சில்லறை வணிகத்தில் பன்னாட்டு மூலதனம் குறித்த விவாதத்தில் வினவும் அதன் அல்லகைகளும் சில முக்கியமான பகுதிகளை தவறாக திரிக்கிறார்கள் இது ஒட்டுமொத்த கம்யூனிச அரசியலுக்கும் விரோதமானது
அதென்னவென்றால் சிறிய வணிகனின் மூலதனத்தை காப்பாற்ற பெரு வணிக நிறுவனங்களை எதிர்க்கனும் என்பது அவர்கள் வைக்கும் வாதம் இது மார்க்சியமா
இந்த வாதத்தின் ஊடே அவர்கள் கொண்டு வந்த முக்கிய கருத்துக்கள் (?)
1.வால்மார்ட் சின்ன வணிகனை ஒழித்து விடுவான்
அவனுக்கு போட்டியே சின்ன வணிகன் தான் என்பது
இதற்கு நமது பதில்
1.1. வால்மார்ட்டுக்கு போட்டி இங்கே இருக்கும் பெருவணிகனே என்பதும் அந்த பெருவணிகனின் சுரண்டலை சுரண்டல் என ஏன் சொல்ல கூடாது என்பதும் நமது பதில் இதன் மூலம் இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் பெருவணிக நிறுவனங்களுடன் வால்மார்ட் போட்டி போடுவதை சொல்லாமல் ஏமாற்றும் பிற்போக்கு தனத்தை எதிர்த்தோம் .
2.இதன் மூலம் நீங்கள் வால்மார்ட்டை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு :
வால்மார்ட்டு ஒரு முதலாளித்துவ நிறுவனம் என்பதால் அது எல்லா முதலாளிகளும் செய்யும் மொள்ளமாறித்தனம் அனைத்தையும் செய்யும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை ஆனால் அதே மொள்ள மாறித்தனத்தை சுரண்டலை இங்கிருக்கும் அண்ணாச்சிகளும் செய்வார்கள் செய்கிறார்கள் இல்லையென மறுக்க முடியுமா ?
இப்போது வால்மார்ட்டையா உள்நாட்டு முதலாளியையா அண்ணாச்சி கமிசன் மண்டிகளையா யாரை ஆதரிக்கிறீர்கள் ஏன் ஆதரிக்கிறீர்கள் என அவர்களை கேட்டால் அவர்கள் வால்மார்ட்டை மட்டும் எதிர்கிறார்கள்
எங்களை கேட்டால் அனைத்துமே முதலாளித்துவ நிருவனங்கள் அதற்கே உரிய சுரண்டல் பாதையில் செல்லும் ஆகவே ஒட்டுமொத்தமாக இந்த முதலாளித்துவ அமைப்பை எதிர்ப்பதே சரியானது
3.வினவுக்கு எதிர்கட்டுரை போடுவதற்கான விளக்கமும் விவாதமும்தான் நான் செய்கிறேன் என்பது சரியா?
இல்லை வினவு ஒரு கட்டத்தில் ரிலையன்ஸை எதிர்க்கிறோம் என அந்த நிறுவனம் உள்ளே வரும்போது சொன்னது சில போராட்டங்களை செய்தது ஆனால் ரிலையன்ஸ் வந்தபிறகு எந்த போராட்டமும் நடக்கவில்லை தொடர்ச்சியாக செய்யவில்லை மாறாக ஒரு புதுபடம் வரும்போது அதற்கு தோரணம் கட்டும் ரசிகனின் மனப்பான்மையை விட்டு கொஞ்சமும் மாறாமல் பெருமூலதன எதிர்ப்பை சம்பரதாயமாக செய்துவிட்டு மற்ற வேலைகளை செய்வதும் அப்போது
குட்டி முதலாளி நல்லவன் அவன் உழைக்கிறான் எனவே சுரண்டுகிறான் என்பன போன்ற எதிர்புரட்சி சவடால்களை விடுவதும் என செயல்படும் அரசியல் ஓட்டாண்டி தனத்தை கண்டிக்கவே தொடர்ச்சியாக நாம் இயங்க வேண்டியதாக உள்ளது
மேலும் இந்த செயல்முறையின் ஊடே மார்க்சியத்தை தனக்கு தகுந்தமாதிரி திரிக்கிறது அதாவது சின்ன முதலாளி நல்லவன் அவன் கடையில் வேலைபார்ப்பவன் சுரண்டப்பட்டாலும் அவனுக்கு முதலாளியாகும் வாய்ப்பு இருக்கு என சொல்லி மக்களுக்கு முதலாளித்துவ பாதையை காட்டுகிறது
இது எதிர்புரட்சியாகும் முதலாளித்துவம் என்பதை தீர்மானிப்பது முதலாளித்துவ உற்பத்தி வினொயோகமுறையே தவிர அதன் அளவுகள் கிடையாது
மொத்தமாக முதலாளித்துவத்தை ஒழிக்காமல் பெரிய முதலாளியை மட்டும் ஒழிக்க இயலாது மேலும்
சுரண்டலுக்கு உள்ளாகும் பாட்டாளிகளுக்கு முதலாளித்துவ கனவை விதைப்பது மிக தவறான செயலாகும்
சிறிய வணிகன் புரட்சிகரமான வர்க்கமா என்பது குறித்து :
சிறிய வணிகன் அழிவதை பற்றி அது முதலாளித்துவ விதி என்றால் இல்லை அப்படி சொல்வது பாசிசம் என்றும் எனவே சிறு வணிகனை தாங்களே காப்பாத்த போவதாகவும் சொல்கிறார்கள் இவர்களை குறித்து மார்க்ஸ் என்ன சொல்கிறார் கம்யுனிஸ்டு கட்ட்சி அறிக்கையில்
----------------
மார்க்ஸ் இவரைப் போன்றவர்களைத்தான் "இவர்கள் பிற்போக்கானவர்களும் கூட, ஏனெனில் வரலாற்றின் சக்கரத்தை இவர்கள் பின்னோக்கி உருளச் செய்யமுயலுகிறார்கள்." என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சாடுறாரு,சிறு உற்பத்தியாளர்கள், கடைக்காரர்கள்,பற்றி மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சொல்வது இதுதான்:
----------------------------
"மத்தியதர வர்க்கத்தின் கீழ்த் தட்டுகளைச் சேர்ந்த சிறு உற்பத்தியாளர்கள், கடைக்காரர்கள், சிறு வாடகை, வட்டி வருவாயினர், கைவினைஞர்கள், விவசாயிகள் ஆகிய எல்லோரும் சிறிது சிறிதாய்த் தாழ்வுற்று பாட்டாளி வர்க்கத்தை வந்தடைகிறார்கள். காரணம் என்னவெனில், முதலாவதாக அவர்களிடமுள்ள சொற்ப அளவு மூலதனம் நவீனத் தொழிலின் வீச்சுக்கும் போதாமல் பெரிய முதலாளிகளுடைய போட்டிக்குப் பலியாகிவிடுகிறது, இரண்டாவதாக அவர்களுடைய தனித் தேர்ச்சியானது பொருளுற்பத்தியின் புதிய முறைகளால் மதிப்பற்றதாக்கப்படுகிறது. இவ்விதம் தேச மக்கள் தொகுதியைச் சேர்ந்த எல்லா வர்க்கங்களிடமிருந்தும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆட்கள் திரட்டப்படுகிறார்கள்."
---------------------------
"இன்று முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் எல்லா வர்க்கங்களிலும் பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் மெய்யாகவே புரட்சிகரமான வர்க்கமாகும். ஏனைய வர்க்கங்கள் நவீனத் தொழிலினது வளர்ச்சியின் முன்னால் நலிவுற்றுச் சிதைந்து முடிவில் மறைந்து போகின்றது, பாட்டாளி வர்க்கம் மட்டும் தான் நவீனத் தொழிலுக்கே உரித்தான அதன் நேரடி விளைவாய் அமைகிறது."
----------------------------------
"மத்தியதர வர்க்கத்தின் கீழ்ப் பகுதிகளாகிய சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் எல்லாரும் தொடர்ந்து தாம் மத்தியதர வகுப்பினராய் நீடித்திருப்பதற்காக முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆகவே இவர்கள் பழமைப் பற்றாளர்களே அன்றி புரட்சித்தன்மை வாய்ந்தோரல்லர். அது மட்டுமல்ல, இவர்கள் பிற்போக்கானவர்களும் கூட, ஏனெனில் வரலாற்றின் சக்கரத்தை இவர்கள் பின்னோக்கி உருளச் செய்யமுயலுகிறார்கள். சந்தர்ப்பவசமாய்ப் புரட்சிகரமாய் இருப்பார்களாயின், இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குப் போய்விடும் தறுவாயில் இருக்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம், இவ்வாறு இவர்கள் பாதுகாப்பது தமது எதிர்கால நலன்களையே அன்றி நிகழ்கால நலன்களை அல்ல"
---------------------------
ஆகவே மார்க்சியத்துக்கு அப்பாற்பட்டு சிறுவணிகனின் அழிவை நாம் சொல்லவில்லை என்றும் மூலதன போட்டி ஓயாமல் நடைபெற்று வருகிறது தினம் தோறும் ஏன் நொடிதோறும் சிறுவணிகன் அழிவும் பெருவணிகன் தோற்றமும் நடந்து கொண்டே இருக்கிறது என்கிறோம்
கம்யூனிஸ்டுகளின் கடமை என்ன :
மூலதனத்தை காப்பாத்த போராடுவதும் முதலாளிகள் உருவாக வாய்ப்பு இருக்குன்னு பேசுவதும் கம்யூனிஸ்டுகளின் க்டமை இல்லைன்னு ஒரு வரியில் சொல்லலாம் மாறாக அனைத்து முதலாளித்துவ நிருவன அமைப்புகளிலும் உருவாகும் பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டுவது தலையாய கடமையாக ஒரு கம்யூனிஸ்டு கொண்டிருக்க முடியும்
வால்மார்டு பற்றிய தனிபெரும் கண்டுபிடிப்பு :
வால்மார்ட் உற்பத்தியை கட்டு படுத்துகிறான் என்கிறார்கள் இதை நமது உள்ளூர் ஆரோக்கியா பால்காரனே செய்கிறான் மாடு வாங்கி தந்து விவசாயிக்கு மாட்டு தீவன விதையும் வாங்கி தந்து அதை விதைச்சு அறுக்க சொல்கிறான் இது எந்த வர்க்கத்துக்கான விவசாயம்
இதைத்தான் வால்மார்ட் பெரிய அளாவில் செய்கிறான் அதை தவறு என்றும் உள்ளூர்காரன் செய்வது சரி என்றும் சொல்வது எந்தவகை மார்க்சியம்
மேலும் அவர்களிடம் இருந்து பதில்வராத பல கேள்விகள் இருக்கு அதன் பட்டியல் இதோ:
பதில் வராத கேள்விகள்
1.உற்பத்தி முதலாளித்துவமாக இருக்கும் போது வினியோகம் முதலாளித்துவமாக இருக்கும் போது அதில் நடக்கும் சுரண்டலை மட்டும் மறைப்பது ஏன்
2.இந்தியாவின் அரசு முதலாளித்துவ வர்க்க சார்புடைய அரசு என்பதை புரிந்து கொண்டால் அது 52 சதவீதம் மட்டுமே அந்நிய முதலீட்டை அனுமதிப்பது ஏன் என்றும் மீதம் 48 சதவீதத்தை அது ந்ரிலையன்சின் கடைக்கன் உத்தரவு க்டைத்தால் மட்டுமே அனுமதிக்கும் என்பதும் புரிந்து கொள்ள என்ன தயக்கம்
3.வால் ஸ்டீரிட் போராட்டகாரர்கள் தங்களின் சமூக பொருளாதார பிரச்சனைக்கு மறந்தும் கூட அமெரிக்க அர்சுதான் காரணம் என சொல்ல மறுப்பதைபோல நீங்களும் விவசாயிகள் பரந்து பட்ட மக்களின் பிரச்சனைக்கு காரணம் இடைத்தரகர்களான வியாபாரிகள் என்பதையும் இந்த அமைப்பு முழுவதும் முதலாளித்துவ அமைப்புதான் என்பதையும் சொல்ல மறுத்து இதை உடைக்க முயலாமல் பகுதியை கட்டிகாக்க முயலுவதேன்
4.நீங்க யார் என்பதும் யாரை காக்க போராடுகிறீர்கள் என்பது புரிகிறதா ? வணிகர்களை காப்பாத்த போராடுகிறீர்கள் அவ்வப்போது விவசயிகளுககாக நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள் சரத்குமாருக்கும் உங்களுக்கும் பெரிசா வேறுபாடு இல்லையே நீங்கள் கம்யூனிஸ்டா
*மேலும் இந்திய முதலாளிகளில் நேசசக்தி என அழைக்கும் நீங்க எந்தமாதிரி கம்பெனியெல்லாம் நேசசக்தி எதெல்லாம் எதிரி சக்தின்னு சொல்லிட்டீங்கன்னா விளங்கி கொள்ள ஏதுவாக இருக்கும்
ஏன்னா ருசி ஊறுகாய் காரன் வெளிநாட்டில் இடங்களை வளைத்து போடுவதும் இந்தியாவில் பல கம்பெனிகள் அந்நிய நாட்டில் சுரண்டுவதும் நடப்பதை பற்றிய தங்களின் மேலான கருத்து என்ன
----------------
ஆக தனது அரசியல் ஓட்டாண்டி தனத்தில் எத்தனை நாள் பதுங்கி கொண்டு இருந்தாலும் ஒருநாள் வெளியே வந்துதான் ஆகனும் இவர்கள்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================


முதல் நான்கு பத்திகள் உங்கள் பழைய நிலையை கட்டிக் காப்பாற்ற முயற்சி செய்வது போல் இருந்தாலும், ஐந்தாவது பத்தியில் இருந்து ஒரு உறுதியான நிலைப்பாடு தென் படுகிறது.. ஆனால் இன்னும் மளிகைக் கடை வியாபாரி என்பவன் இடைத் தரகன் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அவன் உற்பத்தியாளனின் விற்பனை பிரதிநிதி என்று பார்க்க வேண்டும்.. என்று தோழர் வவ்வால் கூறுவதை ஆமோதிக்கிறேன்...
//னால் இன்னும் மளிகைக் கடை வியாபாரி என்பவன் இடைத் தரகன் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..//
தோழர் ஜீவா,
வியாபாரிகளை பற்றி மார்க்ஸ் என்ன சொல்லி இருக்கிறாரோ அதை போட்டுள்ளேன் நீங்கள் அதை மறுப்பதாக இருந்தால் மார்க்சிய வழியில் மறுக்கலாமே வவ்வால் அவர்களின் வழியை விடுத்து
பதில் கூறியதற்கு நன்றி... மார்க்ஸ் அப்படி சொல்லி இருக்கிறார் என்று இன்று தான் தெரியும்... எந்த கட்டுரையில் சொல்லி இருக்கிறார் என்று கூற முடியுமா? மேலும் மூலதனத்தை எதிர்ப்பது கம்யூனிஸ்ட் வேலை என்று சொல்கிறீர்கள்... அது குறித்தும் யோசிக்க யோசிக்க குழப்பமாக இருக்கிறது.. மூலதனத்தை எதிர்ப்பது கம்யூனிஸ்ட் வேலை என்று எந்த கட்டுரையில் கூறி இருக்கிறார் என்றும் கூறி விடுங்கள்... நானும் இணையத்தில் கிடைக்கிறதா என்று தேடுகிறேன்
http://tamililmarxism.blogspot.com/2010/02/1_07.html
இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சிஅறிக்கை மொழிபெயர்ப்பு http://marxists.org/tamil/marx/1848/communist-manifesto/ch01.htm
தல,
ரொம்ப வேகமா போறிங்க , உங்க வேகத்துக்கு என்னால பின்னூட்டம் போடக்கூட முடியவில்லை! -))
இந்த சமாச்சாரத்தில எல்லாப்பதிவிலும் நிறைய ரிபீட் ஆவதாலேயே பதிவோ, பின்னூட்டமோ அதிகம் போடலை.
---------------------
//விவசாய பொருளை கொள்முத்ல், சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் இடை/தரகர் எல்லாம் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள்.
சிறிய சில்லரை வியாபாரி பெரு வியாபாரியின் விற்பனைப்பிரதிநிதி எனப்பார்த்தால் உண்மை விளங்கும் சூர்யா.//
தல ,
நான் "பெருவணிகனின் விற்ப்பனைப்பிரதிநிதி" என்றே சொல்லி இருப்பதை, தோழர் சூர்யா வழக்கம்போல வார்த்தை விளையாட்டு ஆடி உற்பத்தியாளனின் விற்பனைப்பிரதிநிதியாக மாற்றிவிட்டார்,
இதுப்பார்த்தா சாதாரணமாக தெரியும் ஆனால் நான் சொல்லி இருப்பது சிறு வியாபாரி ஒரு இடைத்தரகர் என பொருள் வரும், சூர்யா சொல்லி இருப்பது வியாபாரி என மாற்றி காட்டும்.
---------------------------------------------
சூர்யா,
அந்தப்பதிவிலேபார்த்தேன் நீங்க உங்க வசதிக்கு மாற்றி சொல்லி இருந்தீர்கள், மீண்டும் மீண்டும் விளக்கி வம்படியாக பேசிக்கொண்டிருக்க வேண்டாம் என எதுவும் சொல்லவில்லை.
ஆனால் இந்தபதிவிலும் தவறான பொருளில் நான் சொன்னது உதாரணப்படுத்தப்படுவதால் எனது மறுப்பை பதிவு செய்கிறேன்.
உற்பத்தியாளனுக்கும், நுகர்வோருக்கும் இடையில் யார் இருந்தாலும் இடைத்தரகர்/ தரகர் தான்!அல்லது ஆங்கிலத்தில்" middle man" என சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களாகயிருக்கும்!
இப்படி கை மாறி செல்வதை" value chain process" என்பார்கள், இங்கே உற்பத்தியான இடத்தில் இருந்தது இறுதி நுகர்வுக்கு இடம் மாறி செல்லும் போது அப்படியே போனாலும் போகலாம் அல்லது பொருளின் மீது ஏதேனும் பண்படுத்துதல் ஏற்பட்டாலும் ஏற்படலாம். எப்படி இருப்பினும் இந்த சங்கிலித்தொடரில் எத்தனை கண்ணிகள்= மிடில் மேன் இருக்கோ அதற்கு ஏற்ப விலை ஏறும்.
//நடுத்தர வர்க்கத்தின் கீழ்த்தட்டுகளைச் சேர்ந்தவர்களான சிறிய வணிகர்கள், கடைக்காரர்கள், பொதுவாகப் பரந்த வணிகத் தொடர்புகளின்றிக் குறுகிய அளவில் வணிகம் செய்வோர், கைவினைஞர்கள், விவசாயிகள் இவர்கள் அனைவரும் படிப்படியாகத் தாழ்வுற்றுப் பாட்டாளி வர்க்கத்தில் கலந்துவிடுகின்றனர். //
//அடித்தட்டு நடுத்தர வர்க்கத்தினர், சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் அனைவரும், நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாகத் தம் இருப்பை அழிவிலிருந்து காத்துக்கொள்ள முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள//
//இவர்கள் ஏதோ தற்செயலாகப் புரட்சிகரமாக இருக்கிறார்கள் எனில், அவ்வாறு இருப்பதற்கு இவர்கள் பாட்டாளி வர்க்கமாக மாறிவிடும் தறுவாயில் உள்ளனர் என்பது மட்டுமே காரணம் ஆகும்//
நீங்கள் கொடுத்துள்ள சுட்டி படி உள்ள தகவல்கள்... மேலும் படித்துக் கொண்டிருக்கிறேன்...
தோழர் வவ்வால்,,,
நான் என் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவே கேள்வி கேட்கிறேன்... வார்த்தை விளையாட்டு எனக்கு தேவை இல்லை.. அறிவு ஜீவி என்றும் நினைக்கவில்லை... கசடற கற்க ஆசை.. தியாகு சார் கொடுத்த சுட்டிகளை படித்துக் கொண்டிருக்கிறேன்... படித்து முடித்து விட்டு என் கருத்தினை முன் வைக்கிறேன்
விவாதகன்:(பகுதி 1)
உங்கள் கட்டுரைகள் அனைத்தும் ஒரு விசயத்தை பதியவைக்காமல் சென்றுகொண்டிருக்கிறது. அவை அந்நிய முதலீடு என்பது நேரடி அந்நிய நிறுவனங்கள் உள்நாட்டில் நுழைவது. உள்நாட்டில் மிகப்பெரிய நிறுவனங்கள் ரிலையன்ஸ் பிரஷ் போன்றவை தரகு முதலாளித்துவ அடிப்படையிலானது. இவை ஏற்பதா இல்லை மறுப்பதா என்பதே கேள்வி.
இங்கு ரிலையன்ஸ், டாட்டா போன்ற குழுமங்களை வெறும் பெரும் நிறுவனங்களாக பார்ப்பதுதான் உங்கள் குழப்பத்திற்கு காரணம். இது தரகு முதலாளித்துவ கும்பல். ஆனால் அண்ணாச்சி மளிகை கடைக்கும், சரவணா ஸ்டோருக்கும், ஜெயசந்திரன் போன்ற வியாபார நிறுவனங்கள் எல்லாம் இந்த நாட்டின் உற்பத்தியை பெரும்பாலும் சார்ந்து இருக்கும். அதிலும் ஊருக்கு ஊர் நூற்றுக்கணக்கான அண்ணாச்சி மளிகை கடைகள் எல்லாம் நேரடியாக உற்பத்தியை சார்ந்து இருக்கிறது.
இப்போது விசயத்துக்கு வருவோம். சுரண்டல் என்று எப்போதும் மார்க்சியம் பொதுவாக பேசுவது இல்லை. புராதன சமுதாயத்தை விட அடிமை சமுதாயம் சுரண்டலின் மொத்த கோர வடிவத்தை வைத்திருக்கிறது. ஆனால் அதற்கு பிந்தைய சமுதாயத்தை பார்க்கும்போது அது முற்போக்கானது. அதே போல் அடிமை சமுதாயத்தை விட பண்ணையடிமை சமுதாயம் வரலாற்றில் முற்போக்கானது. பண்ணையடிமை சமுதாயத்தை விட முதலாளித்துவ சமுதாயம் முற்போக்கானது. இதிலிருந்துதான் அனைத்து மக்களுக்கான சோசலிச சமுதாயம் உதிக்கிறது. இந்த படிநிலை வளர்ச்சியை மறுத்துவிட்டு வெறுமென சுரண்டல் என்று பேசுவது அபத்தம். அது கற்பனாவாத சோசலிசத்தையே குறிக்கும். வரலாற்றில் அப்படிப்பட்ட அறிஞர்கள் ஏராளம்.
நாம் இங்கு எப்படி கம்யூனிச சமுதாயத்தை இறுதி இலக்காக தற்போது உருவாக்குவது பற்றியதே. இந்த சமுதாயத்தை வரையறுப்பதிலேயே நம்முடைய சிக்கல் இருக்கிறது.
இந்தியாவில் மிகவும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்புவரை பெரும்பான்மையாக விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்தோம். பிறகு அரைகுறையான முதலாளித்துவ வளர்ச்சி (நமக்கான தேவையிலிருந்தோ அல்லது அடிப்படை கட்டுமானத்திலோ அல்ல) வளர்ந்தது. ஆனால் இன்னும்கூட பெரும்பான்மையாக விவசாயத்தை நம்பியே இன்னும் இந்தியா பெருமளவில் இருக்கிறது. தொழில் துறை வளர்ப்பது என்பதின் பேரால் இன்று விவசாயம் இல்லாதொழிக்கப்பட்டு அவர்களை தொழில்துறையிலும் பதிலீடு செய்யாமல், அவர்களை நாடோடிகளாக்கியதே இன்றைய இந்தியாவின் நிலை. குறிப்பாக தமிழ்நாட்டின் நிலையும் கூட. இங்கு முற்றாக பண்ணையடிமைத் தனத்தை தூக்கியெறிந்து ஒரு முதலாளித்துவ அரசை நிறுவவில்லை. பிரிட்டிஷ் காரன் கைமாற்றி விட்டதையே நாம் சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டோம். அதைவிட மோசம் எந்தவித அடிப்படை மாற்றத்திற்கான மாற்றம் இல்லாமலேயே இங்கு பண்ணையடிமை ஒழிந்துவிட்டதாக கூறிக்கொண்டோம்.
விவாதகன்: (பகுதி 2)
எப்போது இங்கு அந்நிய மூலதனத்தை வெளியேற்றினோம் என்பதை கூற முடியுமா. நிச்சயமாக கூற முடியாது. ஏனென்றால் எந்த அந்நிய முதலீடும் பிரிட்டன் எடுத்துச் செல்லவில்லை. அவையெல்லாம் இங்கேயே இருந்தது. அதற்குமேல் மற்ற ஏகாதிபத்தியங்களது முதலீடு வந்து சேர்ந்து இந்தியாவை பல்வேறு நாடுகளது அரைகாலனியாக மாற்றியதுதான் மிச்சம். இன்று உலகமயமாக்கலுக்கு பிறகு இதை நவீன காலனியாக புதிய காலனியாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது விசயத்துக்கு வருவோம். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு வருவது அரைகுறையான நிலையும் போய் முழுவது ஒரு நாட்டின் புதிய காலனியாக மாற்றுவதை நாட்டினை முழுவதுமாக அந்நியருக்கு விட்டுவிடுவதையே நிலைநிறுத்து. இதை எதிர்த்துப் போராடுவது ஏற்கெனவே இருக்கும் தரகுமுதலாளித்துவ கும்பலை காப்பாற்றுவது அல்ல, அவற்றையும் தூக்கியெறிய வலியுறுத்தவே ஆகும். அந்நியர்களை துரத்தியடிக்க கற்றுக்கொடுக்காமல் இங்குள்ள தரகுமுதலாளித்துவ கும்பலை தூக்கியடிக்க, ஒழிக்க கற்றுக்கொடுக்க முடியாது. அவை இல்லாமல் இங்குள்ள நிலப்பிரபுத்துவ கும்பல், ஆன்மீக நிலப்பிரபுத்துவ கும்பலான மடாதிபதிகளை ஒழித்து ஒரு ஜனநாயக அரசை நிறுவ முடியாது.
ஒரு முதலாளித்துவ அரசில், ஒரு சுதந்திர அரசில் சுரண்டலை ஒழித்து சோசலிசத்திற்கு போவது எவ்வாறு என்பது வேறு விசயம். ஆனால் இன்றுள்ள பிரச்சினை அந்நிய ஆதிக்கத்தை ஒழித்து ஒரு இறையாண்மையுள்ள சுதந்திர அரசை எப்படி நிறுவுவது என்பது, பண்ணையடிமைத் தனத்தை ஒழித்து ஒரு ஜனநாயக அரசை எப்படி அமைப்பது என்பதும்தான். கம்யூனிஸ்டுகள் எப்போது தேசத்தை மறுப்பவர்கள் அல்ல. எல்லா ஒடுக்கப்பட்ட தேசங்கள் விடுதலையடைவதை பற்றிமட்டுமே கவலை கொண்டுள்ளது.
ஒன்றை பற்றி பேசினால் அதற்காக மற்றொன்றுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்று கற்பனையாக விமர்சிக்க வேண்டாம். விமர்ச்சிக்க எத்தனையோ அரசியல் விசயங்கள் இருக்கிறது. இல்லாத ஒன்றை பிடித்து விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள்.
இங்கு பல்வேறு வர்க்கள் இருக்கிறது. ஒரு சில குறிப்பிட்ட காலம் வரையில் புரட்சிகர வர்க்கமாக வந்து நிற்கும். அதுவும் எல்லா காலக் கட்டங்களிலும் அல்ல. ஒரு அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கு இந்த வணிகர்கள் வந்து நிற்கலாம். அதே போல் சில அரிதான நேரங்களில் நிலபிரபுக்களும் கூட வந்து நிற்பார்கள். எடுத்துக்காட்டாக, வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் ஒரு மன்னர் ஆனால் ஏகாதிபத்திய எதிர்ப்பில் நிற்கவில்லையா. திப்பு சுல்தான் வந்து நிற்கவில்லையா. ஆனால் இது கூட விதிவிலக்காகவே. ஆகவே எந்த வர்க்கம் எந்த விசயத்திற்காக நிற்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மாவோ ஷேங் கே ஷேக் கூட்டினை ஞாபகப் படுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இவையெல்லாம் விதிவிலக்கு என்ற அளவில் மட்டுமே ஒரு செயல்தந்திரம் என்று மட்டுமே நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு முதலாளித்துவ சமுதாயத்தை படைக்கும் வரையில் அதாவது, அனைத்து தொழில்துறையினையும் அரசுடமையாக்கும் வரையில் (இவையும் முதலாளித்துவ முறையே) பாட்டாளிவர்க்க தலைமையில் செய்ய முற்பட வேண்டுமே தவிர, சிறு உடமையாளர்களை, வணிகர்களை, சுதேசிய முதலாளிகளை, பணக்கார விவசாயிகளை, சிறு நில உடமையாளர்களை, குட்டி முதலாளிகளை ஆகிய அனைவரும் புரட்சிக்கு நாட்டின் அந்நிய ஆதிக்கத்திலிருந்து முழுதும் விடுபடுவதற்கு, தேசிய இன சுயநிர்ணய உரிமையை அடைவதற்கு, பழைய முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறையை ஒழித்து ஒரு முதலாளித்துவ உற்பத்தி முறையை சுதேசியமான முதலாளித்துவ உற்பத்தி முறையை உத்தரவாதப் படுத்தவும், ஜனநாயகப் படுத்தவும் அணிதிரட்டவது இன்று அவசிய அவசரமாகிறது.
அடிப்படையில் உள்ள விசயங்களுக்கு விவாதத்தை செய்யுங்கள் தீர்வு கிடைக்கும். அதை விடுத்து வார்த்தை போரில் இறங்காதீர்கள். அடிப்படையில் எந்த வர்க்கத்திற்கானது எந்த வர்க்கத்திற்கு நாம் நிற்பது என்பதை வலியுறுத்துங்கள். பாட்டாளிகளை தவிர வேறு யாரை பற்றியும் கவலை இல்லை என்ற கருத்து எங்கும் பரவிக்கிடக்கிறது. ஆனால் அதற்கான சமூக வளர்ச்சியை உருவாக்குவது அவசியம். அப்போதே சோசலிசத்தைப் படைக்க முடியும். மீண்டும் மாவோவின் கட்டுரைகளை படிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக புதிய ஜனநாயகம் என்ற கட்டுரையை படிக்க வேண்டியுள்ளது. இது மிகவும் அடிப்படையானது. தொடரும்...
விவாதகன் :
நீங்கள் சொன்ன ஒரு விசயம் அவர்களின் வார்த்தையை பிடித்து தொங்கி விவாதம் நடத்துகிறேன் என்பதாகும்
அடிப்படை பிரச்சனைகளை பற்றிய கேள்வி எழுப்பினால் வசவல் இறங்கும் அவர்களுடன் இப்படித்தான் விவாதிக்க வேண்டிய நிர்பந்தம் அதான் இப்படி
மற்றபடி உங்கள் கமெண்டில் புதியஜனநாயக புரட்சிதான் சரி என பேசுகிறீர்கள்
எனது கேள்வி இதுதான்
விவசாயம் முதலளித்துவ உற்பத்திக்கு மாறிய பிறகு
முத்லாளித்துவ சங்கிலியில் இடைத்தரகர்களாக இருக்கும் சிறு , பெரு முதலாளிகளை எந்த அடிப்படையில் ஆதரிப்பீர்கள்
புரட்சியில் யார் உங்களுடைய நட்பு சக்தி
சிறு கடைக்காரர்களும் சிறு முதலாளிகளும் நட்பு சக்தி என்றால் அவர்கள் விவசாயிகளை தற்போது சுரண்டி வருவது குறித்து உங்கள் கருத்தென்ன
//இங்கு ரிலையன்ஸ், டாட்டா போன்ற குழுமங்களை வெறும் பெரும் நிறுவனங்களாக பார்ப்பதுதான் உங்கள் குழப்பத்திற்கு காரணம். இது தரகு முதலாளித்துவ கும்பல்//
விவாதகன் இந்த தரகு முதலாளின்னா எப்படி வரையறை செய்றீங்கன்னு சொல்லிட்ட மேற்கொண்டு விசயங்களை பேச ஏதுவாக இருக்கும்