் போன்றவர்களைத்தான் "இவர்கள் பிற்போக்கானவர்களும் கூட, ஏனெனில் வரலாற்றின் சக்கரத்தை இவர்கள் பின்னோக்கி உருளச் செய்யமுயலுகிறார்கள்." என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சாடுறாரு,சிறு உற்பத்தியாளர்கள், கடைக்காரர்கள்,பற்றி மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சொல்வது இதுதான்:
----------------------------
"மத்தியதர வர்க்கத்தின் கீழ்த் தட்டுகளைச் சேர்ந்த சிறு உற்பத்தியாளர்கள், கடைக்காரர்கள், சிறு வாடகை, வட்டி வருவாயினர், கைவினைஞர்கள், விவசாயிகள் ஆகிய எல்லோரும் சிறிது சிறிதாய்த் தாழ்வுற்று பாட்டாளி வர்க்கத்தை வந்தடைகிறார்கள். காரணம் என்னவெனில், முதலாவதாக அவர்களிடமுள்ள சொற்ப அளவு மூலதனம் நவீனத் தொழிலின் வீச்சுக்கும் போதாமல் பெரிய முதலாளிகளுடைய போட்டிக்குப் பலியாகிவிடுகிறது, இரண்டாவதாக அவர்களுடைய தனித் தேர்ச்சியானது பொருளுற்பத்தியின் புதிய முறைகளால் மதிப்பற்றதாக்கப்படுகிறது. இவ்விதம் தேச மக்கள் தொகுதியைச் சேர்ந்த எல்லா வர்க்கங்களிடமிருந்தும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆட்கள் திரட்டப்படுகிறார்கள்."
---------------------------
"இன்று முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் எல்லா வர்க்கங்களிலும் பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் மெய்யாகவே புரட்சிகரமான வர்க்கமாகும். ஏனைய வர்க்கங்கள் நவீனத் தொழிலினது வளர்ச்சியின் முன்னால் நலிவுற்றுச் சிதைந்து முடிவில் மறைந்து போகின்றது, பாட்டாளி வர்க்கம் மட்டும் தான் நவீனத் தொழிலுக்கே உரித்தான அதன் நேரடி விளைவாய் அமைகிறது."
----------------------------------
"மத்தியதர வர்க்கத்தின் கீழ்ப் பகுதிகளாகிய சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் எல்லாரும் தொடர்ந்து தாம் மத்தியதர வகுப்பினராய் நீடித்திருப்பதற்காக முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆகவே இவர்கள் பழமைப் பற்றாளர்களே அன்றி புரட்சித்தன்மை வாய்ந்தோரல்லர். அது மட்டுமல்ல, இவர்கள் பிற்போக்கானவர்களும் கூட, ஏனெனில் வரலாற்றின் சக்கரத்தை இவர்கள் பின்னோக்கி உருளச் செய்யமுயலுகிறார்கள். சந்தர்ப்பவசமாய்ப் புரட்சிகரமாய் இருப்பார்களாயின், இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குப் போய்விடும் தறுவாயில் இருக்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம், இவ்வாறு இவர்கள் பாதுகாப்பது தமது எதிர்கால நலன்களையே அன்றி நிகழ்கால நலன்களை அல்ல"
---------------------------
ஆகவே மார்க்சியத்துக்கு அப்பாற்பட்டு சிறுவணிகனின் அழிவை நாம் சொல்லவில்லை என்றும் மூலதன போட்டி ஓயாமல் நடைபெற்று வருகிறது தினம் தோறும் ஏன் நொடிதோறும் சிறுவணிகன் அழிவும் பெருவணிகன் தோற்றமும் நடந்து கொண்டே இருக்கிறது என்கிறோம்
கம்யூனிஸ்டுகளின் கடமை என்ன :
மூலதனத்தை காப்பாத்த போராடுவதும் முதலாளிகள் உருவாக வாய்ப்பு இருக்குன்னு பேசுவதும் கம்யூனிஸ்டுகளின் க்டமை இல்லைன்னு ஒரு வரியில் சொல்லலாம் மாறாக அனைத்து முதலாளித்துவ நிருவன அமைப்புகளிலும் உருவாகும் பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டுவது தலையாய கடமையாக ஒரு கம்யூனிஸ்டு கொண்டிருக்க முடியும்
வால்மார்டு பற்றிய தனிபெரும் கண்டுபிடிப்பு :
வால்மார்ட் உற்பத்தியை கட்டு படுத்துகிறான் என்கிறார்கள் இதை நமது உள்ளூர் ஆரோக்கியா பால்காரனே செய்கிறான் மாடு வாங்கி தந்து விவசாயிக்கு மாட்டு தீவன விதையும் வாங்கி தந்து அதை விதைச்சு அறுக்க சொல்கிறான் இது எந்த வர்க்கத்துக்கான விவசாயம்
இதைத்தான் வால்மார்ட் பெரிய அளாவில் செய்கிறான் அதை தவறு என்றும் உள்ளூர்காரன் செய்வது சரி என்றும் சொல்வது எந்தவகை மார்க்சியம்
மேலும் அவர்களிடம் இருந்து பதில்வராத பல கேள்விகள் இருக்கு அதன் பட்டியல் இதோ:
பதில் வராத கேள்விகள்
1.உற்பத்தி முதலாளித்துவமாக இருக்கும் போது வினியோகம் முதலாளித்துவமாக இருக்கும் போது அதில் நடக்கும் சுரண்டலை மட்டும் மறைப்பது ஏன்
2.இந்தியாவின் அரசு முதலாளித்துவ வர்க்க சார்புடைய அரசு என்பதை புரிந்து கொண்டால் அது 52 சதவீதம் மட்டுமே அந்நிய முதலீட்டை அனுமதிப்பது ஏன் என்றும் மீதம் 48 சதவீதத்தை அது ந்ரிலையன்சின் கடைக்கன் உத்தரவு க்டைத்தால் மட்டுமே அனுமதிக்கும் என்பதும் புரிந்து கொள்ள என்ன தயக்கம்
3.வால் ஸ்டீரிட் போராட்டகாரர்கள் தங்களின் சமூக பொருளாதார பிரச்சனைக்கு மறந்தும் கூட அமெரிக்க அர்சுதான் காரணம் என சொல்ல மறுப்பதைபோல நீங்களும் விவசாயிகள் பரந்து பட்ட மக்களின் பிரச்சனைக்கு காரணம் இடைத்தரகர்களான வியாபாரிகள் என்பதையும் இந்த அமைப்பு முழுவதும் முதலாளித்துவ அமைப்புதான் என்பதையும் சொல்ல மறுத்து இதை உடைக்க முயலாமல் பகுதியை கட்டிகாக்க முயலுவதேன்
4.நீங்க யார் என்பதும் யாரை காக்க போராடுகிறீர்கள் என்பது புரிகிறதா ? வணிகர்களை காப்பாத்த போராடுகிறீர்கள் அவ்வப்போது விவசயிகளுககாக நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள் சரத்குமாருக்கும் உங்களுக்கும் பெரிசா வேறுபாடு இல்லையே நீங்கள் கம்யூனிஸ்டா
*மேலும் இந்திய முதலாளிகளில் நேசசக்தி என அழைக்கும் நீங்க எந்தமாதிரி கம்பெனியெல்லாம் நேசசக்தி எதெல்லாம் எதிரி சக்தின்னு சொல்லிட்டீங்கன்னா விளங்கி கொள்ள ஏதுவாக இருக்கும்
ஏன்னா ருசி ஊறுகாய் காரன் வெளிநாட்டில் இடங்களை வளைத்து போடுவதும் இந்தியாவில் பல கம்பெனிகள் அந்நிய நாட்டில் சுரண்டுவதும் நடப்பதை பற்றிய தங்களின் மேலான கருத்து என்ன
----------------
ஆக தனது அரசியல் ஓட்டாண்டி தனத்தில் எத்தனை நாள் பதுங்கி கொண்டு இருந்தாலும் ஒருநாள் வெளியே வந்துதான் ஆகனும் இவர்கள்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================
தேசஒற்றுமை என பேசிக்கொண்டே ஏமாற்றும் அரசியல் வாதிகளை மக்கள் தட்டி கேட்கவே மாட்டாரக்ளா? என கேட்பவர்களுக்கு பதிலாக இந்த போராட்டத்தை சொல்லலாம் .
கேரள மக்களுக்கு பாதுகாப்பு தமிழ்நாட்டு தண்ணீர் எனும் நயவஞ்சக பேச்சை மக்கள் நம்புவார்களா ? என்றால் இல்லை நம்பவில்லை என்பதை இந்த போராட்டம் காட்டுகிறது
கேரள மந்திரிகள் டெல்லியில் முகாமிட்டு பிரதமரை சந்தித்து பேசி பேசியே அணையை உடைத்துவிட முடியுமா ? முடியாது இதோ மக்கள் கிளர்ந்துவிட்டார்கள்
புரட்சி பற்றி பேசியும் எழுதியும் வரும் பிரபல புரட்சிகாரர்கள் மண்டைக்குள் இருந்துதான் மக்கள் புரட்சி செய்வார்களா இல்லை அப்படி நிகழாது அவர்கள் கடையில் வருவார்கள் என்பது போராட்டம் காட்டுகிறது
மக்கள் திரள் என்றாலே ஒன்றும் தெரியாதவர்கள் வன்முறையில் இறங்குவார்கள் லத்தி சார்ஜ் தான் வாங்குவார்கள் என்றால் இல்லை அவர்கள் தெளிவாக பேசுவதையும் பார்க்கலாம்
"எங்களுக்கு தண்ணீர் வேண்டும் இந்த போலீஸ் எங்களை பாதுகாக்க இருந்தால் இருக்கட்டும் இல்லாவிட்டால் இந்த போலீஸ் எங்களுக்கு தேவை இல்லை "
ஒரு பக்கம் கோர்ட்டில் வாதாடி கொண்டே இன்னொரு பக்கம் அணையை உடைக்க முயற்சி நடக்கும் போது என்ன செய்வார்கள் மக்கள் அடுத்த தேர்தல்வரை காத்திருக்க வேண்டுமா ? இல்லை திரண்டு வந்துவிடுவார்கள் என காட்டுகிறது போராட்ட காட்சி
போராட்ட காரர்கள் இனிமேல் போலீசுகளிடம் லத்திஅடி வாங்காமல் இருக்கவும் லத்திகளை பிடிங்கவும் செய்தால் நல்லா இருக்கும்
அடித்தால் ஓடாமல் லத்திகளை பிடுங்கும்படி மக்களுக்கு அங்கு தலைமையில் இருப்போர் சொல்லவேண்டும்
மக்கள் சக்திக்கு முன் அடக்குமுறை கருவி வேலை செய்யாது அது மக்கள் சக்தியை முறையாக பயன்படுத்தும் போது சுத்தமா வேலை செய்யவே முடியாது என்பதை காட்டவேண்டுமானால் கொஞ்சம் செயல்தந்திரத்துடன் போராடவேண்டும்
மக்கள் எல்லையில் முற்றுகை நடத்துகிறார்கள் அனைத்து எல்லைக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்
பதிவர்கள் இணைய வாசிப்பாளர்கள் தங்களால் முடிந்தது இந்த போராட்டத்தின் விசயங்களை மக்களிடம் கொண்டு செல்லவும் முடிந்தவர்கள் போராட்ட களத்திற்கு செல்லவும் வேண்டும்
திட்டமிடப்படாத போராட்டமாக இருக்கும் இதை திட்டமிடவும் கேரள மற்றும் மத்திய அரசை பணியவைக்கவும் செய்யவேண்டும்
அதே நேரத்தில் இங்கிருக்கும் சிபி எம்ம் பிஜே பி , அதிமுக காங்கிரஸ் கட்சி குண்டர்களை கேள்வி கேட்பதன்மூலம் மூலம் ஓட்டு அரசியலுக்கு பொய் சொல்வதை மூட்டைகட்ட வைக்க வேண்டும்
ஓவ்வொரு போலிக்கும் தாம் உதைபடுவோம் என்பது தெரியவேண்டும்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================
ஒரு குட்டிபூர்சுவாவின் கட்டுரைக்கு பதில்
உற்பத்தி உறவில் பெருவணிகன் என்ன செய்கிறான்; சிறுவணிகன் என்ன செய்கிறான் இவர்களுகிடையேயான உறவு எந்தவகைப்பட்டது என்பது மார்க்சிய ரீதியாக ஆராயப்படவேண்டியது எந்தளவு முக்கியமென்றால் அதை மாற்றுவதன் முக்கியத்தை போன்று மிக முக்கியமானது .
விவசாயி தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு சொந்த காரனாக இல்லை மேலும் அதற்கு விலை வைக்கும் உரிமைகூட இல்லாத ஒரு அவல நிலைக்கும் காரணம் இந்த முதலாளித்துவ உற்பத்தி மற்றும் வினியோக முறையாகும் .(உற்பத்தி செய்பவன் உற்பத்தி பொருளுக்கு சொந்தகாரனல்ல என்பது முதலாளித்துவம்னு மார்க்ஸ் பேராசான் சொல்லி நூறாண்டுக்கு மேல் ஆயிடுச்சு)
உற்பத்தியில் முதலாளித்துவமும் வினியோகத்தில் சோசலிசமும் நிலவ முடியாது அப்படி நாமாக இந்தியாவில் போன்று அரசமூலதனம் நிலவினாலும் அது கூடிய விரைவில் அழிந்து முதலாளித்துவ வினியோக முறை வந்தே தீரும் என்பது கண்கூடானதல்லவா?
அரசு 80 சதமானம் கொள்முதல் செய்து கொண்டு இருந்து தற்போது அதை குறைத்து விட்டது என்றால் அரசு என்பது வர்க்க சார்பான அரசு முதலாளித்துவம் வளராதபோது அது செய்துகொண்டு இருந்த வேலையை வளர்ந்தவுடன் முதலாளிக்குத்தான் கையளிக்கும் மாறாக விவசாயிக்கே அந்த உரிமையை தராது அது அதன் வர்க்க குணாம்சம் .
இங்கே அரசு செய்யாததை இவர்கள் ஆதரிக்கும் குட்டி முதலாளியோ பெருவணிகனோ அல்லது கமிசன் மண்டி காரனோ செய்யவில்லை மாறாக அடிமடியில் கைவைப்பவர்கள் அவர்களே .ரிலையன்ஸ் விவசாயியை காப்பாத்துவான் என்றோ வால்மார்ட் ப்பாத்துவான் என்றோ யாரும் சத்தியம் செய்யவில்லை
மாறாக
சொந்த நாட்டின் கத்தியை வைத்து குத்தி கொண்டு செத்து போன்னு நீங்க சொல்வதை மறுத்து சொந்த நாட்டு கத்தியும் அந்நிய கத்தியும் மோதும்போது;
முதலில் அந்நிய கத்தி சொந்த நாட்டின் பெரு கத்தியுடன் மோதும் சூழலில் ஒப்பீட்டளவில் விவசாயிக்கு கொஞ்சம் கூட கிடைக்கும் என்பதை நீங்கள் மறுக்கிறீர்கள்(குறைந்த அளவுக்கேனும் குறைந்த காலமாவது) இதன் மூலம் இந்த நாட்டின் சுரண்டல் வர்க்கத்தை காப்பாற்ற பெருமுயற்சி செய்கிறீர்கள் .
அடுத்து விவசாயி அனுபவிக்கும் பல துன்பத்துக்கும் காரணம் இந்த அரசும் அதன் கொள்கையும் என பட்டியலிடும் நீங்கள் இதையும் கடந்து அவன் உற்பத்தி செய்கிறானே ஒரு பொருள் (விவசாய பொருள் )அதற்கு கூலியை நீங்கள் தூக்கி பிடிக்கும் வியாபாரி விலை நிர்ணயம் செய்ய என்ன தகுதி இருக்கு அந்த பொருளை உற்பத்தி செய்தவனா அவன் அந்த பொருள் மீது கூடுதலாக அவன் செலுத்தும் உழைப்பு ஏதுமின்றி அந்த பொருளை ஒன்றுக்கு மூன்று மடங்காக விலை ஏற்றி விற்பவன் சுரண்டல்காரனா இல்லையா ?
சுரண்டலை சுரண்டல்னு சொல்லு அது பெரிசா சிறிசா உள்நாடா வெளிநாடா என்பதை பிறகு பார்போம் .ஆக சுரண்டல் இன்றி ஒரு பொருள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தும் நகரவே நகராது என இருக்கும் நிலைமையை பேச, அது உற்பத்தி செய்வதற்கு முன் அந்த உற்பத்தியாளன் படும் கஸ்டங்களை அதாவது பசுமை புரட்சியில் கொட்ட பட்ட உரம் அந்த உரத்தை வாங்க அவன் கொட்டி கொடுக்கும் காசு , அரசு மானியம் இல்லாது ஒழிவது கொள்முதல் விலை குறைவது இதெல்லாம் சந்தை விதிகளால் ; நீர் கட்டி காப்பாத்த முயலும் பெரு வணிகனால்.(அது ரிலையன்ஸோ , கமிசன் மண்டியோ ,வால்மார்ட்டோ) எல்லாப்பயலும் சுரண்டுவது விவசாயிகளைத்தானே நியாயமாகப்பார்த்தால் நீங்கள் அவர்கள் பக்கம் நிற்கவேண்டும்)
(இதோ சுட்டியை அளித்து இருக்கிறேன் நேரத்துக்கு தகுந்தாற்போல் சில நேரங்களை வியாபாரிகளும் அரசும்
விவசாயிகளை ஏமாற்றுவதாக நீங்களே புதிய ஜனநாயகத்தில் எழுதிய கட்டுரையின் சுட்டியைதந்துள்ளேன்) http://www.vinavu.com/2011/07/14/irunda-kaalam/ (விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும் நெல்லை, வியாபாரிகள் அதிகாரிகள் துணையோடு நேரடி கொள்முதல் விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடிக்கும் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார், விவசாயிகள் விழிப்பு உணர்வு சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன்)
பிராக்டர் அன் கேம்பில் புலம்புகிறானாம் வால்மார்ட்டை பார்த்து பிராக்டர் அன் கேம்பில் என்பது முக்கில் பொட்டி கடை வைத்திருக்கும் அண்ணாச்சியா அவன் ரிலையனசை போன்றவன் இது ஒன்று போதுமே வால்மார்ட் ரிலையன்சுக்குத்தான் போட்டிக்கு வருகிறான் என்பதை புரிண்டு கொள்ள ரிலையன்சு போட்டி இன்றி அடித்து பிடிங்குவதை கேட்க ஆள் இல்லாமல் இருக்கிறான் அவனைபோன்றவந்தான் ஐடிசி அவனுக்கும் ஆப்பு வைக்கவே வால்மார்ட் வருகிறான்னு வச்சிக்கங்க இதை எதிர்ப்பது நேரா ரிலையன்சுக்கு வால்பிடிப்பதே ஆகும் .
அப்புறம் இந்த வால்மார்ட் பூச்சாண்டியை விடுங்க அந்நிய மூலதனம்னாலே வால்மார்ட்டுன்னு சுருங்கிட்டீங்க இந்த வால்மார்டோட சந்தையை காலி பண்ணிட்டு இருக்கான் அமெரிக்காவில் மற்றொரு ரீடெல் கிங்க் எனவே
அமெரிக்காதான் எதிரின்னு சொல்லிகிட்டே இருந்த சிபிஎம் மாதிரி நீங்க பெரிய கம்பெனிதான் எதிரி முதலாளித்துவம் அல்லன்னு சொல்ல ஆரம்பிப்பது திரிபுவாதமே.
சாராம்சம் :
1.100 சதவீதம் அந்நிய மூலதனத்தை ஏற்று கொண்ட சீனாவில்அது நடந்து 10 ஆண்டுக்கு பின்பும் அந்த நாட்டின் மொத்த சில்லறை வணிகம் என்பது இன்னும் 20 சதமானம் மட்டுமே முறைபடுத்தபட்ட வணிகமாக இருப்பது ஏன்
2.உற்பத்தி முதலாளித்துவமாக இருக்கும் போது வினியோகம் முதலாளித்துவமாக இருக்கும் போது அதில் நடக்கும் சுரண்டலை மட்டும் மறைப்பது ஏன்
3.இந்தியாவின் அரசு முதலாளித்துவ வர்க்க சார்புடைய அரசு என்பதை புரிந்து கொண்டால் அது 52 சதவீதம் மட்டுமே அந்நிய முதலீட்டை அனுமதிப்பது ஏன் என்றும் மீதம் 48 சதவீதத்தை அது ந்ரிலையன்சின் கடைக்கன் உத்தரவு க்டைத்தால் மட்டுமே அனுமதிக்கும் என்பதும் புரிந்து கொள்ள என்ன தயக்கம்
4.என்ன இருந்தாலும் சரவணா ஸ்டோரில் வேலை செய்பவன் சொந்த சாதிக்காரணாக இருந்தாலும் அவனுக்கு
வெளிய வந்து கடை ஓணராக வாய்ப்பிருக்கு என சொல்லும் உங்கள் குட்டி பூர்சுவா சிந்தனை எதை காட்டுகிறது ?
(ரிலையன்ஸில் வேலை செய்யும் இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கத்தை பற்றி சிந்தித்துக்கூட பார்க்காத உங்கள்
குட்டி பூர்சுவா மனப்பான்மை அம்பலப்படுவதையும் அம்மணமாக நீங்கள் நிற்பதையும் உணருகிறீர்களா இல்லையா?
5.வால் ஸ்டீரிட் போராட்டகாரர்கள் தங்களின் சமூக பொருளாதார பிரச்சனைக்கு மறந்தும் கூட அமெரிக்க அர்சுதான் காரணம் என சொல்ல மறுப்பதைபோல நீங்களும் விவசாயிகள் பரந்து பட்ட மக்களின் பிரச்சனைக்கு காரணம் இடைத்தரகர்களான வியாபாரிகள் என்பதையும் இந்த அமைப்பு முழுவதும் முதலாளித்துவ அமைப்புதான் என்பதையும் சொல்ல மறுத்து இதை உடைக்க முயலாமல் பகுதியை கட்டிகாக்க முயலுவதேன்
6.நீங்க யார் என்பதும் யாரை காக்க போராடுகிறீர்கள் என்பது புரிகிறதா ? வணிகர்களை காப்பாத்த போராடுகிறீர்கள் அவ்வப்போது விவசயிகளுககாக நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள் சரத்குமாருக்கும் உங்களுக்கும் பெரிசா வேறுபாடு இல்லையே நீங்கள் கம்யூனிஸ்டா ?
7.உங்கள் சிகப்பு அங்கியை கழட்டி விட்டு தமிழ் தேசியவாத கட்சின்னு சொல்லிகொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் . நீங்கள் நேரத்துக்கு தகுந்தாற்போல் முரண்பாடுகளை பேசுவதை விடுத்து பேசாமல் கட்சிக்கு பேரை மாற்றி கொள்ளுங்கள் -தமிழ் தேசிய கட்சி போன்ற பெயர்களை பரிந்துரைக்கிறேன்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================
கேள்விகேட்கப்படவேண்டியவர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் சிபிஎம் போலிகளே ?
1.ஏனென்றால் முல்லை பெரியாறு விசயத்தில் பெரிய அளவுக்கு கேரளாவில் அரசியல் செய்து அதன் மூலம் ஆதாயம் அடைவது இந்த கேரளத்து கம்யூனிஸ்டுகள் தான்
2.இரண்டாவது தமிழ் நாட்டின் நியாயமான உரிமையை பேணி பாதுகாக்கவும் லெனின் முன்வைத்த தேசிய இன்ங்களிடையே பாட்டாளிகளின் ஒற்றுமையை பேணுபதும்தான் கம்யூனிஸ்டுகளின் கடமை
3.அதாவது ஒரு தேசிய இனம் பிரிந்து செல்கிறேன் என்றால் (அது ஒடுக்கும் தேசிய இனம் எனில்)அங்குள்ள பாட்டாளிகள் அதை எதிர்த்து ஒடுக்கப்படும் பாட்டாளிகளுடைய தேசிய இனத்துடன் இருப்பேன் என சொல்லவேண்டும் இவ்வாறு தேசிய இன்ங்களின் ஒன்றுகலத்தல் நிகழ முடியும்
4.பாட்டாளிவர்க்கத்தின் சர்வதேசியம் என்பது இன ஒடுக்கலுக்கு எதிரானது மேலும் பாட்டாளிகள் முன்னேறிய சிந்தனையும் குறுகிய தேசிய நலன்களை விட்டொழித்து சர்வதேசிய வாதிகளாக மாற்றுவதும்தான் ஒரு பாட்டாளிவர்க்க கட்சியின் கடமை
5.இந்த விசயத்தில் தேசிய இனப்பிரச்சனையே எழாத ஒரு விசயத்தை எடுத்து அதை தேசிய இனப்பிரச்சனையாக மாற்றுவதே இந்த சிபிம் (கேரளா) செய்வதுதான் அதை கண்டிக்காமல் இருப்பது மத்திய பொலிட்பீரோவோ கோத்ரெஜ் பீரோவாதான்
6.பேசித்தீர்த்துகனும் பேசித்தீர்த்துகனும் என்பதற்கு இது என்ன தேசிய இனப்பிரச்சனையா தெளிவாக தெரியும் ஒரு காண்டிராக்ட் பிரச்சனை கேரளாவின் அயோக்கியத்தன்ங்களை கண்டுபிடிக்க அமெரிக்காவில் இருந்து லென்ஸ் வாங்க வேண்டியதில்லை
7.முல்லை பெரியாறு அணை கட்டி வீணாக கடலில் கலக்கும் நீரைத்தான் தமிழகத்தின் மக்கள் பயன்படுத்துகிறார்கள் அதுவே தவறுன்னு எந்த கம்யூனிஸ்டாவது பேசுவான அப்படி பேசினால் அவன் கம்யூனிஸ்டா
8.இப்படி எழுதுகிறார்கள் அறிக்கையில் முல்லைபெரியாறில் இருந்து தண்ணீர் பெறும் தமிழ்நாட்டின் உரிமை பாதுகாக்க படனும் அதே வேளையில் கேரளாவின் மக்களின் உயிரும் பாதுகாக்கப்படனும் இதான் மிகப்பெரிய அயோக்கியதனம் அந்த அறிக்கை எப்படி இருக்கனும்
தமிழ் நாட்டு மக்களின் தண்ணீர் பெறும் உரிமை பாதுக்காக்கபட கேரளாவில் நடக்கும் பாதுகாப்பு பற்றி பீதி நிறுத்தப்படனும் என வரவேண்டும்
//
The Mullaperiyar Dam problem is creating tensions between the states of Kerala and Tamilnadu.
Communist Party of India appeals to Prime Minister to use his good offices and call a meeting of Chief Ministers of two states and take political decision to settle the issue.
The supply of water for irrigation to Tamilnadu should be guaranteed by the Government of Kerala and Union Government as earlier. The century old arrangement should continue.
The apprehensions of the people of Kerala about the safety of the 116-year-old dam should be taken into active consideration.
This issue need not become a controversy with agitations and counter agitations. The Communist Party of India appeals to the people of both states, to restrain themselves, and create an atmosphere for settlement through discussions.
CPI also appeals to the Supreme Court of India to expedite its enquiry and decide the pending case before it as early as possible.
Pasted from <http://www.communistparty.in/>
//
9.இப்ப தமிழ் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு நல்ல மனுசனும் செய்ய வேண்டியது தமிழ் நாட்டில் இருக்கும் சிபிஎம் அலுவலகத்துக்கு முன்ன போய் ஓட்டுக்காக தமிழ்நாட்டை காட்டி கொடுக்காதே உண்மையானதை பேசு நீ ஒரு கம்யூனிஸ்டா இருந்தான்னு சொல்லனும்
அதான் சரியானது
----------------------------------------------------------------
ஒரு நண்பரின் மடல் குழுமத்துக்கு வந்த்து அதை எடுத்து இடுகிறேன்
முல்லை பெரியாறு அணை விவகாரம் என்பது ஒரு விவகாரமே அல்ல ஆனால் விவாகரம் ஆக்கப்படுகிறது யாரால் கேரளாவால்
முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டைபைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேசவைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.
மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில்
கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் !
"116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும்எவ்வளவு நாள் தாங்கும் ?
தங்கள் இடத்திலேயே -தங்கள் செலவிலேயே -புதிய அணையைக் கட்டி,
தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக்கொடுக்கிறோம் என்கிறார்களே.
இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ?
இது என்ன பைத்தியக்காரத்தனம் ?"
இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.கேரளா இதுவரை செய்த அநியாயங்கள்,புதிய அணை கட்டி இனி செய்யஉத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் -
இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட,படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !
புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களேஎன்று தமிழர்களே கேட்கிறார்கள்.தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும்
தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான்சொல்ல வேண்டும். இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.
புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில்எடுத்துச் சொல்ல வேண்டும்.
இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக -நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக
கீழே தருகிறேன்.
முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல்.
அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான் இருந்தது) எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்குரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல்கட்டி முடித்தனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது
தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !
இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் –
சுமார் 2,08,000 ஏக்கர். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும்
இந்த அணையை நம்பி இருக்கிறார்கள். இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும் பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.
பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?
கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்
மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.
பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும்.
(104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)
ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி.
பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம் நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி நிரம்பவே இல்லை.
அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் -பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற
குரல் -கூக்குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும். அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !
புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ? மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.
சரி நிரம்பட்டுமே. நல்லது தானே ! அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.
அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.
புதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது. நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள - மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது. அணையைக் கட்டிய பிறகு, இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது.
மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக
கிடைக்காது.
புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை - புரிகிறது.
ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை - எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும். 35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே -பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?
அயோக்கியத்தனம்.
வடிகட்டிய அயோக்கியத்தனம்.
முதலாவதாக - பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் -மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து - நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும்.
பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவுஉடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.
வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்என்கிற பேச்சே அபத்தமானது.
இரண்டாவதாக -
1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது
என்று குரல் எழுப்பினார்கள். பயத்தைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள். 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.
கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்
உள் செலுத்தப்பட்டது.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு - நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி -
லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக - ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது.
கீழே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும்.
Mullai.jpg
இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு -156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது.
விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக,
கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள்.
வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.
மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின்
பரிசீலனையில் இருக்கும்போதே - தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை
கட்ட வேண்டும் என்று.
பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக் கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம்
இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.
தமிழ் நாடு ஏமாந்தது போதும்.
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

